Close Menu
    What's Hot

    மனுக்களின் மீது உடனுக்குடன் நடவடிக்கை; தொழிலாளர் நலத்துறை அமைச்சர்  முகமது பர்வேஸ் அறிவுரை

    இஷான் கிஷன் உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன் ஆனார்!.

    அன்வர் ராஜாவுக்கு எதிரான  வழக்கு: நீதிமன்றம் உத்தரவு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தவெக எம்.எல்.ஏவுக்கு ரூ.50கோடி பேரம்; ஸ்டாலினுக்கு வெட்கமில்லையா? – அமைச்சர் நிர்மல்குமார் காட்டம்
    Featured

    தவெக எம்.எல்.ஏவுக்கு ரூ.50கோடி பேரம்; ஸ்டாலினுக்கு வெட்கமில்லையா? – அமைச்சர் நிர்மல்குமார் காட்டம்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 1, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    011 nirmal
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சபாநாயகருக்கு எதிராக திமுக தீர்மானம் கொண்டுவரும் போது தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என தவெக எம்.எல்.ஏக்களுடன் மு.க.ஸ்டாலின் பேரத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

    தமிழக வெற்றிக்கழகத்தை சேர்ந்த ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் திமுகவைச் சேர்ந்தவர்கள் திமுகவிற்கு ஆதரவாக செயல்படுமாறு கூறி பேரம் பேசியதாக காவல்துறையினர் வழக்கு பதிந்து கைது செய்துள்ள நிலையில் சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்

    அப்போது அவர் கூறியதாவது…

    செந்தில்பாலாஜி,  ஸ்டாலின் மற்றும் உதயநிதி உத்தரவின் பேரில்  50 கோடி ரூபாய் வரை தருவதாக கூறி எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேசி உள்ளனர்.

    குதிரை பேரத்தை 40 நாளாக எங்கள் உறுப்பினர்களிடம் திமுகவினர் நடத்தி  வருகின்றனர்.

    இதற்காக யார் யாரிடம் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என பேசி உள்ளனர்.

    இத்தகைய கேவலமான,  கீழ்ததரமான வேலையை ஸ்டாலினும் உதயநிதியும் செய்து வருகின்றனர்..

    சபாநாயகர் மீது  நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப் போவதாகவும் அதை  ஆதரிக்க வேண்டும் என்றும் கூறி   குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    எடப்பாடி பழனிசாமியும் இப்போது திமுக வினரோடு சேர்ந்துள்ளார்

    இதுகுறித்து பல எம்எல்ஏக்கள் கட்சித் தலைமையிடம் புகார் அளித்து உள்ளனர்

    தவெக எம்எல்ஏ க்களிடம் குதிரை பேரத்தில் ஈடுபடுவோர் மீது  சட்டப் பூர்வமாக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இபிஎஸ் – ஐ முதலமைச்சர் ஆக்க அனைத்து கூட்டணி தலைவர்களுடனும் ஸ்டாலின் பேசி உள்ளார் . இதை விட கேவலம் வேறு உண்டா..?

    எங்கள் எமஎல்ஏ-க்களை யாராலும் விலைக்கு வாங்க முடியாது . ஓட்டுக்கு பணம் கொடுத்து தொகுதிக்கு 70 கோடி செலவு செய்து நாங்கள் ஜெயிக்கவில்லை. 2..3 லட்சம் ரூ. மட்டுமே செலவிட்டு எங்கள் எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

    நாளை தேர்தல் வந்தாலும் நாங்கள் தான் ஜெயிப்போம்.

    திமுகவில் ஒரு முதலமைச்சர் வேட்பாளரே தோற்றுப் போய் விட்டார் . ஸ்டாலின் அரசியலை விட்டு விலகி விட வேண்டும்.

    குதிரை பேரத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டவுடன்  அதை சமாளிக்க ஆளுநருக்கு எங்களை குற்றம்சாட்டி கடிதம் எழுதி கொண்டிருக்கின்றனர்

    நாங்கள் யாரிடமும் குதிரை பேரம் பேசவில்லை . 120 உறுப்பினர்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளது. திமுகவினர் மக்கள் தீர்ப்பை ஏற்க வேண்டும்.

