Author: Editor web4

பழநி முருகன் கோயில் நில விவகாரத்தில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய குற்றச்சாட்டின் கீழ், வினோத் சூர்யகுமார் என்பவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். பழநி கோயில் நில மோசடி விவகாரம் தொடர்பாக சமூக ஊடகங்களில் போலியான மற்றும் அவதூறான தகவல்களைப் பரப்பியதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் உதவியாளர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது அமைதியைக் குலைப்பது, கலவரத்தைத் தூண்டும் வகையில் செயல்படுவது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு வினோத் சூர்யகுமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், தன் மீது அரசியல் உள்நோக்கத்துடன் தொடரப்பட்ட வழக்கு என்றும், பேச்சுரிமை கருத்தரிமை சுதந்திரத்திற்கு எதிரானது என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி…

Read More

தமிழக முதலமைச்சர்  விஜய் நடிப்பில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள ஜனநாயகன் திரைப்படத்தை, தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள திரையரங்கில் கட்சியினருடன் நேரில் சென்று பார்த்தார். மேலும், தியேட்டருக்கு வந்திருந்த ரசிகர்களுக்கு அவர் இனிப்புகளை வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் நடித்த கடைசித் திரைப்படம் என்பதால் ஜனநாயகன் படத்திற்கு அனைத்து வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இத்திரைப்படம் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே திரைக்கு வர வேண்டியதாக இருந்தது. ஆனால், அரசியல் காரணங்கள் மற்றும் தணிக்கைத்துறையின்  கடுமையான கட்டுப்பாடுகள், பல்வேறு தடைகள் காரணமாக இதன் ரிலீஸ் தள்ளிப்போனது. அனைத்துப் பிரச்சினைகளும் சுமுகமாக முடிந்த நிலையில், இன்று உலகம் முழுவதும் இப்படம் மிக பிரம்மாண்டமாக தியேட்டர்களில் வெளியானது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள இரண்டு முக்கிய திரையரங்குகளில் ஜனநாயகன் திரைப்படம் இன்று திரையிடப்பட்டது. காலை முதலே ரசிகர்கள்…

Read More

நீண்ட இழுபறிக்கு பிறகு முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், கோவையிலும் ஜனநாயகன் திரைப்படம் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் முதல் தவெக நிர்வாகிகள் வரை அனைவரும் பட்டாசு வெடித்து கொண்டாடினர். கோவை உப்பிலிபாளையம் காஸ்மோ திரையரங்கில் ஜனநாயகன் ஒன்பது மணி காட்சிக்கு சிறப்பு ஏற்பாடுகளை தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக கோவை கிழக்கு மாவட்ட செயலாளர் விஜய் யுவராஜ் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும்,  முதலமைச்சருமான விஜயின் கடைசி திரைப்படம் ஜனநாயகன் என்பதால் இதனை என்றும் தன்னுடைய மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக கட்சியின் சின்னமான விசில் சின்னத்தை கையில் பொறிக்க வேண்டும் திரைப்படம் தொடங்கிய சில நிமிடங்களை மட்டும் பார்த்துவிட்டு திரையரங்க வாயிலில் பச்சை குத்தி கொண்டார். சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிரி பிரசாத் அருகில் அமர வைத்துக்கொண்டு கட்சியின்…

Read More

இயக்குநர் நாகராஜ் இயக்கியுள்ள ஆகாயம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். டெல்டா டாக்கீஸ் பட நிறுவனம் சார்பில் ஜெயச்சந்திரன் மற்றும் கார்த்திகா தேவி இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படம் “ஆகாயம் “. “தினந்தோறும்” திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் நாகராஜ்,  இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய “மின்னலே”, “காக்க காக்க” உள்ளிட்ட வெற்றிப் படங்களில் கதாசிரியராக பணியாற்றினார் என்பது குறிப்பிடதக்கது. அவர், தற்போது “ஆகாயம்” திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். “கன்னி மாடம்” திரைப்படத்தின் மூலம் தனது இயல்பான நடிப்பால் அனைவரின் கவனம் ஈர்த்த ஸ்ரீராம் கார்த்திக் இப்படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஆலிஷா மிராணி அறிமுகமாகிறார். மேலும் ஷீலா, கனிகா, சந்தான பாரதி, ஜெயபிரகாஷ், கிரி துவாரகிஷ், ஸ்ரீ தேவகிருஷ்ணன், “மெய்யழகன்” படத்தில் நடித்த இந்துமதி மணிகண்டன், தீபா, “மகாராஜா” திரைப்படத்தில் நடித்ததற்காக  தேசிய விருது பெற்ற சஞ்சனா நமீதாஸ்,…

