Author: Editor web4

வடமாநிலங்களில் பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த கனமழையால் லட்சக்கணக்கான மக்கள் வீடு, உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். அந்த வகையில், மேகாலயாவின் கிழக்கு காசி மலைகள், மேற்கு ஜெயிண்டியா மலைகள் மற்றும் கிழக்கு ஜெயிண்டியா மலைகள் ஆகிய பகுதிகள் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் பாபும்பரே, குருங் குமே, கிழக்கு காமெங், கிழக்கு சியாங், லோஹித் மற்றும் சாங்லாங் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழை (ஆரஞ்சு மற்றும் சிவப்பு எச்சரிக்கைகள்) பெய்யக்கூடும். இது அசாமின் அண்டை மாவட்டங்களை பாதிக்கலாம்” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாகாலாந்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு ‘மஞ்சள் எச்சரிக்கை’ (கண்காணிப்பு) விடுக்கப்பட்டுள்ளதாகவும், இது அசாமின் சாரைடியோ, சிவசாகர், ஜோர்ஹாட் மற்றும் கோலாகாட் மாவட்டங்களை பாதிக்கக்கூடும் என்றும் அது கூறியது. நேற்று (திங்கள்கிழமை) இரவு வெளியிடப்பட்ட அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (ASDMA) அறிக்கைப்படி, கடந்த 24 மணி…

Read More

நடிகர் ஜீவா நடிப்பில் லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே படத்தின் உணர்வுபூர்வமான கதைக்களத்தையும், கிராமத்து மண்வாசனையையும் பிரதிபலிப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு, அப்பா – மகன் உறவு, குடும்ப பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட ஒரு ஆழமான குடும்பக் கதையாக உருவாகி வருகிறது. படத்தை ஒரே கட்டமாக படமாக்க திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது 50 சதவீத படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பின் போது காட்சிகளை நேரில் பார்த்த பொதுமக்கள் பலரும் உணர்ச்சிவசப்பட்டு, படக்குழுவினரை நேரில் பாராட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது படத்தின் மீது மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘தெனாவட்டு ’ திரைப்படத்திற்குப் பிறகு, முழுக்க முழுக்க…

Read More

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே  சேர்க்காட்டில் தமிழக அரசின் திருவள்ளூவர் பல்கலைக்கழகம் செயல்படுகிறது இதன் கட்டுபாட்டில் வேலூர், திருவண்ணாமலை ,திருப்பத்தூர்,ராணிப்பேட்டை உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரிகள் இதன் கட்டுபாட்டில் செயல்படுகின்றன இப்பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் தொடர்கிறது சில தினங்களுக்கு முன்னர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆய்வக பொறுப்பாளர் கைது செய்யப்பட்டார். இங்கு அமைக்கப்பட்டுள்ள உள்ளக விசாரணை குழு பாலியல் புகார்களை மூடி மறைக்கவே முழுமையாக செயல்படுகிறது இதற்கு முழு பொறுப்பாக உள்ள தேர்வு கட்டுபாட்டு அலுவலர் பாபு ஜனார்த்தனம் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பாலியல் சீண்டலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் திருவள்ளூவர் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கம் தலைவர் சிவா தலைமையில் ஆர்பாட்டத்தில் மூன்று நாட்கள் ஈடுபட முடிவு செய்து கௌரவத்தலைவர் பேராசிரியர் இளங்கோ உள்ளிட்டோர் கண்டன முழக்க ஆர்பாட்டத்தை துவங்கியுள்ளனர். இதற்கு சேலம் பெரியார்…

