Author: Editor web4

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட்டின் ஒரு பாகம், நிலவில் மோதியதால், மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2025ம் ஆண்டு ஜனவரியில் பயர்ப்ளை ஏரோஸ்பேஸ் லேண்டரை நிலவுக்கு அனுப்பப் பயன்படுத்தப்பட்ட பால்கன் 9 ராக்கெட்டின் இரண்டாம் அடுக்கு பாகம், விண்வெளியிலேயே தங்கி விட்டது. எரிபொருள் தீர்ந்த நிலையில், விண்வெளியில் ஒரு வருடத்திற்கும் மேலாக மிதந்து கொண்டிருந்த 4 டன் எடையுள்ள ராக்கெட் கழிவு பாகம், மணிக்கு சுமார் 8,700 கிலோ மீட்டர் வேகத்தில் நிலவின் மேற்பரப்பில் மோதியுள்ளது. இதனால், நிலவில் சுமார் 18 மீட்டர் அகலமும், 4 மீட்டர் ஆழமும் கொண்ட ஒரு பெரிய பள்ளம் உருவாகியிருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று விண்வெளிக் கழிவுகள் நிலவில் மோதுவது இது முதன்முறையல்ல. 2022ம் ஆண்டில் சீன ராக்கெட் பாகம் ஒன்று நிலவில் மோதியது. மேலும், நாசாவும் நிலவின் தூசி மற்றும் அதிர்வுகளை ஆய்வு செய்வதற்காகத் தனது ராக்கெட் பாகங்களை நிலவில் திட்டமிட்டு…

Read More

தவெக அரசு பொறுப்பேற்றப் பிறகு முதன் முறையாக சட்டமன்றத்தில், தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. இதற்கு பல அரசியல் தலைவர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் மரிய வில்சன் மற்றும் வேளாண்மை அமைச்சர் வினோத் ஆகியோருக்கு தனது பாராட்டை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ”தமிழ்நாட்டின் வளர்ச்சியை இலக்காகவும், மக்கள் நலனை மையமாகவும் கொண்டு, ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில் அனைவரும் பாராட்டும் வகையில் 2026 – 27ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. நெ.மரிய வில்சன் அவர்களுக்கும், வேளாண்மை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள மாண்புமிகு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர. வினோத் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள். தொலைநோக்குப் பார்வையுடன்கூடிய திருத்திய நிதிநிலை அறிக்கையானது…

Read More

காவிரியில் இருந்து நீர் திறப்பதில் ஒருபுறம் கர்நாடகாவுக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே நீண்ட காலமாக இழுபறி நீடித்து வரும் நிலையில், மறுபுறம் தமிழ்நாட்டில் இருந்து தண்ணீரை திறந்து விடக் கூடாது என கேரளாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே தகராறு நிலவி வருகிறது. அந்த வகையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை தமிழ்நாடு உயர்த்தினால் உச்சநீதிமன்றம் வரை செல்வோம் என கேரள அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள 131 ஆண்டுகள் பழமையான முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக தமிழக அரசு பட்ஜெட்டில் நேற்று அறிவிக்கப்பட்டது. இதற்கு கேரள மாநிலத்தின் தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் மான்ஸ் ஜோசப், “முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை எந்த சூழலிலும் 142 அடிக்கு மேல் உயர்த்தக்கூடாது என்ற நிலைப்பாட்டில் கேரள அரசு உறுதியாக உள்ளது. அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு மேல்…

Read More

திருப்பத்தூர் மாவட்டம் எல்லபள்ளி ஏரி கொடி ரயில்வே லைன் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வழிப்பாதை இல்லாததால் திருப்பத்தூர் நாட்றம்பள்ளி செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்கள் சாலை வசதி இல்லை என்று கூறி நீண்ட காலமாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் சாலை மறியலில் ஈடுபட்டதால் சம்பவ இடத்திற்கு நாட்றம்பள்ளி காவல் ஆய்வாளர் மூர்த்தி வருவாய் துறையினர் மற்றும் ஒன்றிய ஆணையாளர் வருவாய்த்துறை அலுவலர்கள் நேரில் இடத்தை ஆய்வு  மேற்கொண்டு சாலை வசதி ஏற்படுத்தி கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Read More

திருப்பத்தூரில் நக்சலைட்களால் உயிரிழந்த 4 காவலர்களுக்கு 46ஆம் ஆண்டு வீரவணக்கம் நாள் 30 குண்டுகள் முழுங்க நினைவு அஞ்சலி வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. திருப்பத்தூர் அடுத்த ஜோலார்பேட்டையில் 1980 ஆண்டு நக்சலைட் சிவலிங்கம் என்பவரை பிடித்து ஜீப்பில் அழைத்து சென்ற போது திருப்பத்தூர் அருகே சேலம் பிரதான சாலையில் சிவலிங்கம் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை வெடிக்க செய்ததில் ஜீப்பில் இருந்த காவல் ஆய்வாளர் பழனிச்சாமி, தலைமை காவலர் ஆதிகேசவேலு, காவலர்கள் யேசுதாஸ் மற்றும் முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். இந்த நிலையில் ஆண்டு தோறும் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் வீரமரணம் அடைந்த 4 காவல் துறையினருக்கு திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தில் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருவது வழக்கம் இந்த நிலையில் இன்று மத்திய பாதுகாப்பு படையின் முன்னாள் இயக்குனரும் மற்றும் வீரப்பன் வேட்டையின்போது அதிரடி படைக்கு தலைமை வகித்த விஜய் அவர்களின் தலைமையில்…

