Author: Editor TN Talks

நடிகை த்ரிஷா குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாகக் கூறப்படும் கருத்துக்கு நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு சுந்தர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “உதயநிதி ஸ்டாலினின் பேச்சைக் கேட்டேன். அது மிகவும் தரக்குறைவானது, மலிவானது மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இருந்தது. அவர் பின்பற்ற விரும்பும் அரசியல் கலாச்சாரத்தை அதுவே பிரதிபலிக்கிறது” என்று தெரிவித்துள்ளார். மேலும், “இப்படிப்பட்ட மனநிலையுடன் அரசியல் கட்சியை வழிநடத்தவும், ஒருநாள் மாநிலத்தை ஆளவும் நினைப்பவர்கள் இருந்தால், கடவுள்தான் மக்களை காப்பாற்ற வேண்டும். பெண்களை இழிவுபடுத்தி, அவமதித்து பேசுவதை அரசியல் நாடகமாக மாற்றி, அதற்கு கைதட்டல் மற்றும் ஆரவாரம் பெறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும் அவர் கூறியுள்ளார். “பெண்களின் கண்ணியத்தை அரசியல் லாபத்திற்காக பலிகடாவாக்கத் தொடங்கினால், எந்தக் குடும்பமும் அதிலிருந்து விலகி இருக்க முடியாது. அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பொது உரையாடலுக்கு எல்லைகள் இருக்க வேண்டும். பெண்கள் எப்போதும் மரியாதையுடன் நடத்தப்பட…

Read More

பேசாத ஒன்றைப் பேசியதாகப் பொய் வழக்குப் போட்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை காவல்துறையை ஏவிக் கைது செய்துள்ளது ஆணவ அடக்குமுறை என திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பயந்து செய்த – இந்த பாசிச கைது நடவடிக்கை மூலம் எதிர்க்கட்சித் தலைவரை அச்சுறுத்த முடியாது எனவும் திமுகக் கூறியுள்ளது. திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது… பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை எதிர்கொள்ளத் துணிச்சலற்ற கோழை த.வெ.க. அரசு காவல்துறையை ஏவி அவரைக் கைது செய்துள்ளதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேற்று தஞ்சையில் விவசாயிகளுக்காகக் கழகம் எழுப்பிய கோரிக்கைகள் குறித்து வாய்திறக்காத அரசு, அந்தப் போராட்டத்தின் எழுச்சியைப் பார்த்து தொடை நடுங்கி, ஜனநாயகத்தின் முக்கியத் தூணான எதிர்க்கட்சித் தலைவரையே அடிப்படையற்ற பொய் வழக்கில் கைது செய்துள்ளது அராஜகத்தின் உச்சகட்டம்! மிக மோசமான ஜனநாயகப் படுகொலை!! முதலமைச்சர்…

Read More

உதயநிதி ஸ்டாலினின் பேச்சு பெண்களின் கண்ணியத்தையும், சமூகத்தில் அவர்களுக்கு வழங்க வேண்டிய மரியாதையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையிலான அணுகுமுறை என கவுண்டம்பாளையம் தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் குற்றம்சாட்டியுள்ளார். எக்ஸ்தளத்தில் கனிமொழி இட்டுள்ள பதிவு வருமாறு…. ஒரு பொது வாழ்க்கையில் இருக்கும் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர், அரசியல் கருத்து வேறுபாடுகளை நாகரிகமான முறையில் வெளிப்படுத்த வேண்டும். குறிப்பாக, பெண்களைப் பற்றியோ அல்லது பெண்களின் கண்ணியத்தை பாதிக்கும் வகையிலோ பேசுவது எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. பொது வாழ்க்கையில் இருக்கும் ஒருவர் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பொறுப்பு உண்டு. அரசியல் என்பது மக்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கான களம்; பெண்களின் கண்ணியத்தை இழிவுபடுத்துவதற்கான இடம் அல்ல. உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சை ஒரு பெண்ணாக நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது வெறும் அரசியல் கருத்து வேறுபாடு அல்ல; பெண்களின் கண்ணியத்தையும், சமூகத்தில் அவர்களுக்கு வழங்க வேண்டிய மரியாதையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையிலான அணுகுமுறை. அரசியல் அதிகாரம்…

