Close Menu
    What's Hot

    கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை – பாஜக வரவேற்பு

    வெளிநாட்டில் மருத்துவம் படித்த இந்திய மாணவர்களுக்கு ஒன்றிய அரசு அநீதி; காங்கிரஸ் கண்டனம்

    சகோதரருடன் சமரசத்துக்கு தயார்; சொத்து பிரச்சனை வழக்கில் இறங்கி வந்த அமைச்சர் மரிய வில்சன்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கரூர் : வருவாய்த்துறை உதவியாளரை ஆபாசமாக திட்டிய வி.ஏ.ஓ..! வீடியோ வைரலானதால் சர்ச்சை..!
    Featured

    கரூர் : வருவாய்த்துறை உதவியாளரை ஆபாசமாக திட்டிய வி.ஏ.ஓ..! வீடியோ வைரலானதால் சர்ச்சை..!

    Editor web4By Editor web4July 9, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 7
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கரூர் மாவட்டம் குளித்தலையில், வருவாய்த்துறை உதவியாளரை கிராம நிர்வாக அலுவலர் (V.A.O) ஒருவர் ஆபாச வார்த்தைகளால் மிகக் கொடூரமாக திட்டி மிரட்டும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 1-ம் தேதி குளித்தலை கடம்பர் கோவில் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் ஒன்று மிதந்து வந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த குளித்தலை டவுன் வி.ஏ.ஓ அழகர் என்பவர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்துள்ளார்.
    அப்போது, அங்கு பணிபுரியும் வருவாய்த்துறை உதவியாளர் ஒருவருக்கு போன் செய்த வி.ஏ.ஓ அழகர், “டேய் எங்கடா இருக்க?” என்று தொடங்கி, கேட்க முடியாத அளவிற்கு மிக மோசமான கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்த்துள்ளார்.

    ”பிணத்துக்கிட்டே உட்கார்ந்திரு 10 மாசம் சம்பளம் வாங்க மாட்ட… உனக்கு என்ன வேலை? என்ன தாசில்தார் வேலை பாக்குறியா? உடனே வந்து அந்த பிணத்துக்கிட்டே உட்கார்ந்திருக்கணும். சாயங்காலம் வரைக்கும் உனக்கு அதான் வேலை” என்று அதிகார தோரணையில் மிகக் கேவலமாக மிரட்டியுள்ளார்.

    இந்த உரையாடல் வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. தற்போது வதியம் பகுதியில் பணியாற்றி வரும் வி.ஏ.ஓ அழகர் மீது உடனடியாக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் புகார்கள் குவிந்து வருகின்றன.

    குளித்தலை பகுதியில் சில வி.ஏ.ஓ-க்கள் மற்றும் உயர் அதிகாரிகள், தங்களுக்கு கீழ் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களை தொடர்ந்து இதுபோன்று ஆபாசமாக பேசுவதும், மனிதநேயமற்ற முறையில் நடத்துவதும் வாடிக்கையாக உள்ளதாக அப்பகுதி ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநாளை கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்.. 32 பேருக்கு பணி நியமன ஆணை..!! மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியும் இருக்கு..!!
    Next Article பனகல் அரசரின் சாதனைகளே திராவிட மாடலின் அடித்தளம்.. மு.க. ஸ்டாலின் பெருமிதம்..!!
    Editor web4

    Related Posts

    கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை – பாஜக வரவேற்பு

    July 9, 2026

    வெளிநாட்டில் மருத்துவம் படித்த இந்திய மாணவர்களுக்கு ஒன்றிய அரசு அநீதி; காங்கிரஸ் கண்டனம்

    July 9, 2026

    சகோதரருடன் சமரசத்துக்கு தயார்; சொத்து பிரச்சனை வழக்கில் இறங்கி வந்த அமைச்சர் மரிய வில்சன்!

    July 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை – பாஜக வரவேற்பு

    வெளிநாட்டில் மருத்துவம் படித்த இந்திய மாணவர்களுக்கு ஒன்றிய அரசு அநீதி; காங்கிரஸ் கண்டனம்

    சகோதரருடன் சமரசத்துக்கு தயார்; சொத்து பிரச்சனை வழக்கில் இறங்கி வந்த அமைச்சர் மரிய வில்சன்!

    10-ம் தேதி கரூர் செல்லும் முதலமைச்சர்..! பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரம்..! 

    பனகல் அரசரின் சாதனைகளே திராவிட மாடலின் அடித்தளம்.. மு.க. ஸ்டாலின் பெருமிதம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.