Author: Editor web4

வேலூர் மாவட்டம் விருதம்பட்டு அடுத்த காளியம்மன் தோப்பு பகுதியில் அண்ணா நகர் தெருவில் நிற்கவைக்கப்பட்டு இருந்த விலை உயர்ந்து இரு சக்கர வாகனத்தை அதிகாலை 3 மணி அளவில் இரண்டு இளைஞர்கள் முகத்தை கருப்பு துணியால் மறைத்துக் கொண்டு வாகனத்தின் பூட்டை உடைத்து திருட முன்றனர். பின்னர் அவர்கள் வைத்திருந்த சாவியை போட்டு வாகனத்தை திறக்க முயன்றனர் அப்போது திறக்க முடியவில்லை என்பதால் அருகில் இருந்த மற்றொரு இளைஞர் செல்போன் டார்ச் லைட்டை இயக்கினா்அதன் வெளிச்சத்தில் திறக்க மீண்டும் முயன்றனர். அப்போது அப்பகுதியில் பொதுமக்கள் யாரோ ஒருவர் சத்தம் கேட்டு அங்கு வர அங்கிருந்து இரண்டு பேரும் மெதுவாக நடந்து சென்றனர். அங்கு வந்த பொதுமக்களில் ஒருவர் அவர்களை நிற்கும்படி கூறியும் நிற்காமல் வேகமாக நடந்து சென்றனர். அப்போது இந்த இருவர்களின் தொடர்புடைய மூன்றாவது நபர் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து அவர்கள் இருவரையும் ஏற்றிக்கொண்டு கொண்டு மூவரும் வேகமாக  தப்பிச்…

Read More

தூத்துக்குடி விளாத்திகுளம் தூத்துக்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மீதான வழக்கு விசாரணையின் தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் தூத்துக்குடி மாவட்ட நீதிபதி சுபாதேவி மார்க்கண்டேயன் ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளை ஜூலை 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும் மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசிய விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மீது தூத்துக்குடி மாவட்ட குற்ற பிரிவு காவல் துறையினர் மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கடந்த இருபதாம் தேதி அவர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் கடந்த 9 நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு சார்பில் தன் மீது போடப்பட்ட வழக்கு சட்ட முரண்களுக்கு எதிரானது என தெரிவித்து இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயண் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இந்த மனு…

Read More

முன்னாள் அமைச்சர் V. Senthil Balaji மீது வருமானத்திற்கு அதிகமான சொத்து (Disproportionate Assets – DA) வழக்கைதமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் (DVAC)வழக்குப் பதிவு செய்துள்ளது. விசாரணையின் ஒரு பகுதியாக, மொத்தம் 41 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை * சென்னையில் 14 இடங்கள் * கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் ராமேஸ்வரப்பட்டி வீடு * அவரது உதவியாளர் சுப்பிரமணியின் வீடு * கரூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பாஸ்கரின் வீடு * ரமேஷ், கார்த்திக் ஆகியோரின் வீடுகள் * கரூரில் உள்ள TASMACமண்டல அலுவலகம் ஆகிய இடங்களிலும் சோதனைகள் நடைபெற்று வருகிறது. DVAC அதிகாரிகள் வழக்கு பதிவு செய்யப்பட்டதை உறுதி செய்துள்ள நிலையில், எந்த ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன யாரும் கைது செய்யப்பட்டார்களா என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த வழக்கின் மைய குற்றச்சாட்டு செந்தில் பாலாஜி மற்றும் மற்ற குற்றஞ்சாட்டப்பட்டவர்கள்,…

