Author: Editor web4

சென்னையின் வெளிப்புற பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையிலும், பயண நேரத்தை குறைக்கும் வகையிலும் பல்வேறு பாலங்கள் மற்றும் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், சென்னை இ.சி.ஆர் சாலையில், திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை சுமார் 13.3கிலோ மீட்ட தொலைவிற்கு உயர்மட்ட மேம்பாலச் சாலை அமைப்பதற்கு டெண்டர் கோரப்பட்டிருந்தது. அதனடிப்படையில் சுமார் ரூ.2,100கோடி மதிப்பீட்டில் இந்த ஒப்பந்தம் தனியார் நிறுவனத்திற்கு கடந்த ஆண்டில் வழங்கப்பட்டிருந்தது. இந்த ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு குற்றம் சாட்டி வண்டது. சமீபத்தில் கரூருக்கு சென்றிருந்த முதலமைச்சர் கூட, இது குறித்து குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், திருவான்மியூர் – உத்தண்டி உயர்மட்ட மேம்பாலச் சாலை திட்டத்தை ரத்து செய்வதாக ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு கொடுக்கப்பட்ட ஒப்பந்தத்தை ஆய்வு செய்யும் படியும்…

Read More

இங்கிலாந்தில் உயர்க்கல்வி பயின்று வந்த பஞ்சாப்பை சேர்ந்த மாணவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சமப்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் டர்ன் தாரன் பகுதியை சேர்ந்தவர் கிரந்தீப் கவுர் என்ற 24 வயது இளம்பெண். இவர் 2 வருடத்திற்கு முன்பு மாணவர் விசாவில் இங்கிலாந்திற்கு சென்றுள்ளார். தனது படிப்பை முடித்த அவர், லண்டனின் ஆக்ஸ்பிரிட்ஜ் சாலையில் உள்ள ஒரு வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 12-ம் தேதி காலை கிரந்திப் கவுர் தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்த போது, உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர் அவரை தாக்கியுள்ளார். கிரந்தீப் அவரிடம் இருந்து தப்பிக முயல, தனது பாக்கெட்டிலிருந்து கத்தியை எடுத்து கிரந்தீப்பின் வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதியில் 5 முறை குத்திவிட்டு தப்பியோடியுள்ளார். இந்த கோர நிகழ்வில் படுகாயமடைந்த கிரந்தீப் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த லண்டன் போலீஅசர் கிரந்தீப்பின் உடலைக்…

Read More

90 பிச்சர்ஸ் புரொடக்ஷன் நிறுவனத்தின் தலைவர் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் அருள்நிதி, ரம்யா பாண்டியன், ஆரவ்கிஸ்சர், கீர்த்தீகா பாசு ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ளது ’அருள்வான்.’ ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படம், காடர் இன மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறையும், கல்விக்காக அவர்கள் எதிர்கொண்ட போராட்டங்களை குறித்து எடுக்கப்பட்டுள்ளது. ‘அருள்வான்’ திரைப்படம் முழுக்க முழுக்க மலைவாழ் மக்களின் கதை என்பதால் இன்று பொள்ளாச்சி சக்தி திரையரங்கில் மலைவாழ் மக்களுக்கு என சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இதில் பொள்ளாச்சி மேற்கு தொடர்ச்சி பகுதியில் வசிக்கும் 300-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து திரைப்படத்தை பார்த்தனர். திரைப்படத்தில் வரும் காடர் இன மக்களின் வாழ்க்கை முறை குறித்த காட்சிகளை கண்டு  ஆரவாரத்துடன் கைதட்டையும், வனப்பகுதியில் மலைவாழ் மக்கள் படும் வேதனைகள் நிறைந்த காட்சிகளை கண்டு கண்ணீர் விட்டனர். மலைப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறை குறித்தும், கல்விக்காக…

Read More

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியத்தில் உள்ள கிள்ளியூர் ஊராட்சியில் 500 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெற்பயிர்கள் வளர்ந்து வரும் நிலையில் காவிரிநீர் இல்லாமலும், மழை  பெய்யாததாலும் குறுவை சாகுபடி முற்றிலும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர் உப்புநீராக உள்ளதால் சுமார் 200 ஏக்கருக்கு மேல் ஒரு மாத கால பயிர்கள் பாதிக்கப்பட்டு தற்பொழுது வேர்கள் அழுகியும் நெற்பயிர்கள் கருகியும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதேபோன்று மாத்தூர், நல்லுச்சேரி, கீழ்மாத்தூர் ஆக்கூர் உட்பட பல இடங்களில் குருவை சாகுபடி செய்த நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி உள்ளதாக கூறும் விவசாயிகள் வேளாண்மை துறையினர் பார்வையிட்டு ஆலோசனை வழங்கவும், உடனடியாக பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை ஆய்வு செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More

