Close Menu
    What's Hot

    குளித்தலை; முதலமைச்சரை விமர்சித்து முகநுலில் பதிவு – திமுக ஐ.டி. விங் பிரமுகர் கைது

    பாடநூல் கழகத் தலைவரானார் லயோலா மணி – முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வாழ்த்து

    அமெரிக்கா-ஈரான் போர் பதற்றம்: எகிறும் கச்சா எண்ணெய் விலை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»திருவள்ளூர் : அமோனியா வாயு கசிவு விவகாரம்..! தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல் வைப்பு..!
    Featured

    திருவள்ளூர் : அமோனியா வாயு கசிவு விவகாரம்..! தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல் வைப்பு..!

    Editor web4By Editor web4July 13, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    10 4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருவள்ளூரில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு 18 பேர் உயிரிழந்த விவகாரத்தில் அந்த தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேரில் கடல் மற்றும் உணவுப்பொருட்கள் ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்தது. இங்கு கடந்த மாதம் 21-ம் தேதி அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதில் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 18 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

    இவர்களில் பெரும்பாலானோர் வடமாநிலத் தொழிலாளர்கள். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விபத்துக்கு பிறகு தொழிற்சாலை மூடப்பட்டு அமோனியா வாயு அகற்றும் பணி சுமார் 4 நாட்களாக நடைபெற்று வந்தது.

    அதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் அலுவலகம், குடோன், தளவாட அறை, குடியிருப்பு உள்ளிட்ட 5 பகுதிகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். தொழிற்சாலையில் கழிவுநீர் அகற்றும் பணியுடன், வளாகத்தில் உள்ள சுமார் 20 மரங்களை வெட்டி அகற்றும் பணியும் நடைபெற்றது.

    அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், தொழிற்சாலையின் பிரதான நுழைவாயிலுக்கு அதிகாரப்பூர்வமாக இன்று ‘சீல்’ வைக்கப்பட்டது. திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆலைக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரத்தை வருவாய்துறை அதிகாரிகள் துண்டித்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்திய பங்குச் சந்தையில் அதிகரித்த அந்நிய முதலீடு… காரணம் என்ன?
    Next Article அமெரிக்கா-ஈரான் போர் பதற்றம்: எகிறும் கச்சா எண்ணெய் விலை!
    Editor web4

    Related Posts

    குளித்தலை; முதலமைச்சரை விமர்சித்து முகநுலில் பதிவு – திமுக ஐ.டி. விங் பிரமுகர் கைது

    July 13, 2026

    பாடநூல் கழகத் தலைவரானார் லயோலா மணி – முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வாழ்த்து

    July 13, 2026

    அமெரிக்கா-ஈரான் போர் பதற்றம்: எகிறும் கச்சா எண்ணெய் விலை!

    July 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    குளித்தலை; முதலமைச்சரை விமர்சித்து முகநுலில் பதிவு – திமுக ஐ.டி. விங் பிரமுகர் கைது

    பாடநூல் கழகத் தலைவரானார் லயோலா மணி – முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வாழ்த்து

    அமெரிக்கா-ஈரான் போர் பதற்றம்: எகிறும் கச்சா எண்ணெய் விலை!

    திருவள்ளூர் : அமோனியா வாயு கசிவு விவகாரம்..! தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல் வைப்பு..!

    இந்திய பங்குச் சந்தையில் அதிகரித்த அந்நிய முதலீடு… காரணம் என்ன?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.