அருணாச்சலப் பிரதேசம் மற்றும் நாகாலாந்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்தச் சந்திப்பின்போது, இரு மாநிலங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பு மற்றும் அதனால் உருவான தற்போதைய நிலைமை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலை குறித்து அருணாச்சலப் பிரதேசம் மற்றும் நாகாலாந்து எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினோம். இந்தச் சவால்களை எதிர்கொள்ள மத்திய அரசு, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் தொடர்ந்து இணைந்து செயல்படும். பாதிக்கப்பட்ட அனைவரின் நலன் மற்றும் பாதுகாப்பிற்காக பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