Read More

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு அமல்படுத்தாதது தொடர்பாக மக்களவையில் விவாதிக்க அனுமதி கோரி, திமுக எம்.பி டி.ஆர். பாலு, ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார். அந்த நோட்டீஸில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கு கர்நாடகா தண்ணீர் திறந்துவிடவில்லை என்றும், இதனால் குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டு, டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த இலட்சக்கணக்கான விவசாயிகள் பெரும் நெருக்கடியில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், மேகதாது அணைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் காவிரி நீர் பிரச்சினை மேலும் தீவிரமடையும் என்றும், டெல்டா மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அவசர மற்றும் பொதுமக்கள் நலன் சார்ந்த முக்கிய பிரச்சினையை மக்களவையின் வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்து உடனடியாக விவாதிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று டி.ஆர். பாலு தனது நோட்டீஸில் வலியுறுத்தியுள்ளார்.

Read More

வரும் செப்டம்பர் 14-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, கோவையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பட்டறைகளில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இரவும் பகலும் ஓய்வின்றி கலைஞர்கள் விநாயகர் சிலைகளை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதால், பட்டறைகளிலேயே திருவிழா களைகட்டத் தொடங்கியுள்ளது. பல தலைமுறைகளாக இந்தக் கலைத் தொழிலை மேற்கொண்டு வரும் கைவினைக் கலைஞர்கள், இந்த ஆண்டும் பக்தர்களை கவரும் வகையில் பல்வேறு புதிய வடிவமைப்புகளில் விநாயகர் சிலைகளை உருவாக்கி வருகின்றனர். இந்த ஆண்டு சிறப்பம்சமாக, பாகுபலி ஸ்டைல் விநாயகர், சிவன் தலையுடன் வடிவமைக்கப்பட்ட விநாயகர், குதிரை மற்றும் மயில் வாகனங்களில் காட்சியளிக்கும் விநாயகர், 8 அடி உயர மங்கள விநாயகர், மேலும் காளையுடன் மயில் வடிவில் 11 அடி உயர சிறப்பு விநாயகர் உள்ளிட்ட பல்வேறு புதிய மாடல்கள் தயாராகி வருகின்றன. 3 அடி முதல் 11 அடி உயரம் வரை பல்வேறு அளவுகள் மற்றும் வடிவமைப்புகளில்…

Read More

இந்தாண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலன தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில் தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த பட்ஜெட் வெற்று அறிக்கை என விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் ஆக்கப்பூர்வத் திட்டங்களோ, மாநிலத்தின் நிதிச்சுமையைக் குறைக்கும் மாற்றுப்பொருளாதாரப் பெருக்கத்திற்கான நடவடிக்கைகளோ எதுவுமற்று, வெற்றி எனும் பெயரை மட்டுமே கொண்டுள்ள வெற்று அறிக்கைதான் தவெக அரசின் நிதிநிலை அறிக்கை”! என பதிவிட்டுள்ளார்.

Read More

தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விற்கப்படும் மதுபானங்களுக்கும் ரசீது வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் பெரம்பூர், கொளத்தூர்,மாதவரம் உட்பட 30 இடங்களில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்த ஊழியர்கள்  மீது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை செம்பியத்தைச் சேர்ந்த ஜி.தேவராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதுபோல, 2022ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு வரை கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை சம்பந்தபபட்ட  பணியாளர்களிடமிருந்து வசூலித்து அரசுக்கு செலுத்த வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு எதிராக பணி நீக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்தரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, டாஸ்மாக்…

Read More

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர், கலசப்பாக்கம் வட்டாரத்தில் செயல்பட்டு வரும் அனைத்து துறைகளின் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தென்மாதிமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று மாணவ, மாணவிகளின் கற்றல் திறன், வகுப்பறை செயல்பாடுகள் மற்றும் கல்வித் தரம் குறித்து ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து பள்ளியின் சத்துணவுக் கூடத்தை பார்வையிட்டு, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், சுவை, சுகாதார நிலை மற்றும் உணவுப் பொருட்களின் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, சத்துணவு சமைப்பதற்காக வைத்திருந்த அரிசி மூட்டைகள் மழைநீரில் நனைந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், “மழைநீரில் நனைந்த இந்த அரிசியை மாணவர்களுக்கு வழங்குவீர்களா? இதுபோன்ற அரிசியை உங்கள் குழந்தைகளுக்கு கொடுப்பீர்களா?” என்று கடுமையாக கேள்வி எழுப்பினார். இது இன்றோ, நேற்றோ நடக்கவில்லை பல நாட்களாக நடந்துள்ளது என்றும் கடிந்து கொண்டார். மேலும், மாணவர்களின் உடல்நலம் தொடர்பான விஷயங்களில் அலட்சியம் காட்டக் கூடாது…

Read More