Read More

ஒரு கையுடன் பிறந்த 10 வயது சிறுமி நிஷா, தனது மாற்றுத்திறனை ஒரு தடையாக நினைக்காமல், தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் நடனத்தின் மீது கொண்டிருந்த பேரார்வத்தால் சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்தார். நடிகை சிம்ரனின் நடனங்களை தொலைக்காட்சியில் பார்த்து ரசித்த நிஷா, சிம்ரன் நடித்த பாடல்களுக்கு அவரைப் போலவே நடனமாடி தொடர்ந்து பயிற்சி செய்து வந்தார். நிஷாவின் நடனக் காணொளிகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, அவரது திறமையையும் தன்னம்பிக்கையையும் பலரிடம் கொண்டு சென்ற தன்னார்வலர் ஆஷிக், நிஷாவைப் பற்றியும் அவரது வாழ்க்கைப் பயணத்தைப் பற்றியும் நடிகை சிம்ரனிடம் எடுத்துரைத்தார். மேலும், தினமும் பள்ளிக்குச் செல்ல ஒரு சைக்கிள் வேண்டும் என்பது நிஷாவின் நீண்டநாள் கனவு என்பதையும் தெரிவித்தார். இதையறிந்த நடிகை சிம்ரன், நிஷாவை நேரில் சந்திக்க அழைத்தார். அந்த சந்திப்பில், நிஷா நீண்ட நாட்களாகப் பயிற்சி செய்து வந்த சிம்ரனின் பாடலுக்கு அவருடனேயே இணைந்து நடனமாடி மகிழ்ந்தார். அதுமட்டுமல்லாமல், நிஷாவின் நீண்டநாள்…

Read More

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம், மேயர் பிரியா தலைமையில் தொடங்கியது. சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் கொளத்தூர் வாக்கு எண்ணிக்கை மைய இயந்திரம் சரிபார்ப்பு நிகழ்வில் உள்ளதால், அவருக்கு பதிலாக ஷ்ரேயா பி சிங் பங்கேற்று உள்ளார். இக்கூட்டத்திற்கு மாமன்ற உறுப்பினர்கள் குறைந்த அளவிலேயே வருகை தந்தனர். தவெக அரசு பொறுப்பேற்ற பின்பு நடைபெறும், இரண்டாவது மாமன்ற கூட்டம் இது. தவெகவை சேர்ந்த 4 மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு வரவில்லை. இந்த கூட்டத்தில் பேசிய மேயர் பிரியா, “ திமுகவை பலவீனப்படுத்த முயற்சிக்கும் திமுக கூட்டணியில் இருந்து போனவர்களின் முயற்சி பலிக்காது. திமுக எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தமிழ்நாட்டின் வரலாற்றில் பிண்ணி பிணைந்துள்ளது. “சங்கு சுட்டாலும் மேன்மை தரும்” அது போல திமுக தன்னுடைய கொள்கைகளில் இருந்தும் சமரசம் செய்து கொள்ளாமல் என்றென்றும் மக்கள் மனதில் நீக்கமற நிலைத்திருக்கும். மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அஞ்சாமல் மக்கள் பணிகள் தொடரும். தமிழ்நாட்டில் அதிகாரத்தை பயன்படுத்தி…

Read More

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ரூ.100 கோடி மதிப்புள்ள மட நில மோசடி வழக்கில் சிபிசிஐடி போலீசார் நடவடிக்கையை தீவிரப்படுத்தி 4 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகா, பப்பன்குளம் பகுதியைச் சேர்ந்த வெள்ளைத்துரை (60), திண்டுக்கல் மாவட்டம், பழனி கவுண்டன்குளம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் அன்வர்தீன் (65), விழுப்புரம் மாவட்டம், சாலாமேடு பகுதியைச் சேர்ந்த முருகதாஸ் (56), மற்றும் பழனி அருகே டி.கே.என். புதூர் பகுதியைச் சேர்ந்த சேதுபதி ஆகியோர். இவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் 318(4), 336(3), 340(2), 49 மற்றும் 61(2) ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு, பழனி அடிவாரம் சாலையில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சொந்தமான சுமார் 1 ஏக்கர் 40 சென்ட் நிலம் தொடர்பான சர்ச்சையிலிருந்து உருவானது. சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள…

