Author: Editor web4

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா மகாராஷ்டிரா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருவது வழக்கம். தினசரி 1000 முதல் 1100 டன் அளவிலான காய்கறிகள் வழக்கமாக விற்பனைக்கு கோயம்பேடு சந்தைக்கு கொண்டு வரப்படும் வரப்படுகிறது. இந்த நிலையில் ஆகஸ்ட் முதல் தேதி மற்றும் ஆடி மூன்றாவது வாரம் என்பதால் கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை அதிகரிக்கும் என வியாபாரிகள் கூடுதலாக காய்கறிகளை வாங்கிய நிலையில் சந்தையில் காய்கறிகளின் விற்பனை மந்தமாக நடைபெற்று வருகிறது என வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர். சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் அனைத்து காய்கறிகளின் விலையும் கிலோ 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை குறைந்துள்ளது. 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கேரட் இன்று 70 முதல் 50 ரூபாய் வரையும் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ் 70 முதல் 60 ரூபாய்க்கும், அனைத்து பச்சை காய்கறிகளின்…

Read More

கேரளாவில் நடப்பு ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை காலதாமதத்துடன் தொடங்கியது. எனினும் சமீப நாட்களாக கேரளாவில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கேரளாவின் இடுக்கி, கோழிக்கோடு, எர்ணாகுளம், கோட்டயம், பத்தனம்திட்டா ஆகிய 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதில் இடுக்கி மாவட்டத்தின் அடூர் மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இந்த தகவல் அறிந்து அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்புக்குழு இடுக்கிக்கு சென்றுள்ளது. பலத்த மழை, திடீர் வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்டவற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த சுமதி என்றப் பெண்ணில் உடல் மீட்கப்பட்டுள்ளது. காணாமல் போன 2 மீனவர்களின் உடலை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது. மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. சுற்றுலாவாசிகள் யாரும் ஆபத்து நிறைந்த மலை பகுதிகளுக்கோ அல்லது கடலோர பகுதிகளுக்கோ…

Read More

முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது தமிழ் சினிமாவில் இயக்குநராக களமிறங்கியுள்ளார். விஜய்யுடன் சிறு சிறு வேடங்களில் நடித்தவர், நடிப்பில் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இயக்குநராகி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார். சந்தீப் கிஷன் நடிப்பில் ‘சிக்மா’ என்ற படத்தை அவர் இயக்கியுள்ளார். ஜூலை 31-ம் தேதி படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிலபல காரணங்களால் பட வெளியீடு தள்ளிப்போனது. செப்டம்பரில் இப்படம் வெளியாகும் என கூறப்படும் நிலையில், முதன்முதலாக தற்போது ஜேசன் சஞ்சய் நேர்காணல் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அப்பா குறித்தும், அவரது சினிமா வாழ்க்கை குறித்தும் பல விஷயங்களை அவர் மனம் திறந்து பகிர்ந்துள்ளார். இந்த நேர்காணலில் சுவாரஸ்யமாக கேட்கப்பட்ட கேள்வி : “உங்கள் பெயரைக் கொண்ட ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம், ‘சிக்மா’ படத்தை பார்த்து விட்டு தம்பி வாங்க ஹாலிவுட்டில் ஒரு படம் பண்ணலாம் என்று கூப்பிட்டால், இந்தியாவிலிருந்து எந்த ஒரு சிறந்த…

Read More

தமிழ்நாட்டில் நீண்ட ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் விரைவில் நடத்தி முடிக்கப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் தகவல் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு 2023 ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கங்களின் தேர்தலை திமுக அரசு நடத்தும் என்று அதற்கான முன்னெடுப்பு பணிகளை செய்தனர். ஆனால் அதன் பிறகு கூட்டுறவு சங்கங்களின் தேர்தலை நடத்தாமல் விட்டுவிட்டனர். அதன் பிறகு கூட்டுறவு சங்கங்களில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் காலியாக உள்ளது. இதனால் பால் விவசாயிகள், கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் இல்லாததால் அரசு அதிகாரிகளை மட்டுமே அனைத்து கேள்விகளையும் குறைகளையும் கேட்க வேண்டியுள்ளது. சங்கங்களின் உறுப்பினர்கள் இருந்தால் அவர்களை விவசாயிகள் நேரடியாக அணுகி பிரச்சனைகளை தீர்வு காண முடியும். இது குறித்து கூட்டுறவு துறை அமைச்சர் காந்திராஜிடம் கேட்டபோது, ”தமிழக வெற்றிக் கழக அரசு அமைந்த பிறகு கூட்டுறவு…

