Close Menu
    What's Hot

    விராலிமலை, கரூர் இடைத்தேர்தல் தடையை நீக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

    மொராக்கோவில் இருந்து சியூட்டாவுக்குள் ஆயிரக்கணக்கானோர் நுழைவு… உயிரிழப்பு 67 ஆக உயர்வு

    நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்… மாநில அரசும் பருத்தி கொள்முதல் செய்ய கோரிக்கை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»வழக்குகள் போடுவதிலேயே தவெக அரசு கவனம் செலுத்துகிறது…. செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு
    Featured

    வழக்குகள் போடுவதிலேயே தவெக அரசு கவனம் செலுத்துகிறது…. செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு

    Editor TN TalksBy Editor TN TalksAugust 1, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    019 senthil balaji
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தவெக எம்.எல்.ஏ பேரம் வழக்கு தொடர்பாக செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டனர். இருவரிடமும் சுமார் 2 மணி நேரமாக திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தினர்.

    கடந்த இரண்டு நாள்கள் கையெழுத்திட ஆஜராகாத நிலையில், இன்று வந்த செந்தில்பாலாஜி சிறிது நேரம் வெளியே காத்திருந்து பின்னர் காவல் நிலையத்தில் கையெழுத்திட சென்றார்.

    விசாரணைக்குப் பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த செந்தில்பாலாஜி,

    தவெக எம்.எல்.ஏ பேரம் வழக்கில் புகாரிலும் என் பெயர் இல்லை, எப்.ஐ.ஆரிலும் என் பெயர் இல்லை. ஆனாலும், என் பெயர் கூறப்பட்ட நிலையில், முன் ஜாமீன் பெற்று காலை மாலையில் கையெழுத்திட்டு வருகிறேன்.

    இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு துறை கூடுதலாக ஒரு வழக்கை பதிவு செய்து, என் அறையில் சோதனையும்,  பல்வேறு இடங்களில் சோதனையும் செய்தார்கள், உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தேன்.

    முன் ஜாமீன் தொடர்பாக எனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொள்வதால் இந்த வழக்கில் குறிப்பிட்ட நாட்கள் கையெழுத்திடுவதில் 5 நாட்கள் விலக்கு அளிக்க வேண்டும் என அனுமதி கேட்டு காவல்துறை மற்றும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன்.

    உச்ச நீதிமன்றம் டாஸ்மாக் முறைகேடு வழக்கில் நேற்றே முன் ஜாமீன் வழங்கியதால், இன்று முறைப்படி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு விசாரணைக்கு ஒத்துழைத்தேன்.

    டாஸ்மாக் முறைகேடு வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவர் பெயர் எப்.ஐ.ஆரில் இல்லை, எப்.ஐ.ஆரில் பெயர் உள்ள நபர்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.

    ஏற்கனவே அமலாக்கத்துறை டாஸ்மாக் முறைகேடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது, அதிலிருந்து லஞ்சஒழிப்பு துறை புதிய வழக்கு போட்டுள்ளது, இந்த வழக்கு நீண்டு செல்லாது.

    ஒரு ஆக்கப்பூர்வமான அரசு என்றால் மக்களுடைய அடிப்படை தேவைகள், கோரிக்கைகளை, குறைகளை நிறைவேற்றக்கூடிய அந்த பணிகளை கவனம் செலுத்தாமல், வழக்குகள் போடுவதிலேயே தவெக அரசு முனைப்பு காட்டுகிறது.

    நீங்களே பார்ப்பீர்கள், நான் மட்டுமல்ல, பல பேர் மீது வழக்குகள் வந்து கொண்டிருக்கிறது.  நீதிமன்றத்திற்கு சென்று பொய்யான வழக்குகள் என்பதை நிரூபித்து காட்டுவோம் என தெரிவித்துள்ளார்.

    DMK Political Allegation Senthil Balaji Tamil Nadu Politics TVK Government
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“தேவையென்றால் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்!” – கவிஞர் வைரமுத்து பேச்சு
    Next Article 2030-க்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு… தொழில் துறை அமைச்சர் மதன் தகவல்
    Editor TN Talks

    Related Posts

    விராலிமலை, கரூர் இடைத்தேர்தல் தடையை நீக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

    August 1, 2026

    மொராக்கோவில் இருந்து சியூட்டாவுக்குள் ஆயிரக்கணக்கானோர் நுழைவு… உயிரிழப்பு 67 ஆக உயர்வு

    August 1, 2026

    நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்… மாநில அரசும் பருத்தி கொள்முதல் செய்ய கோரிக்கை!

    August 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விராலிமலை, கரூர் இடைத்தேர்தல் தடையை நீக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

    மொராக்கோவில் இருந்து சியூட்டாவுக்குள் ஆயிரக்கணக்கானோர் நுழைவு… உயிரிழப்பு 67 ஆக உயர்வு

    நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்… மாநில அரசும் பருத்தி கொள்முதல் செய்ய கோரிக்கை!

    2030-க்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு… தொழில் துறை அமைச்சர் மதன் தகவல்

    வழக்குகள் போடுவதிலேயே தவெக அரசு கவனம் செலுத்துகிறது…. செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.