Author: Editor web4

பால் விலை உயர்வு மற்றும் பால் உற்பத்தி பாதிப்பு தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடப்பாண்டு தமிழ்நாட்டில் பெய்ய வேண்டிய கோடைகால பருவமழை பொய்த்துப் போனதாலும், கடந்த 2025ம் ஆண்டு இறுதியில் தமிழ்நாடு முழுவதும் பாலுற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததாலும் முன்னணி மற்றும் சிறு, குறு, நடுத்தர தனியார் பால் நிறுவனங்களுக்கிடையே பால் கொள்முதல் செய்வதில் கடும் போட்டி நிலவி வருகிறது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பாலுற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக தங்களின் பால் வணிகத்தை தக்க வைத்துக் கொள்ள ஒவ்வொரு தனியார் பால் நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு பால் கொள்முதல் விலையை பால் உற்பத்தியாளர்களுக்கு உயர்த்தி வழங்கி வருவதோடு, பால் கொள்முதலுக்கேற்ப விவசாய பெருமக்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையும் வழங்கி வருவதால் தமிழ்நாடு அரசின் ஆவினுக்கு பால் வழங்கும் பால்…

Read More

செங்கல்பட்டு அடுத்த பழத்தோட்டம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பாதுகாப்பு இல்லத்தில், மாவட்டத்தின் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 18 முதல் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நேற்று பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த இரு தரப்பினருக்கு இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகராறு பின்னர் கைகலப்பாக மாறியதில், ஜோ மற்றும் பாலாஜி ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு இல்லத்தின் காப்பாளர்கள் உடனடியாக காயமடைந்த இருவரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த மோதலின் போது பாதுகாப்பு இல்லத்தின் கதவுகள், ஜன்னல்கள் உள்ளிட்ட அரசு சொத்துகள் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பாதுகாப்பு இல்லத்தில் பதற்றமான சூழல் நிலவியது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு…

Read More

தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாடு அருகே சின்னகுமுளை கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காளமூர்த்தி. இவரது மகள் நிதிஷா, தஞ்சாவூரில் உள்ள கல்லூரி ஒன்றில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். மேலும், தடகள போட்டியில் வீராங்கணையாக விளங்கி வந்தார். நிதிஷா பட்டுக்கோட்டை அருகே உள்ள நம்பிவயல் கிராமத்தில் ஹரிஹரன் என்பவரது உறவினர் வீட்டிலிருந்தபடி கல்லூரிக்கு சென்று படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கங்காளமூர்த்தியும் அவரது உறவினர்களும் நம்பிவயல் கிராமத்துக்கு சென்று நிதிஷா சின்னகுமுளையில் உள்ள வீட்டுக்கு வருமாறு வற்புறுத்தியுள்ளனர். ஆனால், அங்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி நிதிஷா பெற்றோருடன் செல்ல மறுத்துள்ளார். நேற்று நம்பியவயலில் இருந்த நிதிஷாவை உறவினர்கள் வலுகட்டாயமாக கடத்தி சென்று, திருச்சி தில்லைநகரில் உள்ள மன நல மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவமனையிலிருந்தவாறு போலீஸாருக்கு தகவல் கொடுத்த நிதிஷா, தன்னை கட்டாயப்படுத்தி மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக புகார் அளித்தார். உடனடியாக திருச்சியில் உள்ள சிங்கப்பெண் போலீஸார் மருத்துவமனைக்கு சென்று நிதிஷா…

Read More

தர்மபுரியில் காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை பேருந்து நிலையத்தில் இளைஞர் ஒருவர் கத்தியால் கழுத்தை அறுத்து, வயிற்றில் குத்திய சம்பவம் தருமபுரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேங்காய்மரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் ஷீலா. தனியார் நகைக்கடையில் வேலைபார்த்து வந்த ஷீலாவும், அதே பகுதியை சேர்ந்த சின்னசாமியும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஷீலாவின் வீட்டிற்கு இந்த விவகாரம் தெரியவர, அவரது பெற்றோர் இந்த காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஷீலா, சின்னசாமியுடனான காதலை முறித்துக் கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சின்னசாமி, பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த ஷீலாவை வழி மறித்து கழுத்தில் ஒரு முறையும், வயிற்றில் இருமுறையும் சரமாரியாக குத்தியுள்ளார். ஷீலாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் தப்பியோட முயன்ற சின்னசாமியை கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்தனர். தகவலறிந்து வந்த போலீசார், ஷீலாவை மீட்டு மருத்துவமனையில்…

Read More

வருடா வருடம் கேரளாவில் பருவமழையின் போது நிலசரிவு ஏற்படுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில் இந்தாண்டு அங்கு பெய்த கனமழையால் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு சுமார் 5 பேர் உயிரிழந்து உள்ளனர். மண்ணுக்கு அடியில் காணாமல் போனவர்களை தேடும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த நிலச்சரிவுக்கான காரணம் குறித்து முதலமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் வி.டி.சதீஷன், கல்லாடியில் கனமழையை தொடர்ந்து மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்து உள்ளனர். மாயமானவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது. நிலச்சரிவில் கட்டுமான பொருட்கள், எந்திரங் கள் சேதம் அடைந்துள்ளன. கட்டுமான பணிக்காக பாறைகளை வெடிமருந்து வைத்து தகர்த்தபோது நிலச்சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் கட்டுமான நிறுவனத்தின் அலுவலகமாக செயல்பட்ட கன்டெய்னர்கள், மண் அள்ளும் எந்திரம் போன்றவை மண்ணுக்கடியில் புதைந்துள்ளன.’ சுரங்கப்பாதை அமைக்கும் இடத்தில் குவிக்கப்பட்டு இருந்த மணல் குன்று களை…

