கடலூர் மாவட்டம் பண்ருட்டி -நெய்வேலி சாலையில் உள்ள அண்ணா பொறியியல் கல்லூரி முன்பு இரண்டு இளைஞர்களை, நான்கு இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் காட்சியை பேருந்தில் பயணம் செய்தவர்கள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த பரபரப்பு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
காடாம்புலியூர் காந்தி நகரை சேர்ந்த இரண்டு இளைஞர்களும் மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்களும் நேற்று முன்தினம் மணமேடு பாரில் மது அருந்தி உள்ளனர். அப்போது இளைஞர்களிடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அண்ணா பொறியியல் கல்லூரி அருகே மீண்டும் அதே இளைஞர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவருக்கு ஒருவர் சரமாரியாக தாக்கிய வீடியோ வைரலானது. இந்த தாக்குதலில் காடாம்புலியூர் காந்திநகர் சேர்ந்த அலெக்ஸ், அமிர்தலிங்கம் ஆகிய இருவர் காயமடைந்தனர்.
இந்த மோதல் தொடர்பாக காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட கீழ்மாம்பட்டு சூர்யா, கௌதம், மோகன் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