Read More

தென்காசி மாவட்டம், ஆயிரப் பேரி பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 45). மனைவியை பிரிந்து வாழும் இவருக்கும், இலஞ்சி பகுதியை சேர்ந்த வித்யா என்ற பெண்ணுக்கும் இடையே பேக்கரியில் வேலை செய்யும் போது கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. இந்த நிலையில், வித்யாவை சுதாகர் திருமணம் செய்ய கட்டாயப்படுத்தி வந்ததாக கூறப்படும் நிலையில், அதற்கு வித்யா மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். குறிப்பாக, வித்யாவிற்கு திருமணம் முடிந்து மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், தொடர்ந்து வித்யாவை, சுதாகர் திருமணம் செய்ய வற்புறுத்தி வந்த நிலையில், அவரது வீட்டிற்கும் சென்று பிரச்சினை செய்துள்ளார். இந்த நிலையில், வித்யாவின் கணவரான மாரியப்பன் என்பவருக்கும், சுதாகருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்ட நிலையில், இன்றைய தினம் சுதாகர் மாரியப்பனை செல்போனில் தொடர்பு கொண்டு இன்று பேசி ஒரு முடிவு எடுத்துக் கொள்வோம் என மாரியப்பனை நேரில் அழைத்த நிலையில், மாரியப்பன் இலஞ்சி பகுதிக்கு சுதாகரை வரும்படி கூறியுள்ளார். அதன் அடிப்படையில் சுதாகர்…

Read More

கடலூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பயணித்த காரில், கட்சி நிர்வாகி ஒருவர் தொங்கியபடி சென்றதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடலூர் முதுநகர் பகுதியைச் சேர்ந்த விசிக நிர்வாகி பரதன், திருமாவளவனை சந்தித்து சிறிது நேரம் உரையாடிய பின்னர், அவரது கார் புறப்பட்டபோது காரின் கதவைப் பிடித்தபடி தொங்கியவாறு சென்றதாக கூறப்படுகிறது. மேலும், சுமார் 60 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற காரில் தொங்கியபடி பயணித்ததாகவும், பின்னர் கார் வேகம் குறைக்கப்பட்டபோது பாதுகாப்பாக கீழே இறங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பல்வேறு தரப்பினரிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரப்பூர்வமாக இதுகுறித்து எந்த விளக்கமும் வெளியாகவில்லை.

Read More

தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியிருக்கிறது. கேரளாவில் பருவமழை தாமதமாக தொடங்கினாலும் கூட அம்மாநிலத்தின் பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருவதால், இடுக்கி போன்ற இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. ஜூன் மற்றும் ஜூலை ஆகிய மாதங்களில் இயல்பை விட தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. 21% வரை குறைவாக பெய்திருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை உள்பட 34 மாவட்டங்களில் 35 சதவீதம் மழை இயல்பை விட பற்றாக்குறையாக பதிவாகியுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான ஆகஸ்டு மாத வானிலை முன்னறிவிப்பை சென்னை மண்டல வானிலை மைய இயக்குனர் துரை வெளியிட்டுள்ளார். அதில், ஆகஸ்டு மாதத்தில் வட தமிழ்நாடு பகுதியில் மழை பொழிவு இயல்பானதாகவோ அல்லது இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். தென் கடலோர பகுதியில் இயல்பை விட அதிகமாக இருக்கலாம். வட உள்மாவட்டங்கள், மற்றும் தென் உள்மாவட்டங்களில் மழைப் பொழிவு இயல்பானதாக இருக்கக்…

Read More

கர்நாடக காங்கிரஸ் அரசின் மேகதாட்டு அணை திட்டத்தை கண்டித்து தேமுதிக சார்பில் இன்று தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் கண்ணாடி மாளிகை அருகே மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டம் தொடங்குவதற்கு முன்பு பிரேமலதா விஜயகாந்த் ஒகேனக்கல் பிலிகுண்டுலு சென்று நீர்வரத்தை பார்வையிட்டார். பின்னர் கட்சி நிர்வாகிகளிடம் கள நிலவரம் குறித்து கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து தமிழகத்திற்கு காவிரி நீர் தடையின்றி கிடைக்க வேண்டும், மழை பெய்ய வேண்டும், தமிழகமும் கர்நாடகாவும் பயனடைய வேண்டும் என இயற்கை அன்னையை வேண்டி, காவிரி ஆற்று நீரை பாட்டிலில் பிடித்து வந்து ஆற்றில் மீண்டும் ஊற்றி பிரார்த்தனை செய்தார். மேகதாட்டுவில் அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு கடும் பாதிப்பு ஏற்படும் என ஆர்பாட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. கர்நாடக அரசு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை தொடர்ந்து மதிக்காமல் செயல்படுவதாகவும், இதனால் தமிழகம் முழுவதும் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தண்ணீர் இன்றி தவிக்கும் நிலை உருவாகும் என்றும் பேச்சாளர்கள்…