Read More

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் மற்றும் முதல் சுற்று, இரண்டாம் சுற்றுகள் முடிவடைந்து தற்போது நாக்கவுட் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. தொடரின் 95வது போட்டியில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா அணியும் எகிப்தும் மோதின. ஆரம்பம் முதலே எகிப்து அணி தங்களது முழு பலத்தையும் கொட்டி விளையாடியது. அதன்பலனாக முதல் 15 நிமிடத்திலேயே எகிப்து வீரர் யாசர் இப்ராஹிம் முதல் கோலை அடித்து அணியை முன்னிலை பெற செய்தார். தொடர்ந்து 67அது நிமிடத்தில் எகிப்தின் மற்றொரு வீரர் முஸ்தபா ஜிகோ மேலும் ஒரு கோல் அடித்து அர்ஜெண்டினாவை ஆட்டம் காண வைத்தார். இதற்கிடையில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை அர்ஜெண்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி தவறவிட்டது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. முதல் பாதியிலும், இரண்டாம் பாதியிலும் கோல் எதுவும் அடிக்காததால், அர்ஜெண்டினா வெளியேறிவிடும் என்றே அனைவரும் நினைத்தனர். ஆனாலும் கடைசி நிமிடம் வரை போராடிய அர்ஜெண்டினா அணி…

Read More

அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கடந்த 2024-ல் பிரதிஷ்டை செய்யப்பட்ட இக்கோயிலுக்கு உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவர். இங்கு வரும் பக்தர்கள் மனமுவந்து அளிக்கும் காணிக்கைகள் அறக் கட்டளையின் கட்டுப்பாட்டின் கீழ் கையாளப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள ராம பக்தர்கள் கோவிலுக்கு வழங்கிய இந்த காணிக்கையில் பெருமளவில் முறைகேடு நடந்திருப்பதாக சமீபத்தில் புகார் எழுந்தது. சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் இந்த குற்றச்சாட்டை எழுப்பினார். அவரை தொடர்ந்து பல்வேறு கட்சியினரும் இந்த புகாரை தெரிவித்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு ஒன்றை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அமைத்தார். அந்த குழுவும் விசாரித்து தொடக்க அறிக்கையை முதல்-மந்திரியிடம் வழங்கினர். இந்த அறிக்கையின் அடிப்படையில் காணிக்கை முறைகேடு தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம்…

Read More

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி, த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார பொதுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், 41 பேர் உயிரிழந்தனர். தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது இந்த சம்பவம். 41 பேர் உயிரிழந்ததற்கு விஜய்யின் தாமதம் தான் காரணம், அப்போதைய திமுக அரசின் சூழ்ச்சி தான் காரணம் என பல காரணங்கள் ஒவ்வொருவராலும் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக பல வழக்குகள் உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. மேலும், விசாரணையை உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அஜய்ரஸ்தோகி தலைமையிலான கண்காணிப்பு குழு மேற்பார்வையிடும் என்றும் உத்தரவிட்டது. இதற்கிடையே கடந்த 2-ந்தேதி நடைபெற்ற தவெக இணைப்பு விழாவில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, காவல்துறையை வைத்துக்கொண்டு கரூர் மக்களை கொன்று குவித்தீர்களே ஸ்டாலின் சார். கரூரில் எங்களுக்கு ஒரு கணக்கு…

Read More

நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள ஹேப்பி ராஜ் படத்தில், இசையமைப்பாளர் இளையராஜாவின், பொதுவாக எம்மனசு தங்கம் என்ற பாடலை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில், கடந்த மார்ச் 27ஆம் தேதி ஹேப்பி ராஜ் என்ற படம் வெளியானது. இந்தப் படத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் இசையமைப்பாளர் இளையராஜா இசையில், முரட்டுக்காளை படத்தில் இடம்பெற்று இருந்த பொதுவாக எம்மனசு தங்கம் என்ற பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது. படத்தில் அந்த பாடலை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும், பாடலை நீக்க உத்தரவிட வேண்டும் என, இசையமைப்பாளர் இளையராஜா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், தனது அனுமதியின்றி, உருமாற்றி தனது பாடலை பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி எம் குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தபோது, இளையராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ சரவணன், இளையராஜா அனுமதி இல்லாமல் பதிப்புரிமைச் சட்டத்தை…

Read More

திருச்சி அருகே காதல் திருமணம் செய்த இளம் பெண்ணை காரில் கடத்த முயற்சி செய்த பெற்றோரை, போலீசார் சினிமா பாணியில் விரட்டிப் பிடித்தனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள சித்தானந்தம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார். மணப்பாறை அடுத்துள்ள மருங்காபுரி ஒன்றியம் முடுக்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சித்திரைவள்ளி ஆகியோர் காதலித்து வந்துள்ளனர். பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணத்திற்குப் பிறகு இருவரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில், மணப்பாறைக்கு வந்த அவர்கள், பின்னர் ஆட்டோவில் சித்தானந்தம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பாலப்பட்டி பிரிவு அருகே உள்ள பெட்ரோல் பங்க் பகுதியில், சித்திரைவள்ளியின் தந்தை மலையாண்டி மற்றும் அவரது உறவினர்கள் இரண்டு கார்களில் காத்திருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் ஆட்டோவை வழிமறித்து சித்திரைவள்ளியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்ற முயன்றனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கணவர் அஜித்குமார், தனது…

Read More