Close Menu
    What's Hot

    “2006, 2017… அரசியலில் நான் செய்த இரு பெருந்தவறுகள்…” – மனம் திறந்த வைகோ

    கீழடி அகழாய்வு அறிக்கை – இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையை நாட தமிழக தொல்லியல் துறை முடிவு

    வாஸ்து சரியில்லையாம்.. ஜோசியர் கொடுத்த வார்னிங்.. அலுவலக அறையை மாற்றும் விஜய்?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்பட்டதற்கு எதிரான வழக்கு..! தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!
    Featured

    கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்பட்டதற்கு எதிரான வழக்கு..! தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!

    Editor web4By Editor web4July 17, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    5 11
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியதை எதிர்த்த வழக்கு, திரும்பப் பெறப்பட்டதை அடுத்து தள்ளிபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கடந்த 2025 ஆம் ஆண்டு கரூரில் த வெ க தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகி இருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், இந்த சம்பவத்தில் பலியான 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கி சமீபத்தில் முதலமைச்சர் விஜய் உத்தரவுகளை நேரில் வழங்கி இருந்தார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சூளையைச் சேர்ந்த வழக்கறிஞர் என்.பிரபாகரன் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஏற்கனவே அரசு 10 லட்சம் ரூபாயும், த வெ க சார்பில் 20 லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ள நிலையில் அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக கடந்த 2020 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையில், அரசியல் கூட்டங்களில் உயிரிழந்தவர்களுக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    வழக்கு புலங்குசாரணையில் உள்ள போது பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்குவது விசாரணையில் தலையிடுவதைப் போல உள்ளதாகவும், இது சாட்சியத்தை மாற்றிக் கொடுக்க நிர்பந்திக்கும் வகையில் உள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரி மற்றும் நீதிபதி ஜி அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கரூர் பெயர சம்பவம் தொடர்பான வழக்கில் சிபிஐ இறுதி அறிக்கை தாக்கல் செய்யும் வரை பணி நியமனம் உத்தரவுகளை வழங்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

    இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், அந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.  இதையடுத்து, மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோவை: களேபரமான மாநகராட்சி மாமன்றக் கூட்டம்..!! மோதிக்கொண்ட காங்., – திமுக கவுன்சிலர்கள்..!!
    Next Article திருச்சி ; அரசு மருத்துவமனை தண்ணீர் தொட்டி மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு
    Editor web4

    Related Posts

    “2006, 2017… அரசியலில் நான் செய்த இரு பெருந்தவறுகள்…” – மனம் திறந்த வைகோ

    July 17, 2026

    கீழடி அகழாய்வு அறிக்கை – இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையை நாட தமிழக தொல்லியல் துறை முடிவு

    July 17, 2026

    வாஸ்து சரியில்லையாம்.. ஜோசியர் கொடுத்த வார்னிங்.. அலுவலக அறையை மாற்றும் விஜய்?

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “2006, 2017… அரசியலில் நான் செய்த இரு பெருந்தவறுகள்…” – மனம் திறந்த வைகோ

    கீழடி அகழாய்வு அறிக்கை – இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையை நாட தமிழக தொல்லியல் துறை முடிவு

    வாஸ்து சரியில்லையாம்.. ஜோசியர் கொடுத்த வார்னிங்.. அலுவலக அறையை மாற்றும் விஜய்?

    வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் சிறை தண்டனை!. புதிய மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்!

    கையில் சூலாயுதத்துடன் அம்மன் கெட் அப்பில் ஜோதிமணி… கரூரில் பரபரப்பாகும் போஸ்டர்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.