Author: Editor TN Talks

வட ஆப்பிரிக்காவில் உள்ள ஸ்பெயினின் தன்னாட்சி பிரதேசமான சியூட்டா (Ceuta) எல்லைக்குள் மொராக்கோவிலிருந்து சுமார் 60 ஆயிரம் புலம்பெயர்ந்தோர் நுழைந்த நிலையில், இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது என்று ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஸ்பெயின் கார்டியா சிவில் (Guardia Civil) மற்றும் கடல்சார் மீட்புப் படை வெளியிட்ட தகவலின்படி, உயிரிழந்தவர்களின் மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்த உடற்கூறு ஆய்வு (Autopsy) மேற்கொள்ளப்பட உள்ளது. எல்லையை கடக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. பலர் நீந்தியே சியூட்டாவுக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. இதேபோன்ற பெருமளவிலான எல்லை மீறல் சம்பவம் கடந்த 2021-ஆம் ஆண்டிலும் நடந்தது. மொராக்கோவை ஸ்பெயினிலிருந்து பிரிக்கும் ஜிப்ரால்டர் நீரிணை வழியாக நடைபெற்ற இந்த பெருமளவிலான நுழைவுக்குப் பிறகு, இதுவரை 48 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீண்டும் மொராக்கோவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், எல்லை நிலைமை இன்னும் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என கூறப்படுகிறது. சியூட்டாவில் உள்ள…

Read More

அனைத்து ரக நூலுக்கும் கிலோவுக்கு 10 ரூபாய் விலை உயர்த்தி நூற்பாலைகள் அறிவித்துள்ள நிலையில், மத்திய அரசை போல மாநில அரசும் பருத்தி கொள்முதல் செய்து விலையை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திருப்பூரின் முக்கிய தொழிலான பனியன் உற்பத்திக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் உள்ளது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் 60% பனியன் ஆடைகள் திருப்பூரில் இருந்து மட்டுமே அனுப்பப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் நூல் உற்பத்தி செய்ய தேவையான பருத்தி விளைச்சல் குறைந்தது காரணமாக பஞ்சு விலை திடீரென அதிகரித்தது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பருத்தி இறக்குமதிக்கான 11 சதவீத வரி விதிப்பை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால் நூல் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் தொடர்ந்து பஞ்சு விலை உயர்ந்து வருவதால் நூல் விலையும் உயர்த்தப்பட்டு வருகிறது. 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான ஒரு கேண்டிட் பஞ்சு விலை தற்பொழுது…

Read More

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட அம்மாபாளையம் பகுதியில் உள்ள தனியார் கார் பழுது பார்க்கும் நிலையத்தில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ஆய்வு மேற்கொண்டார். கார் பழுதுபார்க்கும் நிலையங்களில் மேற்கொண்ட வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களை ஆய்வு செய்தார், மேலும் திருப்பூர் மாவட்ட தொழில் மையத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மதன், MSME துறையின் கீழ் பல பிரிவுகள் இயங்கி வருகின்றன. மாவட்ட தொழில் மையம் (DIC) மூலமாக தொழில் முனைவோருக்கு அளிக்கப்படும். கடன் உதவிகள், மானியங்கள் மற்றும் ‘நீட்ஸ்’ (NEEDS) போன்ற அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அடிப்படை கள ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். திருப்பூரில் உள்ள 5,000-க்கும் மேற்பட்ட சிறு, குறு ஆடை தயாரிப்பு மற்றும் தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் மின்சார நிலைக்கட்டணப் பிரச்சனைகள் குறித்து இங்குள்ள துறை…