Read More

தமிழக அரசு சார்பில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு கப்பல் கட்டும் தளம் அமைக்க உப்பளங்கள் மீன் பிடி தொழிலை அளித்து இடங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உப்பு உற்பத்தியாளர்கள் உட்பள தொழிலாளர்கள் மீன்பிடி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி அருகே அமைந்துள்ளது முள்ளக்காடு, கோவளம், பழைய காயல், உள்ளிட்ட பகுதிகள். இந்த பகுதிகள் முழுவதும் உப்பளம் மற்றும் மீன்பிடி தொழிலை நம்பி உள்ளது. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர்கள் கோவளம் பசுவந்தரை தண்பாடு உப்பு உற்பத்தியாளர் சங்கம் சார்பில் சுமார் 500 ஏக்கருக்கு மேல் உப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பட்டா நிலங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட உப்பு உற்பத்தியாளர்கள் உப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உப்பு தொழிலை நம்பி சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆண் பெண் உப்பள தொழிலாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் இந்த பகுதியில் சுமார் தமிழக அரசின்…

Read More

திருப்பூரில், ‘Flag’ எனும் தமிழ்ப்பட பிரமோசன் நிகழ்ச்சிக்காக, 330 மீ நீளமுள்ள தேசிய கொடியை ஏந்தியவாறு நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் ஊர்வலமாக சென்றனர். ஐ அண்ட் ஐ மூவிஸ் தயாரப்பில், ப்ளாக்(FLAG) திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி வெளி வரவுள்ளது. இந்நிலையில், இத்திரைப்படத்தின் பிரமோசன் (முன்னோட்ட) நிகழ்ச்சியானது திருப்பூரில் இன்று நடைபெற்றது. திருப்பூர் குமரன் நினைவுத்ததூண் முன்பாக தனியார் பள்ளி மாணவ, மாணவியர் நூற்றுக்கும் மேற்பட்டோர் 500 மீ நீளமுள்ள தேசிய கொடியை ஏந்தியபடி சென்ற ஊர்வலத்தை திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம் கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து இந்த ஊர்வலமானது குமரன் நினைவகம் சென்று நிறைவடைந்தது. இந்நிகழ்வில் பங்கேற்ற பட தயாரிப்பாளர் வைர பிரகாஷ், திரைப்பட நடிகர்கள் கிரி தூவரகேஷ், மிக்கி மக்கி ஜா, தீஹான் மற்றும் திருப்பூர் குமரன் குடும்பத்தார் உள்ளிட்டோர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்தனர். அதனை தொடர்ந்து இப்படத்தின்…

Read More

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை – நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் படந்தாலுமூடு பகுதியில் மார்த்தாண்டம் நோக்கி இருசக்கர வானகம் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அதே திசையில் அதிவேகமாக வந்த பால் விநியோகம் செய்யும் மினி டெம்போ கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த கேரளா மாநிலத்தை சேர்ந்த ஶ்ரீகுமார் (60), மற்றும் சஜி குமார் (55) இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு பால் வண்டியின் அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த களியக்காவிளை போலீசார் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்த பின் விபத்து குறித்து விசாரணை நடத்தினர். அதிவேகமாக பால் விநியோக வாகனத்தை இயக்கி வந்த ஓட்டுநர் நான்குநேரி பகுதியை சேர்ந்த பாலமுருகன் ( 33 ) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி…

Read More