Close Menu
    What's Hot

    கொல்கத்தா கட்டிட விபத்து..!! உயிரிழப்பு 16 ஆக உயர்வு..!! தொடரும் மீட்புப்பணி..!!

    சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்..!! ஒரு கை பார்த்துடலாம்.. போட்டியிடுகிறார் சீமான்..!!

    எம்.ஜி.ஆரின் கலைவாரிசு பாக்யராஜ்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»முதுகுளத்தூர் அருகே 5000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால முதுமக்கள் தாழிகள், மட்கலக் குறியீடுகள் கண்டெடுப்பு
    Featured

    முதுகுளத்தூர் அருகே 5000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால முதுமக்கள் தாழிகள், மட்கலக் குறியீடுகள் கண்டெடுப்பு

    Editor TN TalksBy Editor TN TalksJune 27, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    010 RMD
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே வலசை- மணக்குளம் கிராமங்களுக்கு இடையேஉள்ள அய்யனார், தர்ம முனீஸ்வரர் கோயில் வளாக சுற்றுச்சுவர் எடுக்க குழி தோண்டியபோது, முதுமக்கள் தாழிகள் வெளிப்பட்டுள்ளன. இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வில் கோயில் அருகில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் தாழிகள் புதைந்துள்ளன. சுற்றுச்சுவர் எடுக்கத் தோண்டியபோது வெளிப்பட்ட ஒரு தாழிக்குள் 3 குவளைகள், தட்டு, கிண்ணம், கும்பா, சிறிய பானை ஆகியவை இருந்துள்ளன. இவை கறுப்பு சிவப்பு, சிவப்பு நிறமுடையன. 2018-ல் கோயிலின் தெற்கில் குளம் தோண்டியபோது முதுமக்கள் தாழிகள் வெளிவந்த பகுதியில் ஆய்வு செய்தபோது உடைந்த சுடுமண் தாங்கிகள், மூடிகளில் குறியீடுகள் இருந்தன. பெருக்கல் குறி, தலைகீழ் சூலம், ஏணி ஆகிய குறியீடுகள் மூன்று சிவப்பு நிற ஓடுகளிலும், ஏழு கறுப்பு சிவப்பு ஓடுகளிலும் உள்ளன.

    010 RMD A

    கி.மு.4000 முதல் கி.மு.1500 வரையிலான பெருங்கற்காலத்தின் ஆரம்பத்தில் இறந்தவர்களின் உடலை ஊருக்கு வெளியே உள்ள காடுகளில் போட்டுவிடுவர். அதை நரி, கழுகு போன்றவை இரையாய் கொண்டபின் கிடக்கும் எலும்புகளை சேகரித்து, அவற்றுடன் அவர்கள் பயன்படுத்திய அல்லது படையல் பொருட்களை சிறிய முதுமக்கள் தாழியில் வைத்து மூடி அடக்கம் செய்துள்ளனர். பிற்காலத்தில் பெரிய தாழிக்குள் உடலை வைத்து அடக்கம் செய்யும் முறை இருந்துள்ளது.

    தாழிக்குள் இருந்த கறுப்பு சிவப்பு மட்கலங்கள் அடர் வண்ணத்துடனும், வழுவழுப்பாகவும், பளபளப்பாகவும் உள்ளன. இவற்றைச் சுடும் போது அதன் மேல் உப்பு தூவி பளபளப்பாக ஆக்கியுள்ளனர். மலைப் பகுதிகளில் காணப்படும் பெருங்கற்படைச் சின்னங்களை விட சமவெளிப் பகுதிகளில் உள்ள சிறிய  தாழிகள் காலத்தால் முந்தியவை என்பதால் இவை சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது.

    010 RMD B

    இங்கிருந்து வடக்காக 500மீ தொலைவில் விக்கிரமபாண்டியபுரம் ராஜா கோயில் திடல் பகுதியில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் பானை ஓடுகள் சிதறிக்கிடக்கின்றன. இது மக்கள் குடியிருந்த பகுதியாகவும், தாழிகள் உள்ள வலசை, மணக்குளம் இடுகாடாகவும் பெருங்கற்காலத்தில் இருந்துள்ளதை அறியலாம். தொல்லியல் துறை இப்பகுதியில் அகழாய்வு செய்தால் மேலும் பல வரலாற்றுச் செய்திகள் வெளிவரும் என தகவல் தெரிவித்தார்.

    Ancient Burial Site Megalithic Burial Urns Mudukulathur Ramanathapuram
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுதுச்சேரி : சொத்துக்காக பெற்றோரை கொலை செய்த இளம்பெண்..! காதலனுடன் புதுச்சேரியில் கைது..!
    Next Article வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதா? – விஜய் அரசுக்கு பிரேமலதா கேள்வி
    Editor TN Talks

    Related Posts

    கொல்கத்தா கட்டிட விபத்து..!! உயிரிழப்பு 16 ஆக உயர்வு..!! தொடரும் மீட்புப்பணி..!!

    June 27, 2026

    சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்..!! ஒரு கை பார்த்துடலாம்.. போட்டியிடுகிறார் சீமான்..!!

    June 27, 2026

    எம்.ஜி.ஆரின் கலைவாரிசு பாக்யராஜ்!

    June 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கொல்கத்தா கட்டிட விபத்து..!! உயிரிழப்பு 16 ஆக உயர்வு..!! தொடரும் மீட்புப்பணி..!!

    சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்..!! ஒரு கை பார்த்துடலாம்.. போட்டியிடுகிறார் சீமான்..!!

    எம்.ஜி.ஆரின் கலைவாரிசு பாக்யராஜ்!

    நடிகர், இயக்குநர் பாக்யராஜ் காலமானார் – மாரடைப்பால் உயிர் பிரிந்தது

    வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதா? – விஜய் அரசுக்கு பிரேமலதா கேள்வி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.