இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவரான திரௌபதி முர்முவுக்கு இன்று 68-வது பிறந்தநாள் ஆகும். இதனை முன்னிட்டு அவருக்கு துணை ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யும் குடியரசுத் தலைவருக்குப் பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளப் பதிவில்,
மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், குடியரசுத் தலைவர் நல்ல உடல்நலத்துடன் இந்தியத் திருநாட்டிற்கான தங்களின் அர்ப்பணிப்பான சேவை மேலும் சிறக்க இந்த இனிய நாளில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