Read More

வேல்ஸ் அறக்கட்டளையின் கணக்குகளை தணிக்கை செய்ய உத்தரவிடக் கோரி ஐசரி கணேசனின் சகோதரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். சென்னை வேல்ஸ் அறக்கட்டளை நிர்வாகத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க ஐசரி கணேஷ் உள்ளிட்ட அறங்காவலர்களுக்கு தடை கோரி அவரின் சகோதரியும், வேல்ஸ் அறக்கட்டளையின் ஆயுள் கால அறங்காவலருமான அழகு தமிழ் செல்வி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பிரபல மறைந்த நடிகர் ஐசரி வேலனின் நினைவாக கடந்த 1992-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை வேல்ஸ் கல்வி அறக்கட்டளையின் நிர்வாகத்தில் ஐசரி கணேசன் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் அறங்காவலர்களாக இருந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு தனக்கும் சில அறங்காவலர்களுக்கும் தெரியாமல் வேல்ஸ் அறக்கட்டளையின் அறங்காவலர்களை குறைக்கும் வகையில் விதிகளில் மாற்ற செய்ததாகவும், சில அறங்காவலர்களின் ராஜினாமா கடிதங்கள் போலியாக தயாரிக்கப்பட்டு, பிற அறங்காவலர்கள் நிர்வாகத்தில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும்…

Read More

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே பல உணவகங்கள் உள்ளது. அவற்றில் ஒன்றான துர்கா பவன் உணவகத்தில் பல வாடிக்கையாளர்கள் மதிய சாப்பாடி சாப்பிட வந்துள்ளனர். சாப்பாடு சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே சிலருக்கு வாயில் எரிச்சல் ஏற்பட்டதோடு, வாந்தியும் வந்ததாக தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் உணவக உரிமையாளரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிரச்சனை பெரிதானதை அடுத்து, உணவக நிர்வாகத்தினர் வாடிக்கையாளர்கள் சாப்பிட்ட இலைகளை உடனடியாக அப்புறப்படுத்தி மறைத்ததாக கூறப்படுகிறது. இது வாடிக்கையாளர்களின் கோபத்தை மேலும் அதிகரித்தது. உணவக நிர்வாகம் இது குறித்து தெரிவிக்கையில் வழக்கமாக கேன் குடிநீரில் சமைப்போம் என்றும் இன்று மெட்ரோ குடிநீரில் சமைத்தோம் சமைக்க பயன்படுத்திய நீரில் குளோரின் அதிக அளவில் கலந்திருந்ததால் இந்த பிரச்சினை என்று விளக்கம் அளித்தனர். இச்சம்பவம் குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உணவகத்தில் பயன்படுத்தப்படும் நீர் மற்றும் உணவுப் பொருட்களை பரிசோதிக்க வேண்டும் என சாப்பிட…

Read More

தமிழக முதல்வர் குறித்து சர்ச்சைகுரிய வகையில் பேசியதால்  விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், மார்க்கண்டேயன் தரப்பு வழக்கறிஞர் காசிராஜன்,   மார்க்கண்டேயனை விடுவிக்க கோரி தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் மனு தாக்கல் செய்திருந்தார். அதுமட்டுமின்றி குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணன் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற மனு மீதான விசாரணையும் வந்த நிலையில், தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் என் ஒன்று நீதித்துறை நடுவர் சுமதி மார்க்கண்டேயனை நீதிமன்றத்தில் 3 மணிக்கு ஆஜர் படுத்த உத்தரவு பிறப்பித்தார். இந்தநிலையில் மார்க்கண்டேயனை பாளையங்கோட்டை சிறைச்சாலையில் இருந்து போலீசார் தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது, அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ஸ்ரீதேவி வாதாடும் போது, கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி ஆகியோர்…