Read More

தவெக எம்.எல்.ஏ பேரம் வழக்கு தொடர்பாக செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டனர். இருவரிடமும் சுமார் 2 மணி நேரமாக திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த இரண்டு நாள்கள் கையெழுத்திட ஆஜராகாத நிலையில், இன்று வந்த செந்தில்பாலாஜி சிறிது நேரம் வெளியே காத்திருந்து பின்னர் காவல் நிலையத்தில் கையெழுத்திட சென்றார். விசாரணைக்குப் பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த செந்தில்பாலாஜி, தவெக எம்.எல்.ஏ பேரம் வழக்கில் புகாரிலும் என் பெயர் இல்லை, எப்.ஐ.ஆரிலும் என் பெயர் இல்லை. ஆனாலும், என் பெயர் கூறப்பட்ட நிலையில், முன் ஜாமீன் பெற்று காலை மாலையில் கையெழுத்திட்டு வருகிறேன். இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு துறை கூடுதலாக ஒரு வழக்கை பதிவு செய்து, என் அறையில் சோதனையும்,  பல்வேறு இடங்களில் சோதனையும் செய்தார்கள், உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தேன். முன்…

Read More

தனது ரசிகர் மன்றத்தைச் சார்ந்த நிர்வாகிகள் ராஜசேகரன் மற்றும் தனசேகர் ஆகிய  இரண்டு பேரின் குழந்தைகளுக்கான  எம்பிபிஎஸ் மற்றும்  இன்ஜினியரிங் படிப்பிற்கான முழு கல்வி செலவையும்  நடிகர் தனுஷ் ஏற்றுக் கொண்டு உதவி செய்துள்ளார். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ரசிகர் மன்ற நிர்வாகி ராஜசேகரனின்  மகள் ஹரிஷிதா  என்பவருக்கு அவரின் இன்ஜினியரிங் படிப்பிற்கான மொத்த செலவையும் ஏற்றார். அதேபோல வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரசிகர் மன்ற நிர்வாகி தனசேகரின்  மகள் ஸ்வேதா அவர்களின் மருத்துவ கல்லூரி படிப்பிற்கான (எம்பிபிஎஸ்) முழு செலவையும் ஏற்று உதவியுள்ளார். ஓம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இவர்கள் இரண்டு பேரின் குடும்பத்தாரை வரவழைத்து கல்வி செலவிற்கான  காசோலையை தனுஷ் வழங்கியதோடு, இரண்டு குழந்தைகளையும் பாராட்டினர்.

Read More

 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஆடவர் டிரிபிள் ஜம்ப் இறுதிப்போட்டியில் இந்திய வீரர்களான தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரவீன் சித்ரவேல் மற்றும் செல்வா பிரபு திருமாறன் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர். பிரவீன் சித்ரவேல் தனது சிறந்த முயற்சியில் 16.58 மீட்டர் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். செல்வா பிரபு திருமாறன் 16.52 மீட்டர் தாண்டி வெண்கலப் பதக்கத்தை வென்று இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தைச் சேர்த்தார். இந்திய தடகள அணிக்கு ஒரே போட்டியில் இரண்டு பதக்கங்களைப் பெற்றுத் தந்துள்ள பிரவீன் சித்ரவேல் மற்றும் செல்வா பிரபு திருமாறனின் சாதனை, காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை மேலும் உயர்த்தியுள்ளது.

Read More

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இடுக்கி மாவட்டம் முழுவதும் நேற்றிரவு முதல் விடிய விடிய பெய்து வரும் தொடர் கனமழையால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் நிலச்சரிவு மற்றும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக, இடுக்கி பட்டப்பாலம் மற்றும் கீரித்தோடு இடையே செல்லும் அடிமாலி – குமுளி தேசிய நெடுஞ்சாலையில் மூன்று முக்கிய இடங்களில் அடுத்தடுத்து மண்சரிவு ஏற்பட்டுள்ளது.இதனால் அந்த வழித்தடங்களில் போக்குவரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், சேலச்சுவடு – வன்னபுரம் சாலையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. நிலச்சரிவு அபாயம் தொடர்வதால் மலைப்பாதைகளில் பயணிக்கும் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையோடும், அத்தியாவசியத் தேவைகளின்றி பயணங்களைத் தவிர்க்குமாறும் இடுக்கி மாவட்ட நிர்வாகம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, மண்சரிவு ஏற்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் மண் மற்றும் பாறைகளை அகற்றி, போக்குவரத்தை மீண்டும் சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. தொடர் மழையால் பாதிக்கப்பட்ட…

