Close Menu
    What's Hot

    இயக்குனர் கே.பாக்யராஜின் திரைப்பயணம்

    சமூக சீர்திருத்த கருத்துகளைப் பரப்பியவர் பாக்யராஜ்..!! கே.எஸ் ரவிக்குமார் புகழாரம்..!!

    காற்றில் கலந்தார் நடிகர், இயக்குநர் பாக்யராஜ்..!! இபிஎஸ் , நயினார் நாகேந்திரன் இரங்கல்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதா? – விஜய் அரசுக்கு பிரேமலதா கேள்வி
    Featured

    வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதா? – விஜய் அரசுக்கு பிரேமலதா கேள்வி

    Editor TN TalksBy Editor TN TalksJune 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    011 premalatha
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு நியமனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டி தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு;-

    மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதியாக வெங்கடநாராயணா நியமிக்கப்பட்டிருப்பதை தேமுதிக சார்பில் கடுமையாக கண்டிக்கிறோம். ஏற்கனவே கர்நாடக மாநில முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் அங்குள்ள நீர்வளத்துறை அமைச்சர் “எங்கள் மாநில எல்லைக்குள் மேகதாது அணையை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது” என்ற நிலைப்பாட்டை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக தமிழ்நாடு கர்நாடக மாநிலங்களுக்கு இடையே காவேரி நீர் பிரச்சனை நீடித்து வரும் நிலையில், மேகதாது அணை தொடர்பாகவும் தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாக்கும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்றமும், காவேரி மேலாண்மை தொடர்பான அமைப்புகளும் இந்த விவகாரத்தில் சட்ட மற்றும் நிர்வாக வழிகாட்டுதல்களை வழங்கியுள்ள நிலையிலும், கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியில் உறுதியாக இருப்பதாக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறது. இத்தகைய சூழலில், கர்நாடக பின்னணியை கொண்ட ஒருவரை தமிழ்நாட்டின் டெல்லி பிரதிநிதியாக நியமித்திருப்பது பொதுமக்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இது “வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது” போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியான நபர்கள் பலர் இருக்கையில், ஏன் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டது என்பதற்கு தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும். எனவே, தமிழக அரசு இந்த நியமனத்தை மறுபரிசீலனை செய்து, வெங்கடநாராயணாவின் நியமனத்தை திரும்பப் பெற வேண்டும் என தேமுதிக சார்பாக வலியுறுத்துகிறோம்.

    dmdk premalatha vijayakanth Tamil Nadu government Vijay Government
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுதுகுளத்தூர் அருகே 5000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால முதுமக்கள் தாழிகள், மட்கலக் குறியீடுகள் கண்டெடுப்பு
    Next Article நடிகர், இயக்குநர் பாக்யராஜ் காலமானார் – மாரடைப்பால் உயிர் பிரிந்தது
    Editor TN Talks

    Related Posts

    இயக்குனர் கே.பாக்யராஜின் திரைப்பயணம்

    June 27, 2026

    சமூக சீர்திருத்த கருத்துகளைப் பரப்பியவர் பாக்யராஜ்..!! கே.எஸ் ரவிக்குமார் புகழாரம்..!!

    June 27, 2026

    காற்றில் கலந்தார் நடிகர், இயக்குநர் பாக்யராஜ்..!! இபிஎஸ் , நயினார் நாகேந்திரன் இரங்கல்..!!

    June 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இயக்குனர் கே.பாக்யராஜின் திரைப்பயணம்

    சமூக சீர்திருத்த கருத்துகளைப் பரப்பியவர் பாக்யராஜ்..!! கே.எஸ் ரவிக்குமார் புகழாரம்..!!

    காற்றில் கலந்தார் நடிகர், இயக்குநர் பாக்யராஜ்..!! இபிஎஸ் , நயினார் நாகேந்திரன் இரங்கல்..!!

    கொல்கத்தா கட்டிட விபத்து..!! உயிரிழப்பு 16 ஆக உயர்வு..!! தொடரும் மீட்புப்பணி..!!

    சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்..!! ஒரு கை பார்த்துடலாம்.. போட்டியிடுகிறார் சீமான்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.