Read More

கேரளம் மாநிலம் காசர்கோடு அருகே பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கேரளம் மாநிலம் காசர்கோடு மாவட்டத்திலுள்ள இரண்டு பள்ளிகளை சேர்ந்த பள்ளி மாணவர்களை ஏற்றி கொண்டு ஆட்டோ  ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. ஆட்டோ காசர்கோடு சந்தை சந்திப்பு அருகே வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த பள்ளி மாணவர்கள் 7 பேர் படுகாயமடைந்தனர். இதேபோல் ஆட்டோ ஓட்டுனரும் ஆட்டோவின் அடியில் சிக்கி தவித்தார். இதையடுத்து விபத்தில் படுகாயமடைந்த பள்ளி மாணவர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனரை அப்பகுதியினர் மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து காசர்கோடு போக்குவரத்து  காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டபோது ஆட்டோவில்  அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான மாணவர்களை ஏற்றியதுடன் அதிவேகமாக வந்ததே விபத்துக்கு காரணம் என…

Read More

உலகிலேயே தொழில்நுட்பத்திற்கு முன்னோடி நாடு என்றால் அது ஜப்பான் தான். மக்கள் தொகையும் இங்கு அதிகம். அதேப் போல மனிதர்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களுக்கும் வித்தியாசமான தொழில்நுட்ப இயந்திரங்களும் அங்கு ஏராளம். இயந்திரம் போல ஓடும் மனிதர்களுக்கு இந்திரங்கள் மூலமே ஓய்வும், நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் பல தயாரிப்புகள் இங்கு நாள்தோறும் கண்டுபிடிக்கப்படுகிறது. இப்போது அடிக்கும் வெயிலுக்கு ஃபிரிட்ஜில் உட்காந்து கொண்டால் நன்றாக இருக்கும் என பலருக்கும் தோன்றியிருக்கும். இல்லையா? அதனை இப்போது நினைவாக்கி இருக்கிறது ஜப்பான். மனிதர்களுகான ஃபிரிட்ஜ்-ஐ கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். தீவிர வெயிலில் வேலை செய்பவர்கள் இந்த அறைக்குள் நுழைந்த 5 நிமிடங்களில் தங்கள் உடல் வெப்பத்தைக் கணிசமாகக் குறைக்க முடியும். மேலும், இந்த சாதனத்தின் உட்புறம் 15°C வெப்பநிலையில் பராமரிக்கப்படுகிறது. குறிப்பாக, பயனரின் தலை, கழுத்து மற்றும் தோள்பட்டைப் பகுதிகளுக்கு 5°C அளவில் குளிர்ந்த காற்று நேரடியாக பரவச் செய்து, உடல் சூட்டை அதிவேகமாகத் தணிக்கிறது. இது…

Read More

இந்தியாவில் வீதிக்கு ஒரு சிக்னல் இருந்தாலும் கூட விபத்துகளை தவிர்க்க முடிந்த பாடில்லை. 7 கண்டங்களை கொண்ட பூமியில், மொத்தம் 195 நாடுகள் உள்ளன. உலக மக்கள் தொகையான 830 கோடியில் அதிகபட்சமாக இந்தியாவில் 147 கோடி பேர் வசிக்கின்றனர். 141 கோடி மக்கள் தொகையுடன் சீனா 2வது இடத்தில் உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை இங்கு மொத்தம் 40 கோடி வாகனங்கள் இருக்கின்றன. தினந்தோறும் விபத்துகளும், சாலை விதி மீறல்களும் இருந்து கொண்டே இருக்கிறது. இதற்கு காரணம், மக்கள் தொகை அதிகரிப்பு ஒருபுறம் இருந்தாலும் கூட போதிய சாலை வசதிகள் இல்லாததும் ஒரு காரணமே. அப்படியிருக்க, இந்தியாவின் பக்கத்து நாட்டில் சிக்னலே இல்லை என்றால் நம்ப முடிகிறதா? இந்தியாவிற்கு மிக நெருக்கத்தில் உள்ளது பூட்டான். உலகிலேயே மிகச்சிறிய நாடுகளில் இதுவும் ஒன்று. இந்தியாவிற்கு மேல் நேபாளத்திற்கு அருகே அமைந்துள்ள இந்திய நாட்டின் மக்கள் தொகை சுமார் 8 லட்சம் தான். தலைநகர்…

Read More