தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில்,
”உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2- 3 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக இருக்கும். வெப்பத்தின் அளவு இயல்பை விட அதிக அளவில் இருக்கும். சென்னையில் அதிகபட்ச வெயில் 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். அதன்படி, வரும் 21ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்கும்.
அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் அசவுகரியம் ஏற்படலாம். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும், மாலை, இரவு நேரத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடக்கும் கடலோர மாவட்டங்கள், வடக்கு கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