Read More

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில், லைசென்ஸ் வழங்குதல், வாகன பதிவு மற்றும் வாகனங்கள் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு புரோக்கர்கள் மூலம் லஞ்சம் பெறப்படுவதாக தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. அதனைத் தொடர்ந்து இன்று மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஜெயக்குமார் தலைமையிலான போலீசார், கும்மிடிப்பூண்டி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் திடீரென உள்ளே நுழைந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அலுவலகத்திற்குள் பல்வேறு சேவைகளுக்காக வந்திருந்த சுமார் 20 பொதுமக்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினர். இந்த அதிரடி சோதனையின் முடிவில், அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.1,65,400 பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த திடீர் சோதனை கும்மிடிப்பூண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More

நாகையில் நகராட்சி மன்ற மாதாந்திர கூட்டம், நகர் மன்ற தலைவர் மாரிமுத்து தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் 36 வார்டுகளைச் சேர்ந்த அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சி கவுன்சிலர்களும் பங்கேற்றனர். ​கூட்டம் தொடங்கியதும், நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நிலவும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் கைகளில் காலி குடங்களுடன் கூட்டரங்கிற்குள் திரண்டு வந்தனர். லாரிகள் மூலம் அனைத்து வார்டுகளுக்கும் சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும், பழுதடைந்த குழாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். ​இதனால் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்திற்கும் அதிமுக கவுன்சிலர்களுக்கும் இடையே காரசாரமான விவாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

Read More

கோடியக்கரை அருகே நடுக்கடலில் படகு பழுதாகி 2 நாட்களாக தத்தளித்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை நாகை மீன்வளத் துறையினர் பத்திரமாக மீட்டு நாகை துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரது நாட்டுப் படகில், கடந்த 27-ஆம் தேதி டிப்ரியூ, ராஜ், கிரீன்சன் ஜான்சன் கென்னடி, மைக்கேல், ரூபன் ஆகிய 6 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். 29-ஆம் தேதி கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக படகின் இன்ஜின் பழுதானதால், அவர்கள் 2 நாட்களாக கடலிலேயே தத்தளித்தனர். இதுகுறித்து அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ‘சுந்தரவல்லி’ என்ற விசைப்படகு மூலம் நாகை மீன்வளத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் விரைந்து செயல்பட்ட மீன்வளத் துறையினர், அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சாமிநாதன் என்பவரது விசைப்படகில் சென்று மீனவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கி, அவர்களையும் பழுதான படகையும் பத்திரமாக நாகை மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.

Read More

திமுக சட்டமன்ற உறுப்பினரும் , முன்னாள் அமைச்சருமான சிவசங்கர் தவெக அமைச்சர் நிர்மல் குமார் வைத்த விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் வகையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். ”தமிழ்நாட்டில் பரவலாக மின் கட்டணம் கூடுதலாக விதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த புகாருக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த மின்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல், திமுக தலைவர் வாட்ஸ் அப்பில் வந்த செய்தியை பேசுவதாகவும் கூறியவர், ஒரு பொறுப்பான அமைச்சர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல், எதிராளிகளை குறைவாக மதிப்பிடுகிறார் என்றும், திமுக தலைவரின் வரலாறு, அவர் வயது, அவர் அனுபவம் , அவர் வகித்த பதவிகளை பற்றி தெரிந்து கொண்டு நிர்மல் குமார் பேச வேண்டும். அமைச்சர் நிர்மல் குமார் தன் வேலைகளை…

Read More

பாரத் பெட்ரோலிய நிறுவனம் கேரளா மாநிலம் கொச்சி முதல் கர்நாடகா மாநிலம் தேவனஹந்தி வரை குழாய் மூலம் எரிபொருள் கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கோவை மாவட்டம் இருகூர் வரையிலும், திருப்பூர் மாவட்டம் முத்தூரில் இருந்து கர்நாடகா வரை சாலையோரம் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 70 கிலோ மீட்டர் வரை விவசாய விளை நிலங்கள் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 60 கிலோ மீட்டர் வருகின்றது. கோவை மாவட்டம் இருகூரில் இருந்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் வழியாக முத்தூர் வரை எண்ணெய் குழாய் பதிப்பதற்கான திட்டத்திற்கு கோவை மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்த நிலையில் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. தங்களது விவசாய நிலம் பாதிக்கப்படும் எனவும், நிலத்தின் மதிப்பு வெகுவாக சரியும் எனவும், எண்ணெய் குழாய்களை விவசாய நிலங்களில் பதித்தால்…

Read More

விவசாயிகளின் பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்த பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள், கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல், விவசாயிகளின் பயிர்க் கடன்களை எந்த நிபந்தனையும் இன்றி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர். பயிர் சாகுபடிக்காக வங்கிகளில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் ஏராளமான விவசாயிகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்…

Read More