Author: Editor TN Talks
சட்டமன்ற நிகழ்வுகளை எவ்வித இடைநிறுத்தமும் இன்றி முழுமையாக நேரலையில் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளது. மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவரும் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியுமான A.G.மெளரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- நேற்றைய சட்டமன்றக் கூட்டத்தின்போது இரங்கல் தீர்மானங்கள் வாசிப்பு, மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்நாடு அரசின் தனி தீர்மானத்தின் மீதான விவாதங்கள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டன. ஆனால் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கவர்னர் உரையின் மீதான விவாதங்களுக்கு நேரலை தரப்படவில்லை. சட்டமன்றத்தின் அனைத்து நிகழ்வுகளையும் அறிந்து கொள்ளும் உரிமை பொதுமக்களுக்கும், ஊடகங்களுக்கும் இருக்கிறது. ஆகவே, இனிவரும் நாட்களில் சட்டமன்றத்தின் அனைத்து நிகழ்வுகளையும் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. மேலும், நேரடி ஒளிபரப்பு குறித்து தொடர்ந்து பல ஆண்டுகளாக மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி வருவதை நினைவு கூர்கிறோம். வெளிப்படைத் தன்மையோடு செயல்படவிரும்பும் தவெக அரசு…
இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவரான திரௌபதி முர்முவுக்கு இன்று 68-வது பிறந்தநாள் ஆகும். இதனை முன்னிட்டு அவருக்கு துணை ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யும் குடியரசுத் தலைவருக்குப் பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளப் பதிவில், மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளார். மேலும், குடியரசுத் தலைவர் நல்ல உடல்நலத்துடன் இந்தியத் திருநாட்டிற்கான தங்களின் அர்ப்பணிப்பான சேவை மேலும் சிறக்க இந்த இனிய நாளில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு குளறுபடிகளுக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என மத்திய அரசை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். வினாத்தாள் கசிவு குறித்த புகாரால் ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வுக்கான மறு தேர்வு நாடு முழுவதும் நாளை நடைபெற உள்ள நிலையில், அத்தேர்வு குறித்த அச்சத்தின் காரணமாக கோவை மற்றும் சேலத்தைச் சேர்ந்த இரு மாணவிகள் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த வேதனையையும் கவலையையும் அளிப்பதாக டிடிவி தினகரன் தனது பதிவில் தெரிவித்துள்ளார். மருத்துவராக வேண்டும் என்ற நீண்ட நாள் கனவை, நீட் தேர்வு பறித்துவிடுமோ என்ற அச்சம் ஒருபுறமும், தேர்வு நடைமுறைகளில் தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் குளறுபடிகள், வினாத்தாள் கசிவு தொடர்பான புகார்கள் மற்றும் அவை ஏற்படுத்தும் குழப்பங்கள் மறுபுறமும் மாணவ, மாணவியர்களின் மனநிலையை கடுமையாகப் பாதித்து வருவதாக பொதுமக்கள் மத்தியில் கவலை எழுந்துள்ளது என குறிப்பிட்டுள்ள டிடிவி தினகரன், நீட் என்பது தகுதித் தேர்வே…
தமிழகத்தில் நாளை நடைபெறும் நீட் தேர்வு சுமூகமாக நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டுமென, தலைமைச் செயலாளர் சாய்குமார் உத்தரவிட்டுள்ளார் . நாடு முழுவதும் நீட் போட்டி தேர்வு நாளை பிற்பகல் நடைபெறுகிறது. தமிழகத்தில், 31 மாவட்டங்களில், 307 மையங்களில் நடைபெறும் தேர்வில், 1,42,489 மாணவர்கள் பங்கேற்கின்றனர். தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் செய்யப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் தேர்வுக்கான மாதிரி பயிற்சி மற்றும் ஆய்வு, இன்று காலை 10 மணி முதல் நடைபெற்று வருகிறது. crpf வீரர்கள், தேர்வு மையங்களில் ஆய்வு செய்து வருகின்றனர். சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறதா, மெட்டல் டிடெக்டர் கருவிகள் நிறுவப்பட்டு இருக்கிறதா, மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறதா என பல்வேறு அம்சங்களை என் டி ஏ அதிகாரிகள், மாநில அதிகாரிகள், போலீசார் ஆய்வில் ஈடுபட்டு இருக்கின்றனர். இதற்கிடையே நேற்று காணொளி காட்சி மூலமாக, தலைமைச் செயலாளர் சாய்குமார், மாவட்ட ஆட்சியர்களுடன்…
சென்னையில் இன்று பகல்நேர வெப்பநிலை குறைந்து, ஈரப்பதமான காற்று வீசுவதால் குளிர்ச்சியான சூழல் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில், சென்னைக்குக் கிழக்கே – வடகிழக்கே சுமார் 80–100 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மேகக் கூட்டம், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் மேகமூட்டத்தையும் ஈரப்பதத்தையும் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளி குறைவாக இருப்பதால் பகல்நேர வெப்பநிலை இயல்பை விட 1–3°C குறைவாக இருக்கக்கூடும்; அதேவேளையில், வலுவான கடல் காற்று ஈரப்பதமான காற்றை நிலப்பகுதியை நோக்கி வீசச் செய்யும் எனவும், பரவலான கனமழைக்கு வாய்ப்பில்லை என்றாலும், சென்னை உள்ளிட்ட வட கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. மொத்தத்தில், வானிலை அதிக மேகமூட்டத்துடனும், அதிக ஈரப்பதத்துடனும், சற்று குளிர்ச்சியாகவும் காணப்படுவதால் சென்னை மக்கள் ஜில்லுனு ஒரு வானிலையை அனுபவிக்கக்…