Read More

வழக்கறிஞர்களும் மற்றவர்களைப் போலவே சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும்; அதை சிறப்புச் சலுகை கோர முடியாது என, சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. திருச்சி சென்னை இடையிலான சுங்கச்சாவடியில், வழக்கறிஞர்களுக்கு கட்டண விலக்கு கோரி, கடந்த 2024ம் ஆண்டு வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சுங்கச்சாவடியை நடத்தி வரும் ஒப்பந்ததாரர் அளித்த புகாரின் பேரில், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக, விழுப்புரத்தை சேர்ந்த வழக்கறிஞர் ராஜ்குமார், கள்ளக்குறிச்சியை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீதர் ஆகியோர் மீது, உளுந்துார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் சம்மந்தப்பட்ட வழக்கறிஞர்களுக்கு எதிராக போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் இருவரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, வன்முறை, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததற்கான ஆதாரம் இல்லை. அதேபோல், மனுதாரர்கள் குற்றம் செய்யும் நோக்கில் செயல்பட்டதற்கான…

Read More

சேலம் மாவட்டம் அத்தூர் அருகே புதுகொத்தாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பழனியம்மாள், இவரை செல்போனில் தொடர்பு கொண்ட நார் ஒருவர், தாலுகா அலுவலகத்தில் இருந்து தாசில்தார் பேசுவதாக கூறி, அந்த பெண்ணின் பெயர், குடும்ப உறுப்பினர்களது பெயர்களை கூறியுள்ளார். தொடர்ந்து, ”கொரோனா போன்று புதுவிதமான நோய் பரவி வருகிறது. இந்த நோய் தலைமுடி வழியாக பரவுவதால், வெளிநாடுகளில் மொட்டை அடித்துக் கொண்டு நோயில் இருந்து தப்பித்துள்ளனர், அவ்வாறு, மொட்டை அடித்தால் நோய் தாக்கம் ஏற்படாது, மொட்டை அடிக்கும் நபர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஊக்கத் தொகையாக, பெண்கள் என்றால், தலா, ரூ.15,000ம் பள்ளி, கல்லுாரி மாணவிகள் என்றால், தலா, ரூ.45,000ம் மற்றும் மடிக்கணினி; ஆண்களுக்கு, தலா, ரூ.6,000 வழங்கப்படும் என கூறியுள்ளார். புதுகொத்தாம்பாடிக்கு, 18 டோக்கன் மட்டுமே உள்ளதால், உங்களது உறவினர்களுக்கு கூட தகவல் தெரிவித்து கொள்ளலாம் எனவும், நாங்கள் நேரில் வரும் போது மொட்டை அடித்து தயார் நிலையில் இருக்குமாறு கூறியுள்ளார்…

Read More

தமிழ்நாட்டில் எந்த ஒரு அரசு நிகழ்ச்சி மற்றும் கல்லூரி நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகவும், நிகழ்ச்சி முடிவின் போது தேசிய கீதமான ஜன கன மனவும் இசைக்கப்படும். இதுவே மரபாக இருந்து வந்தது. ஆனால் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றப் போது முதலாவதாக தேசிய பாடலான வந்தே மாதரம் முதலாவதாகவும், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகவும் பாடப்பட்டது. இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. மத்திய அரசின் அறிவுறுத்தல் படியே இவ்வாறு வந்தே மாதரம் முதலில் இசைக்கப்பட்டதாக, அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கு அரசியல் தலைவர்கள் முதல் பலரது எதிர்ப்பும் கிளம்பியதால், மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்…

Read More

பாண்டிச்சேரி மாநிலத்தை சேர்ந்த நண்பர்களான பத்ரிஸ் (32) மற்றும் முருகன் (27) ஆகிய இருவரும் பெயிண்டிங் வேலை செய்து வந்தனர். ​இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் வேதாரண்யத்தில் இருந்து வேளாங்கண்ணி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, நாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யம் நோக்கி வந்த தனியார் கல்லூரி பேருந்தும், இவர்களது இருசக்கர வாகனமும் பூவைத்தேடி அருகே நேருக்கு நேர் பலமாக மோதிக்கொண்டன. ​இந்த கோர விபத்தில் பத்ரிஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த கீழையூர் காவல்துறையினர், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ​மேலும், படுகாயமடைந்த முருகனை மீட்டு அதே மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த முருகன், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து ஏற்படும் முன் சாலையில் மது போதையில் இருவரும் இருசக்கர வாகனத்தில் நிலைத்தடுமாறி சென்ற காட்சிகளைக் கொண்டு…

Read More