    அதிமுகவில் இனி யாருக்கும் அரசியல் எதிர்காலம் இல்லை.  நாங்கள் யாரிடமும்  பேசி எங்கள் கட்சியில் இணைக்க வில்லை

    உதயநிதி அரசியலில் இனி தேற மாட்டார் என ஸ்டாலினுக்கு தெரியும் . கடந்த ஒருவாரமாக உதயநிதி துபாயில்தான் உள்ளார்.

    திராவிட மாடல் என்றுதான் தனது ஆட்சியை ஸ்டாலிடன் கூறினார்  , ஸ்டாலின் மாடல் என கூறும் தைரியம் அவருக்கு எப்போதும் இருந்தது இல்லை

    பலரிடமும் திமுகவினர் பேசி இருக்கலாம் ,  ஆதாரத்துடன் ஒரு எம்எல்ஏ காவல்துறையில் புகார் அளித்துள்ளார்

    இதற்குமேல் கேவலமான விசயத்தை திமுகவால் செய்ய முடியாது.

    வைகோ  எங்களுடன் சேர்ந்து பயணிக்க ஆர்வமாக  உள்ளேன் என்றுதான் கூறினார்

    அதிமுகவில் இருப்பவர்கள் உணர்ச்சிவசப்பட்டு , வருத்தத்தில் தங்கள் பதிவியை ராஜினாமா செய்துள்ளனர்.

    அதிமுகவில் இருந்து விலகியவர்களுக்கு உடனடியாக எப்படி ஐடி கார்ட் கிடைக்கும் என கேட்கிறீர்கள். ஆன்லைனில் பதிவு செய்தால் எங்கள் கட்சியில் புகைப்படத்துடன் ஐடி கார்ட் உடனே வழங்கப்படும் , இது வழக்கமானதுதான்

    நாங்கள் யாரிடமும் எம்எல்ஏ  பதவியை ராஜினாமா செய்ய சொல்லவில்லை. மதிமுக உறுப்பினர்கள் ராஜினாமா செய்தால் அவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் என ஒருபோதும் முதலமைச்சர் கூறி இருக்க மாட்டார்.

    விஜயபாஸ்கர் மீது ஊழல் வழக்குகள் இருப்பதாக கேட்கிறீர்கள், தனி நபராக அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு எங்கள் கட்சிக்கு வருகின்றார் , இதுபோல நாள்தோறும் பலர் வருகின்றனர்.

    அவர்கள் மீது வழக்குகள் நிலுவையில் இருந்தால் எந்த விதத்திலும் சட்டப் பூர்வமாக , அவர்களுக்கு நாங்கள் உதவ மாட்டோம்.

    சட்டப்பூர்வமாகத்தான் அவர்கள் தங்கள் பழைய வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

    DMK minister nirmal kumar MK Stalin Nirmal Kumar TVK
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“அமைச்சர் உறவினர்” எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்
    Next Article மதுரை ரயில் நிலையத்தில் காதல்கோட்டை க்ளைமேக்ஸ் – அஜித், தேவயானியாக ரீல்ஸ் எடுத்த ஜோடி!
    Editor TN Talks

    Related Posts

    மனுக்களின் மீது உடனுக்குடன் நடவடிக்கை; தொழிலாளர் நலத்துறை அமைச்சர்  முகமது பர்வேஸ் அறிவுரை

    July 1, 2026

    இஷான் கிஷன் உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன் ஆனார்!.

    July 1, 2026

    அன்வர் ராஜாவுக்கு எதிரான  வழக்கு: நீதிமன்றம் உத்தரவு

    July 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மனுக்களின் மீது உடனுக்குடன் நடவடிக்கை; தொழிலாளர் நலத்துறை அமைச்சர்  முகமது பர்வேஸ் அறிவுரை

    இஷான் கிஷன் உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன் ஆனார்!.

    அன்வர் ராஜாவுக்கு எதிரான  வழக்கு: நீதிமன்றம் உத்தரவு

    மோசடி வழக்கு; திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கரனிடம் 4 மணி நேரம் விசாரணை – தன் மீது பொய்க் குற்றச்சாட்டு என பேட்டி

    நீதிபதிகளின் உதவியாளர்கள் நியமனம் ரத்து; மீண்டும் தேர்வு நடத்த உத்தரவு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.