Close Menu
    What's Hot

    மகளிர் டி20 ; அயர்லாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து

    ஃபிஃபா அப்டேட் : மெஸ்ஸின் ஹாட்ரிக் கோல் மழை..! அல்ஜீரியாவுக்கு ஆப்பு வைத்த அர்ஜென்டினா..!

    ராஜஸ்தான் கோட்டாவில் இன்று மாணவர் பேரணி; ராகுல்காந்தி தொடங்கி வைக்கிறார்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»கிருஷ்ணகிரி : சாலையில் கொட்டப்பட்ட மாம்பழங்கள்..! உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை..!
    தமிழ்நாடு

    கிருஷ்ணகிரி : சாலையில் கொட்டப்பட்ட மாம்பழங்கள்..! உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை..!

    Editor web4By Editor web4June 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 13
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நடப்பு பருவத்தில் மாம்பழங்களுக்குப் போதிய விலை கிடைக்காததால், விரக்தியடைந்த விவசாயிகள் டன் கணக்கிலான மாங்காய்களை ஆங்காங்கே சாலை ஓரங்களில் கொட்டிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 33 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா விவசாயம் பிரதானமாக நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் மே மற்றும் ஜூன் மாதங்களில் மா விளைச்சல் தீவிரமடைந்து, அறுவடைப் பணிகள் நடைபெறும். இந்த ஆண்டும் மா விளைச்சல் நல்ல முறையில் உள்ள நிலையில், சந்தையில் நிலவும் கடும் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

    மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில், மாங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ. 12 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், மாவட்ட நிர்வாகத்தின் இந்த உத்தரவை மாங்கூல் தொழிற்சாலை வியாபாரிகள் மதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அவர்கள் விவசாயிகளிடமிருந்து கிலோ ரூ. 3 மட்டுமே மிகக் குறைந்த விலைக்கு மாங்காய்களைக் கொள்முதல் செய்து வருகின்றனர்.

    இதனால் மாங்காய் பறிப்பதற்கான கூலி மற்றும் போக்குவரத்துச் செலவு கூட கிடைக்காத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் விரக்தியடைந்த மா விவசாயிகள், தங்களது தோட்டத்தில் விளைந்த மாங்காய்களை விற்பனை
    செய்ய முடியாமல் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பிரதான சாலை ஓரங்களில் டன் கணக்கில் கொட்டிவிட்டுச் செல்கின்றனர். சாலைகளில் மாங்காய்கள் அழுகிய நிலையில் மலைபோல தேங்கி உள்ளது.

    மா விவசாயிகள், ஆண்டு முழுவதும் கஷ்டப்பட்டுப் பயிர் செய்தும், அறுவடைக் காலத்தில் பறிப்புக் கூலி கூட கிடைக்காமல் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறோம்
    ஒட்டு மொத்தத்தில் மாங்கூழ் தொழிற்சாலைகளால் மா விவசாயிகள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர் இதே நிலை நீடித்தால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா விவசாயத்தை அழித்து விட்டு மாற்று பயிர் சாகுபடிக்கு செல்லும் நிலை ஏற்படும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகூடும் சட்டமன்றம்…  காத்திருக்கும் பிரச்சனைகள்…  எப்படி சமாளிக்கப்போகிறது தவெக?
    Next Article ஃபிஃபா அப்டேட்: ஈராக்கை பந்தாடிய நார்வே..! 2கோல்கள் அடித்து எர்லிங் ஹாலண்ட் அசத்தல்..!
    Editor web4

    Related Posts

    மகளிர் டி20 ; அயர்லாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து

    June 17, 2026

    ஃபிஃபா அப்டேட் : மெஸ்ஸின் ஹாட்ரிக் கோல் மழை..! அல்ஜீரியாவுக்கு ஆப்பு வைத்த அர்ஜென்டினா..!

    June 17, 2026

    ராஜஸ்தான் கோட்டாவில் இன்று மாணவர் பேரணி; ராகுல்காந்தி தொடங்கி வைக்கிறார்

    June 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மகளிர் டி20 ; அயர்லாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து

    ஃபிஃபா அப்டேட் : மெஸ்ஸின் ஹாட்ரிக் கோல் மழை..! அல்ஜீரியாவுக்கு ஆப்பு வைத்த அர்ஜென்டினா..!

    ராஜஸ்தான் கோட்டாவில் இன்று மாணவர் பேரணி; ராகுல்காந்தி தொடங்கி வைக்கிறார்

    எங்களுக்கு இது வேண்டும்..! ரஷ்யாவுக்கு ஜெலன்ஸ்கி விதித்த நிபந்தனை..!

    அடுத்த 3 நாட்கள் தமிழ்நாட்டில் பரவலான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.