Author: Editor web4
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பூர் பேட்டை பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில், “எங்கள் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும் எங்கள் பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவிலில் சாமிக்கு சொந்தமான தங்க நகைகளை தங்கள் பகுதிகளில் உள்ள குடும்பங்கள் ஏதாவது கஷ்டம் என்று கேட்டால் அந்த நகைகளை கொடுத்து உதவுவது வழக்கம். சில மாதங்களில் நகைகளை வாங்கிய நபர்கள் அதற்கு மேலாக கோவிலுக்கு என தங்களால் முடிந்த பண உதவிகளை செய்வதும் உண்டு. அதுபோல கடந்த 18 மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதர் நாட்டார் பொறுப்பில் இருந்த 510 கிராம் கோவில் நகைகளை அதே பகுதியை சேர்ந்த சரவணகுமார், செல்வி, வெங்கடேசன், தொழில் தொடங்க வேண்டும் எனக் கூறி கோவிலுக்கு சொந்தமான நகைகள் வேண்டும் எனவும் மூன்று மாதங்களில் திருப்பித் தருகிறேன் என்று கூறி ஊரார்…
திருவண்ணாமலை மாவட்டம் குப்பனத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சதாம்உசேன். இவர் தனது மனைவி மற்றும் இரண்டு வயது குழந்தையுடன் குப்பநத்தம் பகுதியில் இருந்து ஊத்தங்கரை வழியாக தர்மபுரி மருத்துவமனைக்காக சென்றுள்ளார். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள ஓலைப்பட்டி சிப்காட் அருகே வரும் போது எதிரே காரிமங்கலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வைக்கோல் ஏற்றி வர சென்ற வாகனம் பிக்கப் வாகனம் மீது மோதியதில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த சதாம்உசேன் மனைவி சபீனா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் சதாம்உசேன் மற்றும் அவரது இரண்டு வயது குழந்தை பலத்த காயங்களுடன் போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, கவலைக்கிடமான நிலையில் கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் புலியூரில் இருந்து சிப்காட் வரை செல்லும் சாலை ஒரு வழிச்சாலை என்பதால் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஊழியர்களை ஏற்றுச்…
என்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான பொதுக்கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாக தொடங்கியது. நடப்பு கல்வியாண்டில் என்ஜினியரிங் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள இடங்களில் சேர 2.45 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு அவர்களில் 2.36 லட்சம் பேர் தகுதி பெற்றனர். அவர்களது தரவரிசைப்பட்டியல் ஜூலை 1-ம் தேதி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, முதல்கட்டமாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டு பிரிவில் சிறப்பு பிரிவினருக்கான (மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள்) இணையவழி கலந்தாய்வு கடந்த 13, 14-ம் தேதிகளில் நடத்தப்பட்டது. அதன்மூலம் 137 பேருக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. அதன்பிறகு, சிறப்பு பிரிவினருக்கான பொதுக் கலந்தாய்வு 15-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில், பொறியியல் படிப்புக்கான இணையவழி பொதுக்கலந்தாய்வு ஏற்கெனவே அறிவித்தபடி, இன்று (20-ம் தேதி) தொடங்கியது. ஆக.30-ம் தேதி வரை இந்த கலந்தாய்வு 3 சுற்றுகளாக நடைபெறும். முதல் சுற்று கலந்தாய்வு இன்று…
தூத்துக்குடியில் கடந்த 18-ம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய அவர், தவெக குறித்தும் முதலமைச்சர் விஜய் குறித்தும் அவதூறாக பேசியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் அதிரடியாக போலீசாரால் அவரது வீட்டிலேயே வைத்து கைது செய்யப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள், வீட்டின் முன் குவிந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், திமுக எம்.எல்.ஏ அராஜக முறையில் கைது செய்யப்பட்டு இருப்பதாக கோவில்பட்டி திமுக எம்.எல்.ஏ கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ”விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசிய பேச்சுக்கு அமைப்புச் செயலாளர் விளக்கம் கொடுத்துவிட்டார். கரூர் சம்பவத்தின் போது முட்டாள் முதல்வர் என்று எல்லாம் கூறினார்கள். அப்போது நாங்கள் எதுவும் செய்யவில்லை. கருத்து சுதந்திரம் கொடுக்கக்கூடிய நாட்டில் அராஜக முறையில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். பார்க்க அனுமதிக்கபடவில்லை.…
