Close Menu
    What's Hot

    கொல்கத்தா கட்டிட விபத்து..!! உயிரிழப்பு 16 ஆக உயர்வு..!! தொடரும் மீட்புப்பணி..!!

    சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்..!! ஒரு கை பார்த்துடலாம்.. போட்டியிடுகிறார் சீமான்..!!

    எம்.ஜி.ஆரின் கலைவாரிசு பாக்யராஜ்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»புதுச்சேரி : சொத்துக்காக பெற்றோரை கொலை செய்த இளம்பெண்..! காதலனுடன் புதுச்சேரியில் கைது..!
    Featured

    புதுச்சேரி : சொத்துக்காக பெற்றோரை கொலை செய்த இளம்பெண்..! காதலனுடன் புதுச்சேரியில் கைது..!

    Editor web4By Editor web4June 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    3 18
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பெங்களூருவில் தந்தை, தாய் மற்றும் தங்கையை கொலை செய்த இளம்பெண் ஸ்வேதா புதுச்சேரியில் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த அவரது காதலன் கென்னத்தையும் புதுச்சேரி போலீசார் கைது செய்துள்ளனர்.

    பெங்களூருவைச் சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினியரான ஸ்வேதா, ஆந்திராவைச் சேர்ந்த கென்னத்தை காதலித்து வந்தார். இந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஒன்றாக வசித்து வந்தனர். இதற்கிடையில், கிரெடிட் கார்டு மூலம் ரூ.30 லட்சம் வரை கடன் வாங்கிய ஸ்வேதா, அந்த கடனை அடைப்பதற்காக பெற்றோரிடம் சொத்தில் தனது பங்கை கேட்டதாகவும், அவர்கள் மறுத்ததால் கொலை செய்ய திட்டமிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    அதன்படி, தனது தாய், தந்தை மற்றும் தங்கையை தனித்தனியாக அடுக்குமாடி குடியிருப்புக்கு வரவழைத்து, காதலன் கென்னத்துடன் இணைந்து மூவரையும் கொலை செய்துவிட்டு இருவரும் தலைமறைவாகினர். இந்த சம்பவம் கர்நாடகா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதற்கிடையில், புதுச்சேரியில் ரோந்து பணியில் இருந்த உருளையன்பேட்டை குற்றப்பிரிவு போலீசார் பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஸ்வேதாவை பிடித்து விசாரித்தபோது, அவர் பெங்களூரு மூவர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் என்பது தெரியவந்தது. பின்னர் அவரை பெங்களூரு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இந்நிலையில், தலைமறைவாக இருந்த கென்னத் புதுச்சேரி அண்ணா நகரில் உள்ள ஒரு மதுபாரில் இருந்து வெளியே வந்தபோது போலீசார் மடக்கிப் பிடித்தனர். காவல் நிலையத்திற்கு அழைத்துச் ல்ெலும் வழியில் பைக்கில் இருந்து குதித்து தப்பிக்க முயன்ற கென்னத்தை, கீழே விழுந்து காயமடைந்த நிலையிலும் போலீஸ்காரர் ராமலிங்கம் விடாமுயற்சியுடன் விரட்டிப் பிடித்தார். பின்னர் கென்னத்திடமிருந்து பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு, நள்ளிரவில் பெங்களூரு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

    Bengaluru Crime karnataka love murder pondychery
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதி கர்நாடகாவுக்கு ஆதரவாகச் செயல்படுவாரா? கனிமொழி எம்.பி சந்தேகம்.
    Next Article முதுகுளத்தூர் அருகே 5000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால முதுமக்கள் தாழிகள், மட்கலக் குறியீடுகள் கண்டெடுப்பு
    Editor web4

    Related Posts

    கொல்கத்தா கட்டிட விபத்து..!! உயிரிழப்பு 16 ஆக உயர்வு..!! தொடரும் மீட்புப்பணி..!!

    June 27, 2026

    சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்..!! ஒரு கை பார்த்துடலாம்.. போட்டியிடுகிறார் சீமான்..!!

    June 27, 2026

    எம்.ஜி.ஆரின் கலைவாரிசு பாக்யராஜ்!

    June 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கொல்கத்தா கட்டிட விபத்து..!! உயிரிழப்பு 16 ஆக உயர்வு..!! தொடரும் மீட்புப்பணி..!!

    சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்..!! ஒரு கை பார்த்துடலாம்.. போட்டியிடுகிறார் சீமான்..!!

    எம்.ஜி.ஆரின் கலைவாரிசு பாக்யராஜ்!

    நடிகர், இயக்குநர் பாக்யராஜ் காலமானார் – மாரடைப்பால் உயிர் பிரிந்தது

    வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதா? – விஜய் அரசுக்கு பிரேமலதா கேள்வி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.