கேளம்பாக்கம் அருகே கடந்த 16ம் தேதி பாழடைந்த விவசாய கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர் (நேற்று 29 தேதி) வெடிகுண்டை ராணுவத்தினர் சம்பவ இடத்திலேயே வெடிக்க வைத்து செயலிழக்க வைத்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே தையூர் விஐபி நகரில் உள்ள பாழடைந்த விவசாய கிணற்றில் கடந்த 16ம் தேதி கண்டெடுக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர் வெண்டிகுண்டை 13 நாட்கள் கழித்து (நேற்று 29 ஆம் தேதி மாலை) இந்திய ராணுவ அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர் அதே இடத்தில் வெடிகுண்டை செயலிழக்க வைத்தனர்.
கடந்த 16ம் தேதி மாலை சுமார் 6 மணியளவில் அப்பகுதி இளைஞர்கள் ஹரி கிருஷ்ணன், பிரவீன், தமிழ்செல்வன் ஆகியோர் கிணற்றின் அருகே சென்றபோது கிணற்றுக்குள் நாய்க்குட்டி ஒன்று கத்தும் சத்தம் கேட்டுள்ளது.
அதை காப்பாற்ற கிணற்றுக்குள் இறங்கியப்போது பாழடைந்த கிணற்றுக்குள் ராக்கெட் லாஞ்சர் வெடிகுண்டு இருந்ததை பார்த்துள்ளனர். இதுகுறித்து அருகில் உள்ள கேளம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்த கேளம்பாக்கம் போலீசார் கடந்த 16 ம் தேதி முதல் நேற்று 29 ஆம் தேதி வரை கடந்த 13 நாட்களாக முதலாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர் வெடிகுண்டை கடந்த ஜூன் 18 ம் தேதி தமிழ்நாடு கமாண்டோ படையை சேர்ந்தவர்கள் கேளம்பாக்கம் காவல்துறை உதவியுடன் சம்பவ இடத்திற்கு சென்று நிலப்பறப்பில் வைக்கப்படிருந்த ராக்கெட் லாஞ்சர் வெடிகுண்டை ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி பாதுகாப்பிற்காக பூமியில் புதைத்து வைத்தனர்.
மேலும் இது குறித்து இந்திய ராணுவம் முறையான நீதிமன்றம் அனுமதி பெற்று (நேற்று 29 ஆம் தேதி மாலை) இந்திய ராணுவ அதிகாரிகள் லெப்டன் கர்ணல் உள்ளிட்ட வெடிகுண்டு நிபுணர்கள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு வந்து ராக்கெட் லாஞ்சர் வெடிகுண்டை வெடிக்க வைத்து அதே இடத்தில் செயலிழக்க செய்தனர்.
