Close Menu
    What's Hot

    மரியாதையுடன், கண்ணியத்துடன் இறுதி ஊர்வலம்; தமிழக அரசுக்கு பாக்யராஜ் குடும்பத்தினர் நன்றி

    லஞ்ச ஒழிப்புத்துறை  இயக்குநரால் முதல்வருக்கு அவப்பெயர் – யூடியூபர் சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு

    நீளம் தாண்டுதல் : புதிய சாதனை படைத்த கேரள வீராங்கனை..! அஞ்சு ஜார்ஜ் சாதனை முறியடிப்பு..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும்..! சபரீசன் வக்கீல் நோட்டீஸ்..!
    Featured

    அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும்..! சபரீசன் வக்கீல் நோட்டீஸ்..!

    Editor web4By Editor web4June 28, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    7 11
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் ஆகியோர் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை தெரிவித்ததற்காக, மன்னிப்பு கேட்க வேண்டும் என அரசியல் ஆலோசகர் சபரீசன் தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    சமூக பொருளாதார ஆராய்ச்சி மற்றும் அரசியல் ஆலோசனை பணிகளை மேற்கொள்ளும் பாப்புலஸ் எம்பவர்மெண்ட் நெட்வொர் எனப்படும் பென் நிறுவனத்தின் நிறுவன தலைவரான சபரீசன் சார்பில் வழக்கறிஞர் ஏ.எஸ்.அஸ்வின் பிரசன்னா, தமிழ்நாடு அரசின் பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் மின் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் ஆகியோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    அதில், தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகளில் ஒன்றான திமுக குறித்து, சட்டமன்ற தேர்தலுக்கு முன்பிருந்தே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மூலம் தவெக நிர்வாகிகள் விமர்சித்து வந்துள்ளனர்; திமுக தலைவரும், தமிழக முதலமைச்சராக இருந்தவருமான மு.க.ஸ்டாலினின் மருமகன் என்ற ஒரே காரணத்துக்காக சபரீசன் மீதும் அடிப்படை ஆதாரமற்ற, உள்நோக்கத்துடன் கூடிய, உண்மைக்கு புறமான கருத்துகளை இரண்டு அமைச்சர்களும் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

    தனது நேர்மை, பொது சேவை, உண்மையான, நேர்மையான, அர்ப்பணிப்புமிக்க செயல்பாடுகளின் மூலம் தனிப்பட்ட, சமூக, தொழில் ரீதியான வாழ்க்கை ஆகியவற்றில் களங்கமற்ற நற்பெயரை கொண்டுள்ள சபரீசனுக்கு எதிராக, அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் ஜூன் 25ஆம் தேதி நடந்த ஊடக சந்திப்பில் தெரிவித்த கருத்துகள் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவி, அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி உள்ளன என வக்கீல் நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சபரீசன் குறித்து இரு அமைச்சர்களும் ஊடகங்களில் தெரிவித்த கருத்துகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்; அதே ஊடகங்கள் முன்பாக சபரீசனிடம் இரு அமைச்சர்களும் மன்னிப்பு கேட்க வேண்டும்; சம்பந்தப்பட்ட வீடியோ பதிவுகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; எதிர்காலத்தில் சபரீசனுக்கு எதிராக அவதூறான, இழிவான, உள்நோக்கத்துடன் கூடிய கருத்துகளை வெளியிட மாட்டோம் என நிபந்தனையற்ற உறுதிமொழியை எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும் என வக்கீல் நோட்டீசில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இவற்றை 15 நாட்களுக்குள் செய்யத் தவறினால், பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் குற்றமாக கருத்தப்படும் இந்த அவதூறு கருத்துக்கள் குறித்து, சட்டரீதியான நடவடிக்கையை இரு அமைச்சர்களும் சந்திக்க நேரிடும் என சபரீசன் சார்பில் அனுப்பப்பட்டுள்ள வக்கீல் நோட்டீசில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகழுத்தில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்; விளையாடச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்தது என்ன?
    Next Article செங்கல்பட்டு : அரசு டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..! ஆலயத்திற்கு அருகே இருப்பதாக குற்றச்சாட்டு..!
    Editor web4

    Related Posts

    மரியாதையுடன், கண்ணியத்துடன் இறுதி ஊர்வலம்; தமிழக அரசுக்கு பாக்யராஜ் குடும்பத்தினர் நன்றி

    June 28, 2026

    லஞ்ச ஒழிப்புத்துறை  இயக்குநரால் முதல்வருக்கு அவப்பெயர் – யூடியூபர் சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு

    June 28, 2026

    நீளம் தாண்டுதல் : புதிய சாதனை படைத்த கேரள வீராங்கனை..! அஞ்சு ஜார்ஜ் சாதனை முறியடிப்பு..!

    June 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மரியாதையுடன், கண்ணியத்துடன் இறுதி ஊர்வலம்; தமிழக அரசுக்கு பாக்யராஜ் குடும்பத்தினர் நன்றி

    லஞ்ச ஒழிப்புத்துறை  இயக்குநரால் முதல்வருக்கு அவப்பெயர் – யூடியூபர் சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு

    நீளம் தாண்டுதல் : புதிய சாதனை படைத்த கேரள வீராங்கனை..! அஞ்சு ஜார்ஜ் சாதனை முறியடிப்பு..!

    சட்டப்பேரவையில் முதலமைச்சர் டான்ஸ் ஆடுவார்–  எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி  எதிர்பார்ப்பு

    செங்கல்பட்டு : அரசு டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..! ஆலயத்திற்கு அருகே இருப்பதாக குற்றச்சாட்டு..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.