Author: Editor TN Talks
காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன், காவிரி நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு, இது குறித்துப் பேசுவதற்கு வேறு எந்த பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என்று கூறினார். மேலும், காவிரி நதி நீர் தொடர்பாக முடிவெடுக்கும் முழு அதிகாரமும் உச்சநீதிமன்றத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு மட்டுமே உள்ளது, இந்த நிலையில் இரு மாநில பிரதிநிதிகளும் தனியாகப் பேச்சுவார்த்தை நடத்த முயல்வது தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரானது மட்டுமின்றி, உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும் என்றார். கர்நாடகாவில் உள்ள நீர் பிடிப்பு மற்றும் பாசன பகுதிகளைப் பார்வையிடச் செல்லும் பட்சத்தில், அங்கிருந்து திரும்பும்போது கர்நாடக முதலமைச்சரையும் தமிழ்நாட்டிற்கு…
12 வயது சிறுவன் கார் விபத்தில் உயிரிழப்பு; தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை!
மதுபோதையில் காரை ஓட்டிச் சென்று நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏற்றியதில், 12 வயது சிறுவன் பலியான வழக்கில், தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எம்பீ டிஸ்ட்லரீஸ் நிறுவன குழுமத்தின் தலைவரான எம்.என்.புருஷோத்தமனின் மகன் ஷாஜி புருஷோத்தமன் அந்த நிறுவனத்தின் இயக்குனராக இருந்தார். கடந்த 2013ஆம் ஆண்டு மே 22ம் தேதி, மது போதையில் நண்பர்களுடன் தனது பென்ஸ் காரில், சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து, நடைபாதையில் துாங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் படுகாயம் அடைந்த 12 வயது சிறுவன் முனிராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்தில், வாசு, காஜா முகைதீன், மணி உள்பட நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின், ஷாஜி புருஷோத்தமன், அவரது…
அருணாச்சலப் பிரதேசம் மற்றும் நாகாலாந்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பின்போது, இரு மாநிலங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பு மற்றும் அதனால் உருவான தற்போதைய நிலைமை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலை குறித்து அருணாச்சலப் பிரதேசம் மற்றும் நாகாலாந்து எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினோம். இந்தச் சவால்களை எதிர்கொள்ள மத்திய அரசு, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் தொடர்ந்து இணைந்து செயல்படும். பாதிக்கப்பட்ட அனைவரின் நலன் மற்றும் பாதுகாப்பிற்காக பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் பொதுத் தேர்வுகள் (திருத்த) மசோதா, 2026 குறித்த விவாதத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேர்வுத் தாள் கசிவு பிரச்சினையைத் தடுக்க அரசு கொண்டு வந்துள்ள நடவடிக்கைகள் போதுமானவை அல்ல என்று விமர்சித்தார். அவர் பேசுகையில், “தேர்வுத் தாள் கசிவால் எத்தனை அப்பாவி மாணவர்கள் பாதிக்கப்பட்டனர், எத்தனை பேர் தாக்கப்பட்டனர், எத்தனை பெற்றோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மனவேதனை அடைந்துள்ளனர். இதை வெறும் புள்ளிவிவரங்களாக மட்டும் பார்க்க முடியாது” என்றார். மேலும், “பொதுத் தேர்வுகள் (திருத்த) மசோதா, 2026-ல் அபராதத்தை அதிகரித்தல், கடுமையான தண்டனைகள், சிறப்பு பணிக்குழு, விரைவு நீதிமன்றங்கள் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இவை மட்டும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. தேர்வுகளை எவ்வாறு வெளிப்படையாக நடத்தப் போகிறீர்கள், தாள் கசிவு இல்லாமல் எவ்வாறு பாதுகாப்பீர்கள் என்பதுதான் முக்கியம்” என்று தெரிவித்தார். அத்துடன், “இதுபோன்ற வலுவான சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று 2024-ஆம் ஆண்டிலேயே நாங்கள்…
இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையரும், International IDEA உறுப்பு நாடுகளின் கவுன்சில் தலைவருமான ஞானேஷ் குமார், இன்று (ஜூலை 30) புதுடெல்லியில் உள்ள நிர்வாசன் சதன் அலுவலகத்தில், இந்தியாவிற்கான ஜார்ஜியா நாட்டின் தூதர் வக்தாங் ஜாவ்ஷ்விலியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது, IICDEM 2026 மாநாட்டில் உருவான புரிந்துணர்வின் அடிப்படையில், இரு நாடுகளும் ஜனநாயக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் உறுதியை மீண்டும் வெளிப்படுத்தின. மேலும், தேர்தல் நிர்வாகம், தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சி, மற்றும் தேர்தல் தொடர்பான சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயல்பட ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்த அமைச்சரிடம் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும்படி பெண்கள் முறையிட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பேருந்து நிலையம் அருகே சுங்குவார்சத்திரம் குளம் அமைந்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருந்த இந்த குளத்தை தனியார் தொழிற்சாலையான மோபீஸ் இந்தியா நிறுவனம் தனது சமூகப் பங்களிப்பு நிதியின் கீழ் இக்குளத்தினை தூர்வாரி, மிகப்பெரிய நீர் ஆதாரமாக மாற்றும் முயற்சியை மேற்கொண்டது. அதன் திறப்பு நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் எஸ்.பி.கே தென்னரசு, ஆட்சியர் சினேகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அமைச்சர் குளத்தினை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த போது மொளச்சூர் பள்ளத்தெரு பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென அமைச்சரை அழைத்து, தங்கள் பகுதியில் ஆறு மாத காலமாக குடிநீர் பிரச்சினை நிலவிவருவதாகவும் சிண்டெக்ஸ் டேங்க் வைத்து குடிநீர் பிரச்சினையைத் தீர்க்குமாறும் கோரிக்கை விடுத்தனர். உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்த…