ஆளுநர் அறிக்கை குறித்து விமர்சித்த உதயநிதி, சட்டப்பேரவையில் உதறல்நிதியாகவும், பதறல் நிதியாகவும் இருந்ததாக தவெக ஐ.டி விங்க் விமர்சித்துள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை தொடங்கியதுமே உதறல்நிதிக்கு பாய்ண்ட் கிடைக்காமல் பதறத் தொடங்கிவிட்டார். பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழியுடன் ஆளுநர் உரை தொடங்கியதில் சட்டமன்ற நிகழ்வை டிவியில் பார்த்தபோதே கொளத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு வேர்க்கத் தொடங்கி இருக்கும் என தவெக ஐ.டி.விங்க் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலுநாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் பெயர்கள் ஆளுநர் உரையில் இடம்பெற்றதைக் கண்டு, ஃப்ராடு கட்சி திமுகவிற்கு BP எகிறத் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு திட்டமாக அறிவிக்கப்பட்டது தொடங்கி, உச்சமாக, சமூக நீதிக் கணக்கீட்டு ஆய்வாகச் சாதிவாரிக் கணக்கீட்டு ஆய்வு, Caste சர்வே நடத்தப்படும் என்ற அறிவிப்பில், ஒட்டுமொத்தத் திமுகவிற்கும் உள்நாக்கு வரை உலர்ந்துபோய் விட்டது எனக் கூறப்பட்டுள்ளது. ஊழலில் மூழ்கித் திளைத்த திமுகவுக்கு உதறலே எடுத்துவிட்டது.…
தமிழகம் முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் அருகே செயல்பட்டு வரும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சரவணன் தலைமையில் ஆறு பேர் கொண்ட அதிகாரிகள் குழு காலை முதலே இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளது. அலுவலகத்தில் உள்ள முக்கிய ஆவணங்கள், கணக்கு பதிவேடுகள் மற்றும் பணப் பரிவர்த்தனை தொடர்பான விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் 44 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், இந்த நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சோதனை நிறைவடைந்த பின்னர், அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்.டி.ஓ.) லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் பல்லடம் சாலையில் அமைந்துள்ள தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் காலை முதலே லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் சசிலேகா தலைமையில் போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனையைத் தொடங்கினர். சோதனை நடத்தப்படும் தகவல் அறிந்ததும் ஆர்.டி.ஓ. அலுவலகத்தின் முக்கிய நுழைவாயில் கதவுகள் அனைத்தும் மூடப்பட்டன. அலுவலகத்திற்குள் இருக்கும் ஊழியர்கள் தவிர, வெளிநபர்கள் மற்றும் இடைத்தரகர்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதேபோல், சோதனை தொடங்குவதற்கு முன்பாக உள்ளே இருந்த நபர்கள் யாரும் வெளியில் செல்லவும் போலீசார் அனுமதிக்கவில்லை. அலுவலகத்தின் ஒவ்வொரு பிரிவாகச் சென்று, அங்குள்ள கோப்புகள், கணினிகள் மற்றும் கணக்கில் வராத பணம் ஏதேனும் உள்ளதா? என்று சல்லடை போட்டு தீவிர சோதனை நடத்தினர். மேலும் வாகன தணிக்கை நடைபெறும் பகுதியிலும் சோதனை நடத்தப்பட்டது.…
திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களின் திறமை, ஒழுக்கம் மற்றும் கல்வித் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஒரு நாள் “மாணவ தலைமை ஆசிரியர்” பொறுப்பு வழங்கும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒன்பதாம் வகுப்பு ‘ஆ’ பிரிவில் பயிலும் கோகுல்ராஜ் மற்றும் ஹர்ஷந்த் ஆகியோர் ஒரு நாள் தலைமை ஆசிரியர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பள்ளியின் செயல்பாடுகளைக் கவனித்து வருகின்றனர். இது குறித்து மாணவர்கள் கூறுகையில், எங்கள் பள்ளியில், மாணவர்களின் கல்வி ஒழுக்கம் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு திறமைகளை மேம்படுத்தும் வகையில் இந்த புதிய முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாதம் ஒரு முறை இது போன்று மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு தலைமை ஆசிரியராக ஒரு நாள் பணியாற்றுவார்கள். தற்போதைய சூழலில் எங்கள் பள்ளியில் பொதுமக்கள் காலை 4:30 மணி முதல் 7:30 மணி வரை நடைப்பயிற்சி மேற்கொள்ள அரசு அனுமதித்துள்ளது. ஆனால், பலர் காலை 8:30 மணி வரை மைதானத்திலேயே இருப்பதால்…
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகிய விதம் குறித்து வருத்தம் தெரிவித்ததுடன், ரோகித் சர்மா 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய ஸ்ரீகாந்த், “விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியிருக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. அவரின் வயதை வைத்து மதிப்பிட முடியாது. விளையாட்டின் மீது கொண்ட ஆர்வம், ஆக்ரோஷம், அர்ப்பணிப்பு மற்றும் சாதிக்க வேண்டும் என்ற வேகம் ஆகியவற்றால் அவர் இன்னும் தனித்துவமான வீரராக திகழ்கிறார்” என்றார். மேலும், “டி20 கிரிக்கெட்டிலும், ஐபிஎல் தொடரிலும் விராட் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். இந்திய கிரிக்கெட்டுக்காக மிகப்பெரிய பங்களிப்பு செய்த அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் அரச மரியாதையுடன் கூடிய பிரியாவிடை வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறாதது வருத்தமளிக்கிறது” என்று தெரிவித்தார். அதே…