Close Menu
    What's Hot

    ஜப்பானில் 7.1 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!. சுனாமி எச்சரிக்கை; மக்கள் பீதி!

    ’காவிரியில் தமிழ்நாட்டிற்கு கர்நாடகா தண்ணீர் திறக்க வேண்டும்’

    போயஸ் கார்டன் இல்லம் முன்பு குவிந்த ரசிகர்கள்..!! கையசைத்து நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»டெல்லியில் கர்நாடக எம்.பி.க்களுடன் சந்திப்பு…. மிகப்பெரிய வெற்றி என முதல்வர் டி.கே. சிவக்குமார் பெருமிதம்
    Featured

    டெல்லியில் கர்நாடக எம்.பி.க்களுடன் சந்திப்பு…. மிகப்பெரிய வெற்றி என முதல்வர் டி.கே. சிவக்குமார் பெருமிதம்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    013 karnataka
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டெல்லியில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் “மிகப்பெரிய வெற்றி”  பெற்றுள்ளதாக கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கர்நாடக முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தக் கூட்டம் அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களிடமும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வரவேற்பைப் பெற்றதாகவும், எதிர்க்கட்சி தலைவர்கள்கூட இந்த முயற்சியை பாராட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது.

    கூட்டத்தில் மத்திய அமைச்சர்களான பிரகலாத் வெங்கடேசு ஜோஷி, கே. சோபா,, வீரண்ணா சோமண்ணா ஆகியோர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    மேலும், முன்னாள் முதலமைச்சர்களான பசவராஜ் பொம்மை, ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் சுதா மூர்த்தி ஆகியோர், “இவ்வளவு அதிகமான எம்.பி.க்கள் ஒரே கூட்டத்தில் பங்கேற்பதை இதுவரை பார்த்ததில்லை; இது ஒரு புதிய முயற்சி” என்று பாராட்டியதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    இந்தக் கூட்டம், “ஒற்றுமையில்தான் வலிமை உள்ளது” என்ற செய்தியை வெளிப்படுத்தியதாகவும், அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து கர்நாடக மாநில வளர்ச்சிக்காக அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரின் அழைப்புக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இந்தக் கூட்டத்தின் முக்கிய முடிவுகளில் ஒன்றாக, மத்திய அரசின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ள திட்டங்களை விரைவுபடுத்தவும், மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிதியை பெற்றுத் தரவும், வறட்சி நிவாரண நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற்றுத் தரவும் அனைத்து எம்.பி.க்களும் ஒருங்கிணைந்து செயல்பட ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    இந்தக் கூட்டம் “முழுமையான வெற்றியைப் பெற்றுள்ளது” என்று கர்நாடக முதல்வர் அலுவலகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    D K Shivakumar Delhi Meeting Karnataka MPs Karnataka Politics Mekedatu Dam
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமேகதாது அணை… கீழ்நிலை மாநிலங்களின் ஒப்புதல் அவசியம்… பிரதமர் மோடிக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் கடிதம்…
    Next Article மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சொத்து மோசடி..!! 19 பேர் மீது பாய்ந்தது வழக்கு..!!
    Editor TN Talks

    Related Posts

    ஜப்பானில் 7.1 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!. சுனாமி எச்சரிக்கை; மக்கள் பீதி!

    July 28, 2026

    ’காவிரியில் தமிழ்நாட்டிற்கு கர்நாடகா தண்ணீர் திறக்க வேண்டும்’

    July 28, 2026

    போயஸ் கார்டன் இல்லம் முன்பு குவிந்த ரசிகர்கள்..!! கையசைத்து நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்!

    July 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஜப்பானில் 7.1 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!. சுனாமி எச்சரிக்கை; மக்கள் பீதி!

    ’காவிரியில் தமிழ்நாட்டிற்கு கர்நாடகா தண்ணீர் திறக்க வேண்டும்’

    போயஸ் கார்டன் இல்லம் முன்பு குவிந்த ரசிகர்கள்..!! கையசைத்து நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்!

    ஜான்சன் & ஜான்சன் பவுடரால் புற்றுநோய்!. பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.52,000 கோடி இழப்பீடு வழங்க ஒப்புதல்!

    20 நிமிடத்தில்.. சீனாவை அடுத்தடுத்து உலுக்கிய 2 நிலநடுக்கம்..!! பதற்றத்தில் மக்கள்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.