Read More

பொதுத்தேர்வுகளில் முறைகேடுகள் செய்தால் கடும் தண்டனை தரும் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு முறைப்படி ஒப்புதல் அளித்துள்ளார். மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பொதுத்தேர்வுகள் முறைகேடு தடுப்பு மசோதா அண்மையில் நிறைவேறியது. வினாத்தாள் கசிவில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, ரூ.10 கோடி வரை அபராதம், குற்றவாளிகளுக்கு சொந்தமான சொத்துகள் பறிமுதல் போன்ற கடும் தண்டனைகள் வழங்கும் அம்சங்கள் இந்த திருத்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன. மேலும், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு விரைவான விசாரணை நடத்த ஒவ்வொரு மாநிலத்திலும் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் எனவும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட பொதுத் தேர்வுகள் (முறைகேடு தடுப்பு) மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, திரவுபதி முர்மு முறைப்படி ஒப்புதல் அளித்துள்ளார். இதனை அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் மூலமாக மத்திய சட்ட அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Read More

காவிரி விவகாரத்தில்  காரியப் பூனையான திமுக கபட நாடகம் ஆடுவதாக தமிழக  வெற்றிக் கழகம் கடுமையாக விமர்சித்துள்ளது. தவெக ஐடி விங் எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது… விவசாயிகள் நலன்களுக்காகவும் கர்நாடக வாழ் தமிழ்ச் சொந்தங்களுக்காகவும் யோசித்துச் செயல்படுவதுதான் மக்கள் விரும்பும் முதல்வர், நம் வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மனசாட்சி உள்ள மக்களாட்சி. திமுக போல சுயநலம் கொண்டு தனி ஆவர்த்தனம் செய்யத் துடிப்பவர் இல்லை, எங்கள் வெற்றித் தலைவர். தொடர்ந்து பல ஆண்டுகளாக ஒன்றிய அரசிடம் பேரம் பேசி, பெற வேண்டிய இலாகாக்களைப் பெற்ற போதெல்லாம் காவிரி விவகாரத்திற்காக ஒரு மந்திரி பதவியையாவது, ஒருநாளாவது உதறி இருக்குமா இந்தத் திமுக? அத்தனை ஆண்டுகளில் ஒருமுறையாவது காவிரிப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண முயன்றிருக்குமா இந்தத் திமுக? அப்போதெல்லாம் பதவியில் ஒட்டிக்கொண்டு சுகம் கண்ட சுயநல இயக்கம்தான் இந்தத் திமுக. ஆட்சியில் இருக்கும்போது சத்தம் போடுவதுபோல சவுண்ட் கொடுத்துவிட்டு, மியூட்…

Read More

கார்த்தி கதாநாயகனாக நடிக்க  பி.எஸ். மித்ரன் இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ். லக்ஷ்மண் குமார் மற்றும் விவிஒய் நிறுவனம் சார்பில் இஷான் சக்சேனா தயாரிப்பில், மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘சர்தார் 2’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘சர்தார்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து உருவாகி வரும் சர்தார் 2 படத்தின் டீசர், படத்தின் பிரம்மாண்டம், அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் கார்த்தியின் வித்தியாசமான தோற்றங்களை வெளிப்படுத்தி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. அதிலும் வில்லனாக நடித்திருக்கும் சூர்யாவின் டீசர் காட்சிகள் இன்னும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சண்டைப் பயிற்சியை திலீப் சுப்பராயன் கவனித்துள்ளார். கலை இயக்குநராக ராஜீவன் நம்பியார், படத்தொகுப்பாளராக வேலுக்குட்டி பணியாற்றியுள்ளனர். தயாரிப்பு நிர்வாகத்தை ஏ. பால் பாண்டி மேற்கொண்டுள்ளார். இணைத்…

Read More