Read More

தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக போராட்டத்தில் முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா தொடர்பாக அவதூறாகப் பேசிய புகாரின்பேரில், உதயநிதி ஸ்டாலினை தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலைய போலீசார் சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் வைத்து கைது செய்து, அவரை காவல் துறை வாகனத்தில் தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்கின்றனர். இந்த நிலையில் உதயநீதி ஸ்டாலின் மீது என்னென்ன பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து காவல் துறை தெரிவித்துள்ளது. 196 bns பகைமையை தூண்டுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் 192 bns கலவரத்தை தூண்டுதல் 352 bns பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் ஒருவரை வேண்டுமென்று அவமதித்தல் 79 bns பெண்ணின் கண்ணியத்திற்கு அல்லது மானத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசுதல் 296(b) bns பொது இடத்தில் அருவருப்பாக பேசுதல் 61 bns இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் இணைந்து சட்டவிரோத செயலை செய்ய திட்டமிடுதல் 351 bns…

Read More

பெண்களின் கண்ணியத்தை காயப்படுத்தும் உதயநிதி ஸ்டாலினின் இதுபோன்ற பேச்சுகளுக்கு ஜனநாயக ரீதியாக தக்க பதிலை தமிழக பெண்கள் வழங்குவார்கள் என அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார். அண்ணா உருவாக்கிய அறிவாலயத்தின் அரசியல் பண்பாட்டிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில், உதயநிதி அவர்கள் பேசிய ஆபாசப் பேச்சுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்து அமைச்சர் கீர்த்தனா எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளார். பொது மேடைகளில் பேசப்படும் வார்த்தைகள் அரசியல் நாகரிகத்தையும், சமூகப் பொறுப்பையும் பிரதிபலிக்க வேண்டும். ஆனால் அண்மையில் உதயநிதி அவர்கள் பேசிய பேச்சு, பெண்களின் கண்ணியத்தையும், சமூகத்தின் நாகரிக விழுமியங்களையும் புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர், கருத்து வேறுபாடுகள் அரசியலில் இயல்பானவை. ஆனால் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலோ, இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகளாலோ, ஆபாசமான மொழியாலோ கருத்துகளை வெளிப்படுத்துவது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார். அரசியல் மேடை என்பது மக்களுக்கு வழிகாட்டும் இடமே தவிர, பெண்களின் மாண்பைக் காயப்படுத்தும் வார்த்தைகள் ஒலிக்கும் இடமாக மாறக் கூடாது.…

Read More

தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் நடிகை த்ரிஷாவை தொடர்பு படுத்தி இரட்டை அர்த்தத்தில் பேசிய புகாரின் பேரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை தஞ்சாவூர் போலீசார் சென்னையில் வைத்து கைது செய்துள்ளனர்.  காவிரி நதி நீர்  மற்றும் மேகதாது அணை தொடர்பாக தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக தரப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின்,  கூட்டத்தில் இருந்தவர்கள் எழுப்பிய கோஷங்களுக்குப் பதிலளிப்பதாகக் கூறி, நடிகை த்ரிஷாவின் பெயரைச் சுட்டிக்காட்டி பாலியல் ரீதியாகவும் பெண்மையைக் கொச்சைப்படுத்தும் வகையிலும் உட்பொருளோடு பேசியதாக , தஞ்சாவூர் மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி தலைமையில் தவெக நிர்வாகிகள் தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளரிடம் நேரில் சென்று புகார் அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், ஊடகங்களை தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு…

Read More

தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் நடிகை த்ரிஷாவைத் தொடர்பு படுத்தி இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசியதாகக் கூறி  எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள  உதயநிதியின் வீட்டில் போலீசார் சூழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் நகரில் உள்ள பனகல் கட்டிடம் அருகே காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாகத் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், தமிழக முதலமைச்சரைப் பற்றியும் பெண்களைப் பற்றியும் நாகரிகமற்ற முறையில் ஆபாசமாகப் பேசியதாகத் தமிழக வெற்றிக் கழகத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். குறிப்பாக, இந்த ஆர்ப்பாட்ட உரையின் போது கூட்டத்தில் இருந்தவர்கள் எழுப்பிய கோஷங்களுக்குப் பதிலளிப்பதாகக் கூறி, நடிகை த்ரிஷாவின் பெயரைச் சுட்டிக்காட்டி பாலியல் ரீதியாகவும் பெண்மையைக் கொச்சைப்படுத்தும் வகையிலும் உட்பொருளோடு பேசியதாகப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த உரையாடல் அடங்கிய…