ஐரோப்பிய நாடுகளில் புதிய வாழ்வை தேடி மத்திய தரைக்கடலைக் கடக்க முயலும் அகதிகளுக்கு, லிபியா தொடக்கப் புள்ளயாக உள்ளது. கடந்த 2011ல் நேட்டோ ஆதரவு பெற்ற புரட்சியின் மூலம் லிபியாவின் நீண்டகால அதிபரான கடாபி வீழ்த்தப்பட்டு கொல்லப்பட்டார். அதன்பின்னர், அங்கு நிலவி வரும் அரசியல் குழப்பங்களையும் உள்நாட்டுக் கலவரங்களையும் கடத்தல்காரர்கள் சாதகமாக்கிக் கொண்டுள்ளனர். ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வறுமை மற்றும் போர் காரணமாக ஓடிவரும் அகதிகளை ஐரோப்பாவிற்கு அனுப்பும் முக்கிய மையமாக லிபியாவை மாற்றியுள்ளனர். அதிக பணத்தைப் பெற்றுக்கொண்டு, தகுதியற்ற மற்றும் மிகவும் பலவீனமான சிறிய படகுகளில் நூற்றுக்கணக்கான அகதிகளை அடைத்து அனுப்புகின்றனர். இதனால் கடல் பயணத்தின்போது அடிக்கடி விபத்துகள் நேரிட்டு ஆயிரக்கணக்கானோர் பலியாகின்றனர். அந்த வகையில், ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு நாள்தோறும் அகதிகள் வருவது உண்டு. அந்த வகையில், சுமார் 60 அகதிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட படகு ஒன்று…

Read More

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பெட்டமுகிலாளம் மலை கிராமத்திலும், தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மாரண்டஹள்ளி பகுதியிலும் இன்று மாலை 7.52 மணி அளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. பூமியின் அடிப்பரப்பில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது மிகவும் லேசான அளவிலான நிலநடுக்கம் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் பீதியடைய வேண்டிய அவசியம் இல்லை என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவாகும் நில அதிர்வுகளால் கட்டிடங்களுக்கோ, பொதுமக்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை. இது பூமியின் உள்ளமைப்பில் ஏற்படும் சாதாரண அழுத்த வெளியீடு மட்டுமே எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. ஏதேனும் சேதம் அல்லது அசாதாரண அதிர்வு உணரப்பட்டால் உடனடியாக…

Read More

செங்கல்பட்டு மாவட்டம் திருப்பூர் தொகுதிக்குட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும், தமிழக வெற்றி கழக நிர்வாகியுமான வீரா (எ) வீராசாமி ஒப்பந்ததாரிடம் ரூ.1.30லட்சம் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தாழம்பூர் காவல்துறையினர் அதிரடியாக  வீராசாமியை கைது செய்தனர். லஞ்சம் வாங்கியதாக இணையத்தில் வெளியிட்ட வீடியோவால் ஒப்பந்ததாரர் நவீன் என்பவரை மிரட்டியதாகவும், கூறப்படும் நிலையில் ஒப்பந்ததாரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தாழம்பூர் போலீசார் வீராசாமியை கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் வீராசாமி தவெகவில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று காலை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், அர்ஜென்டினா அணி இங்கிலாந்தை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் தீவிரமாக போராடியும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்டம் முதல் பாதியில் சமனில் இருந்தது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியில் இங்கிலாந்து அணியின் கார்டன் 55வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் இங்கிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து, அர்ஜென்டினா அணியின் என்சோ பெர்னாண்டஸ், லடாரோ மார்டினஸ் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினர். இதனால் ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது அர்ஜென்டினா அணி. இறுதிப் போட்டியில் ஸ்பெயின்…

Read More

திருப்பத்தூர் அருகே இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில், பெண்ணின் கணவர், மாமியார் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் எர்ரம்பட்டி பகுதியைச் சேர்ந்த தயாநிதி என்பவர் ஓசூரில் தனியார் செல்போன் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் கந்திலி பகுதியை சேர்ந்த சராதா என்பவரை கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். சாரதாவை தயாநிதியின் தாயார் மற்றும் அவரது அக்கா, மாமா ஆகியோர் அடிக்கடி ஆபாசமாக திட்டி தொல்லை செய்து வந்ததாக கூறப்படுகிறது. அதேப் போல், குழந்தை இல்லை எனவும் சுட்டிக்காட்டி திட்டி வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த சாரதா கடந்த 13-ம் தேதி மாலை வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் சாரதாவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் தயாநிதி, தாயார் அமுதா உட்பட் 4 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில்…

Read More

திண்டுக்கலில் உள்ள பழநி தண்டாயுதபாணி சுவாமி மடத்தின் ரூ.100கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலம் பக்தர்களுக்கான இலவச வாகன நிறுத்தும் இடமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலத்தை அபகரிக்க பழநி சார் பதிவாளர் ஜஸ்டீன் மணிகண்டன் முயன்றதாக கூறப்படுகிறது. இதற்காக நிலத்துக்கு சம்மந்தம் இல்லாத அறக்கட்டளையைச் சேர்ந்த முருகதாஸ் மூலம் வெள்ளைத்துரை, சேதுபதி ஆகிய இருவருக்கு கடந்த 2026ம் ஆண்டு ஜூலை 8-ந்தேதி கிரையப்பத்திரம் செய்து கொடுத்தார். இது குறித்து கோவில் கண்காணிப்பாளர் முருகானந்தம் பழநி அடிவாரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளை, உச்சநீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள் காட்டி சொத்தை வில்லங்கப்படுத்தக்கூடாது என பத்திரப்பதிவுத்துறைக்கு தெரிவித்தபோதிலும் மோசடி நடந்துள்ளது. இந்த விஷயத்தில் சார்பதிவாளர் உள்ளிட்டோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இனையடுத்து டி.எஸ்.பி. செல்வக்குமார் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் பழநி பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில்…

Read More