காவிரியில் நீர் திறந்துவிட மறுக்கும் தமிழர் விரோதப் போக்கை கர்நாடக மாநில அரசு கைவிட வேண்டும் எனக் கண்டித்துள்ள விசிக தலைவர் தொல். திருமாவளவன், தமிழ்நாடு அரசு உடனே அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். திருமாவளவன் தனது எக்ஸ்தளப் பதிவில் கூறியுள்ளதாவது… காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு ஆணையிட்ட பிறகும் கூட காவிரியில் நீர் திறந்துவிடாத கர்நாடக அரசின் தமிழர் விரோதப் போக்கு அதிர்ச்சியளிக்கிறது. ஒழுங்காற்றுக் குழுவையும் அவமதிக்கும் வகையில் நடந்து கொள்ளும் கர்நாடக அரசின் இப்போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டிக்கிறோம். கர்நாடக அரசின் இத்தகைய பிடிவாதப் போக்கினால் தமிழ்நாட்டின் டெல்டா பகுதி முழுவதும் விவசாயம் பாதிக்கப்பட்டுப் பாலைவனமாக மாறிவிடும் ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது. இப்போது காவிரி மேலாண்மை வாரியம் அடுத்துவரும் 15 நாட்களுக்கு 3500 கியூசெக் நீரைத் திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு ஆணையிட்டுள்ளது. ஆனால், அதையும் கொடுக்கக்கூடாது என கர்நாடக மாநில விவசாயிகள் போராடுகின்றனர். குறுவை சாகுபடி…
முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்று நந்தனம், போரூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் ஆய்வு செய்ததுடன், கத்திப்பாரா பகுதியில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியினையும் பார்வையிட்டார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அரசுத் தரப்பிலும் தவெக தரப்பிலும் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் இந்த ஆய்வின் போது முதலமைச்சர் விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாக அதிமுக ஐடிவிங் குற்றம்சாட்டியுள்ளது. நேற்று கத்திப்பாரா பகுதியில் 101 அடி உயரத்தில் நின்று “Drone Shot” வைத்து முதலமைச்சர் ரீல்ஸ் ஷூட்டிங் எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ள அதிமுக ஐ.டி.விங்க், விமான நிலையத்திற்கு மிக அருகில் உள்ள கத்திப்பாரா பகுதி Red Zone-ஆக வரையறுக்கப்பட்டுள்ளதாகவும், அதாவது, இந்த பகுதியில் எந்தவித Drone-களும் பறக்க எவ்வித அனுமதியும் கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் குறித்த புரிதல் இல்லாமல் ஒரு முதலமைச்சர் ரீல்ஸ் எடுப்பதற்காக No Fly Zone விதிகளை மீறியிருப்பதாக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளதுடன், மத்திய…
திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை ஒத்தி வைத்த தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம், இன்று மாலை அதில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும் மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசிய விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மீது தூத்துக்குடி மாவட்ட குற்ற பிரிவு காவல் துறையினர் மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கடந்த இருபதாம் தேதி அவர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் கடந்த 10 நாட்களாக அடைக்கப்பட்டுள்ளார் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு சார்பில் தன் மீது போடப்பட்ட வழக்கு சட்ட முரண்களுக்கு எதிரானது என தெரிவித்து இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.…
அரசு கல்லூரிகளில் 100 புதிய முதல்வர்கள் நியமனம் மற்றும் இடமாறுதல் கலந்தாய்வு தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு கல்லூரிக்கல்வித் துறை 2026–27 கல்வியாண்டிற்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்களின் பொதுமாறுதல் கலந்தாய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் 129 முதல்வர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க தகுதியுடையவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தற்போது 100 முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், 100 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமிக்கும் பணியும் இந்தக் கலந்தாய்வின் வாயிலாக மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் முதல்வர்கள் 30.07.2026 காலை 10 மணி முதல் 31.07.2026 மாலை 5 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிக் கல்வி ஆணையகம் வெளியிட்டுள்ள உத்தரவின்படி, தகுதியுடைய அரசு கல்லூரி முதல்வர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இணையதளத்தில் விண்ணப்பித்து கலந்தாய்வில் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.…