Close Menu
    What's Hot

    உடும்பு பிடிக்க சென்றபோது கிடைத்த புதையல்!. மண்ணுக்கு அடியில் புதைந்து கிடந்த 9 சிலைகள்!

    அடக்குமுறைகளுக்கு திமுக ஒருபோதும் அடிபணியாது..!! கனிமொழி எம்.பி ஆவேசம்..!!

    அலுவலகத்திலேயே மதுபோதையில் அரை நிர்வாணமாக படுத்திருந்த வி.ஏ.ஓ!. பொதுமக்கள் அதிர்ச்சி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சி.வி.சண்முகத்திற்கு ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு..! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!
    Featured

    சி.வி.சண்முகத்திற்கு ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு..! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

    Editor web4By Editor web4July 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    10 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு உடனடியாக ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு வழங்க தமிழ்நாடு டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ-வுமான சி.வி.சண்முகம் தாக்கல் செய்திருந்த மனுவில், கடந்த 2006ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தன்னை கொல்ல எதிர்க்கட்சியினர் முயற்சித்ததாகவும், அப்போது தனது சகோதரரும், மைத்துனரும் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

    இந்த சம்பவத்துக்குப் பின், தனக்கும், தனது வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில் 2021ஆம் ஆண்டு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அச்சுறுத்தல் உள்ளதால் பாதுகாப்பு வழங்குவது குறித்து மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டிருந்தது எனத் தெரிவித்துள்ளார்.

    தற்போது தொடர்ச்சியாக மிரட்டல்கள் வருவதால் இதுசம்பந்தமாக சென்னை, விழுப்புரம் மாவட்ட காவல் நிலையங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இதுசம்பந்தமான வழக்குகளையும், புகார்களையும் சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பிறப்பித்துள்ள உத்தரவில், தொடர்ச்சியாக மிரட்டல்கள் வருவது குறித்து வெவ்வேறு விதமான குற்றச்சாட்டுகளுடன் சி.வி.சண்முகம் புகார் அளித்துள்ளதால் அதனை சிபிஐக்கு மாற்ற வாய்ப்பில்லை என கூறியுள்ளார்.

    தொடர்ச்சியாக கொலை மிரட்டல் வருவதால் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய தேவையை சி.வி.சண்முகம் நிரூபித்துள்ளதாக கூறியுள்ள நீதிபதி எனவே அவருக்கு உடனடியாக ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டுமென டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோவில்களில் முறைகேடா? மக்களே.. இனி இதை செய்ங்க..!! அமைச்சர் ரமேஷ் அதிரடி அறிவிப்பு..!!
    Next Article ஒரு கணக்கு பாக்கி இருக்கு.. ஆவேசமாக பேசிய ஆதவ் அர்ஜுனா..!! சுப்ரீம் கோர்ட்டை நாட திமுக முடிவு..!!
    Editor web4

    Related Posts

    உடும்பு பிடிக்க சென்றபோது கிடைத்த புதையல்!. மண்ணுக்கு அடியில் புதைந்து கிடந்த 9 சிலைகள்!

    July 3, 2026

    அடக்குமுறைகளுக்கு திமுக ஒருபோதும் அடிபணியாது..!! கனிமொழி எம்.பி ஆவேசம்..!!

    July 3, 2026

    அலுவலகத்திலேயே மதுபோதையில் அரை நிர்வாணமாக படுத்திருந்த வி.ஏ.ஓ!. பொதுமக்கள் அதிர்ச்சி!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உடும்பு பிடிக்க சென்றபோது கிடைத்த புதையல்!. மண்ணுக்கு அடியில் புதைந்து கிடந்த 9 சிலைகள்!

    அடக்குமுறைகளுக்கு திமுக ஒருபோதும் அடிபணியாது..!! கனிமொழி எம்.பி ஆவேசம்..!!

    அலுவலகத்திலேயே மதுபோதையில் அரை நிர்வாணமாக படுத்திருந்த வி.ஏ.ஓ!. பொதுமக்கள் அதிர்ச்சி!

    இது காட்டுமிராண்டித்தனமான செயல்..!! அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு கொந்தளித்த ஆர்.எஸ்.பாரதி..!!

    அரெஸ்ட் ஆன அனிதா ராதாகிருஷ்ணன்..!! போலீசை சுத்துப்போட்ட ஆதரவாளர்கள்..!! நடந்தது என்ன..??

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.