உலக்க கோப்பை கால்பந்து தொடரானது கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டி அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் மைதானத்தில் நடைபெற்றது. இதில், கடந்தாண்டு சாம்பியனான அர்ஜெண்டினாவும், ஸ்பெயின் அணியும் மோதின. இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்பெயின் அணி, 1-0 என்ற கணக்கில் அர்ஜெண்டினாவை தோற்கடித்து 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இவர்களுக்கான சாம்பியன் பட்டத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் வழங்கினார். இந்த தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாததால், கண்ணீருடன் விடைபெற்றார் அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி. உலகக்கோப்பையில் மெஸ்ஸியின் கடைசிப் போட்டியாகக் இது கருதப்படுகிறது. இந்த தொடரில் ரன்னர்-அப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்ட பின், மைதானத்திலேயே மெஸ்ஸி கண்ணீர் விட்டு அழுதது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் அர்ஜெண்டினா கால்பந்து கூட்டமைப்பு தனது எக்ஸ் தள பக்கத்தில் மெஸ்ஸிக்காக ஒரு நெகிழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளது. அதில், ”எங்கள்…
பழநி முருகன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை ரூ.100கோடிக்கு மோசடி செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிபிசிஐடி விசாரணை ஒருபக்கம், திமுக நிர்வாகிகள் வீட்டில் சோதனை ஒருபக்கம் என விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த விவகாரத்தில் எச்.ராஜாவை தொடர்புப்படுத்தி அண்ணாமலை பேசியிருந்தார். இதற்கு எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பொள்ளாச்சியில் நடந்த என்.ஜி.ஓ. கூட்டத்தில் அண்ணாமலை பேசும் போது என்னுடைய பெயரை இழுத்து விட்டு தன் பக்கத்தில் நியாயம் இருப்பது போல் அண்ணாமலை பேசி இருக்கிறார். அதில் கோவில் இடத்தை பராதீனப்படுத்தலாம் என்று நான் கூறியதாக கூறி இருக்கிறார். இப்போதைய முதலமைச்சர் விஜய் அரசில் சபாநாயகர் சட்டசபையில் பைபிளில் இருந்து மேற்கோள் காட்டுகிறார். ஏன் குரானில் இருந்து தேவார பாடல்களில் இருந்து மேற்கோள் காட்டவில்லை? அப்படியானால் இந்த அரசு ஜனநாயக அரசு இல்லையா? இதை கண்டிக்க துணிச்சல் இல்லாத அரசியல்…
இந்திய திரையுலகை ஹாலிவுட் தரத்திற்கு எடுத்துச் சென்ற இயக்குநர்களில் மிக முக்கியமானவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. இவரது பாகுபலி திரைப்படம் வரலாற்று சாதனை படைத்தது. இந்திய அளவில் அதிக வசூலை குவித்ததுடன், பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதன் இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து அவர் இயக்கி இருந்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படமும் பாகுபலியை போன்றே பான் இந்தியா திரைப்படமாக உருவாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அத்தோடு இப்படத்தில் இடம்பெற்றிருந்த நாட்டு கூத்து பாடலுக்காக படத்தின் இசையமைப்பாளர் கீரவாணிக்கு ஆஸ்கர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அவரது அடுத்த லட்சியப் படைப்பான வாரணாசி திரைப்படம் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. சுமார் ரூ.1,400கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படம் கி.பி.512 முதல் தற்காலம் வரை திரேதா யுகம் முதல் கலியுகம் வரை எனப் பல காலகட்டங்களை இணைக்கும் ஒரு அறிவியல் புனைகதை மற்றும் ஆன்மீக…
தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் விக்ரம் 1 என்ற ராக்கெட்டை தயாரித்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்திலிருந்து இன்று 11.30 மணிக்கு விண்ணில் எவப்பட இருந்தது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதமாகியது. தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதை அடுத்து 20 நிமிட கவுண்டன் மீண்டும் தொடங்கி, 12.05 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இந்தியாவின் முதலாவது தனியார் ராக்கெட் விக்ரம் 1 நண்பகல் 12.05க்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-1 எடுத்துச்சென்ற செயற்கைக்கோள் புவிவட்டப்பாதையில் செலுத்தப்பட்டது. விக்ரம்-1 ஆனது கிரகா ஸ்பேஸ், காஸ்மோசர்வ், டிகியூப்ட் மற்றும் ஸ்கைரூட்டின் சொந்த ஸ்கோப் ஆகியவற்றிலிருந்து தொழில்நுட்ப விளக்க ஆய்வு கருவிகளை எடுத்துச் செல்கிறது. அத்துடன், காஸ்மோஸ் டயமண்ட்ஸின் கலைப்படைப்பான ‘காஸ்மிக் புளூம்’ மற்றும் ஒரு மைக்ரோ-ஆர்ட் பீஸ் கொண்டு…
சென்னையிலிருந்து மதுரை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையிலிருந்து நேற்று நள்ளிரவு மதுரை நோக்கி 20 பயணிகளுடன் ஆம்னி பேருந்து ஒன்று புறப்பட்டது. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரில் அயன்பேரையூர் பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது தீடீரென பேருந்து தீப்பிடிக்க ஆரம்பித்தது. இதனை அறிந்த ஓட்டுநர் சாதுர்யமாக செயல்பட்டு பேருந்து நிறுத்தியதுடன், பயணிகளை கீழே இறக்கினார். இதனால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. தீ மளமளவென பேருந்து முழுவதும் பரவியது. இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் விசைப்படகுகளும் கட்டுமாவடி, புதுக்குடி, ஆர்.புதுப்பட்டிணம், முத்துக்குடா போன்ற நாட்டுப் படகு மீனவர்களும் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி படகுகளை பாதுகாப்பான இடத்தில் கரையேற்றி வைக்கவும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தி வைக்குமாறு மீன்வளத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.