தமிழ்நாடு முழுவதும் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு இன்று நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் சுமார் 1,212 ஆசிரியர்கள் இந்த தேர்வை 4 தேர்வு மையங்களில் எழுதினர். இந்த நிலையில் ஸ்ரீ பெல் ராமகிருஷ்ணா மேல்நிலை பள்ளி வளாகத்தில் இடைநிலை தேர்வில் கலந்து கொள்ள அரக்கோணம் பகுதியிலிருந்து வந்த பெண் ஆசிரியர் ஒருவர் சில நிமிடங்கள் தாமதமாக வந்துள்ளார்.
இதனை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், தாமதம் மற்றும் ஒரிஜினல் ஆதார் கார்டை எடுத்து வராததால் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கவில்லை. தன்னை தேர்வு எழுத அனுமதிக்குமாறு அவர் அதிகாரிகளிடம் கெஞ்சிய காட்சி காண்போரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
