Close Menu
    What's Hot

    விருது விழா: புதுச்சேரி வருகிறார் அமித்ஷா… ஏற்பாடுகள் தீவிரம்!

    காமன்வெல்த் போட்டி;  தங்கமே இலக்கு… அரையிறுதிக்கு முன்னேறிய சாக்‌ஷி சவுத்ரி உறுதி!

    மாணவர்களுக்கு ஆபத்தா? மோடி அரசு விட்டு வைக்காது- அமித்ஷா உறுதி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சி.எம். பற்றி பேசினால் வழக்கு… சீமான் குறித்து பேசினால் வழக்கில்லையா? யூ டியூப்பர் பிஸ்மி மீது வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
    Featured

    சி.எம். பற்றி பேசினால் வழக்கு… சீமான் குறித்து பேசினால் வழக்கில்லையா? யூ டியூப்பர் பிஸ்மி மீது வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

    Editor TN TalksBy Editor TN TalksJuly 28, 2026Updated:July 28, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    023 bismi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தீரன் திருமுருகன்  மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், வலைப்பேச்சு மீடியாவைச் சேர்ந்த பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் உள்ளிட்டோர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து மிகவும் தரக்குறைவாகவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் தரக்குறைவான பதிவுகள் செய்து சீமான்  நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வருகின்றனர்.

    மேலும், இது அரசியல் உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட இந்த அவதூறு பிரசாரம். இதுகுறித்து காவல்துறை உயரதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எவ்வித முதல் தகவல் அறிக்கையும் (FIR) பதிவு செய்யப்படவில்லை.

    எனவே, கடந்த ஜூலை.3-ஆம் தேதி அளித்த புகாரை பரிசீலித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தர வேண்டும் எனக் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கௌரி முன்பு விசாரணைக்கு வந்தது.

    மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சீமான் மீது தொடர்ந்து அவதூறான கருத்துக்களை இந்த யூ டியூப்பர்  திட்டமிட்டு பதிவு செய்து வருகின்றனர். புகார் மனு அளித்து இதுவரை எவ்வித நடவடிக்கையும் காவல்துறை எடுக்க மறுக்கிறது என வாதிட்டனர்.

    இதனை தொடர்ந்து நீதிபதி திமுக எம்.எல்.ஏ,  முதல்வர் குறித்து  பேசினால் உடனே நடவடிக்கை எடுத்து கைது செய்வீர்கள் அதற்கு உங்களுக்கு அதிகாரம் உள்ளது. சீமானை பொருத்தவரை தேர்தலில் தோற்கலாம், வெற்றி பெறலாம். ஆனால் தற்போதைக்கு தமிழகத்தில் தவிர்க்க முடியாத ஒரு அரசியல்வாதியாக உருவாகி உள்ளார் என்றார்.

    அப்போது மனுதாரர் தரப்பில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் இடம் விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ்  100 கோடி பெற்றார் என யூடியூபில் பேசியதற்காக உடனடியாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் சீமான் குறித்து பேசினால் நடவடிக்கை எடுப்பதில்லை என தெரிவிக்கப்பட்டது.

    இதைக் கேட்ட நீதிபதி இதற்கு மட்டும் எப்படி உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? காவல்துறை பாரபட்சம் பார்க்கிறதா? ஒரு தலைவர் குறித்து அவதூறாகவோ அல்லது அசிங்கமாகவோ பேசுவதை வேடிக்கை பார்க்க முடியாது.

    இந்த வழக்கை பொறுத்தவரை you tuber,  சீமானை மிகவும் கொச்சையாகவும் தரக்குறைவாகவும் விமர்சித்துள்ளனர்.  இதனை ஏற்க முடியாது. எனவே சைபர் க்ரைம்  காவல்துறையினர், இன்று மாலைக்குள் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நாளை நீதிமன்றத்தில்  அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த வீடியோக்களை நீக்க வேண்டும்  உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

    Bismi Madras High Court Seeman Tamil Nadu Politics YouTuber
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபரபரப்புக்கு மத்தியில்.. மாணவர்களிடம் கைகூப்பி மன்னிப்பு கேட்ட ஆளுநர் அர்லேகர்! காரணம் என்ன..??
    Next Article ஓயாத உக்ரைன்-ரஷியா போர்..!! 1,612வது நாளில் டிரம்ப் உடன் ஜெலன்ஸ்கி இன்று சந்திப்பு..!!
    Editor TN Talks

    Related Posts

    விருது விழா: புதுச்சேரி வருகிறார் அமித்ஷா… ஏற்பாடுகள் தீவிரம்!

    July 29, 2026

    காமன்வெல்த் போட்டி;  தங்கமே இலக்கு… அரையிறுதிக்கு முன்னேறிய சாக்‌ஷி சவுத்ரி உறுதி!

    July 29, 2026

    மாணவர்களுக்கு ஆபத்தா? மோடி அரசு விட்டு வைக்காது- அமித்ஷா உறுதி

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விருது விழா: புதுச்சேரி வருகிறார் அமித்ஷா… ஏற்பாடுகள் தீவிரம்!

    காமன்வெல்த் போட்டி;  தங்கமே இலக்கு… அரையிறுதிக்கு முன்னேறிய சாக்‌ஷி சவுத்ரி உறுதி!

    மாணவர்களுக்கு ஆபத்தா? மோடி அரசு விட்டு வைக்காது- அமித்ஷா உறுதி

    பழனி மட நில வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

    நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து தொடர்பான வழக்கு… மத்திய அரசு, பல்கலை. மானியக் குழு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.