Read More

தவெக ஆட்சியில்  தொழில் முதலீடுகள் பெரும் வீழ்ச்சியை சந்திப்பதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். சமீபத்தில் வெளியாகியிருக்கும் 2027-ஆம் நிதியாண்டுக்கான முதல் காலாண்டின் முதலீட்டுத் தரவுகள் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள பெரிய வீழ்ச்சியைக் காட்டுவதாகவும்,. மற்ற மாநிலங்களில் புதிய ஆட்சிகள் தொடங்கியவுடன் முதலீடுகள் பல மடங்கு உயர்ந்துள்ள வேளையில், தமிழகத்தில் முதல்வர் விஜய் அரசு பொறுப்பேற்ற பிறகு ஒட்டுமொத்த முதலீடுகள் முந்தைய காலாண்டைக் காட்டிலும் 74.5 சதவீதமும், தனியார் முதலீடுகள் 77.63 சதவீதமும் மிகக் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளதாகவும் நயினார் நாகேந்திரன் எக்ஸ்தளப் பதிவில் தெரிவித்துள்ளார். முன்மொழியப்பட்ட திட்டங்களில் வெறும் ரூ. 11,237 கோடியை மட்டுமே பெற்று, தேசிய அளவில் தமிழகம் 17-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. முதல்வர் ஜோசப் விஜய் அவர்களிடம் போதிய திட்டமிடல் இல்லாததும், புதிய முதலீட்டாளர்களைக் கவரும் கொள்கைகள் தவெக அரசிடம் இல்லாததுமே இத்தகைய வீழ்ச்சிக்குக் காரணம் எனவும்,  இதனால், தமிழகத்திற்கு வர வேண்டிய வெளிநாட்டுத் தனியார் முதலீடுகளும்…

Read More

மாநிலங்களவையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல் ஹாசன் மத்திய ஜல் சக்தி அமைச்சகத்துக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த கேள்விகளுக்கு விடையளிக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக கமல்ஹாசன் எழுப்பியுள்ள கேள்விகள் வருமாறு… (அ) மேகதாட்டு திட்டத்திற்காக திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை (DPR) கர்நாடக அரசு சமர்ப்பித்துள்ளதா? மேலும் காவிரி நீர் மேலாண்மை வாரியம் (CWMA) கருத்துக்கள் எதையும் தெரிவித்து அதை முன்னோக்கி அனுப்பியுள்ளதா? (ஆ) இந்தத் திட்டத்தால் காவிரியின் கீழ்நிலை மாநிலமான தமிழ்நாட்டின் பாசன வசதி மற்றும் குடிநீர் தேவைகளுக்குப் பாதிப்பு ஏற்படுமா என்பதை மத்திய அரசு ஆய்வு செய்துள்ளதா? அதன் முடிவு என்ன? (இ) காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் 2018 காவிரி நீர் மேலாண்மைத் திட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நடந்துகொண்டால் மட்டுமே இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படுமா? (ஈ) கர்நாடகாவின் திருத்தப்பட்ட திட்ட அறிக்கை குறித்து தமிழ்நாட்டின்…

Read More

பணியின் போது மொபைல் பயன்படுத்த கூடாது என சுற்றறிக்கைகள் பிறப்பித்தும், போக்குவரத்து காவலர்கள் மொபைலில் பேசுவதில் தீவிரமாக இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னையில் சிக்னலில் பெண் ஒருவர் மீது கார் மோதி சிறு விபத்து ஏற்பட்டது. நீதிமன்றத்துக்கு வரும் வழியில் இதை நேரில் கண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் உள்ள போக்குவரத்து காவலர்கள், தங்கள் பணியை கவனிக்காமல், பெரும்பாலும் மொபைல் செயலிகளை பயன்படுத்துவதிலும், மொபைலில் பேசுவதிலுமே தீவிரமாக உள்ளதால் இதுபோன்ற விபத்துக்கள் நடப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். இதை தவிர்க்கும் வகையில் உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும்படி, டிஜிபி-க்கும், சென்னை மாநகர காவல் ஆணையருக்கும் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், எல்.ஜி.பி.டி.க்யூ.ப்ள்ஸ் உரிமைகள் தொடர்பான வழக்கு தொடர்பான விசாரணையின் போது, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு, உயர் அதிகாரிகள் பல சுற்றறிக்கைகள் பிறப்பித்த போதும்,…

Read More