Close Menu
    What's Hot

    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

    தாமிரபரணி ஆற்றில் ஆடைகள், சடங்கு பொருட்கள் வீசத் தடை: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

    வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் அறநிலையத் துறை தகவல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அரசு நிர்வாகங்களில் AI தொழில் நுட்பம்…. பாதுகாப்பாக செயல்படுத்த எடுத்துள்ள நடவடிக்கை என்ன?  மத்திய அரசுக்கு தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி!
    Featured

    அரசு நிர்வாகங்களில் AI தொழில் நுட்பம்…. பாதுகாப்பாக செயல்படுத்த எடுத்துள்ள நடவடிக்கை என்ன?  மத்திய அரசுக்கு தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    030 dhayanithi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அரசு நிர்வாகங்களில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில் நுட்பத்தை பாதுகாப்பாக செயல்படுத்த ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? என்று மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.

    திமுக நாடாளுமன்றக் குழுத் துணைத் தலைவரும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன்  நாடாளுமன்றத்தில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

    • ஒன்றிய அரசின் பல்வேறு அமைச்சகங்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு (AI) செயல் திட்டங்களின் விவரங்கள் என்ன? அவற்றில் ஒப்புதல் அளிக்கப்பட்டவை, நிராகரிக்கப்பட்டவை மற்றும் தற்போது பரிசீலனையில் உள்ளவை எத்தனை? அவற்றை மதிப்பீடு செய்வதற்காக பின்பற்றப்பட்ட அளவுகோல்கள் என்ன?
    • ஆட்சி நிர்வாகம் மற்றும் பொதுச் சேவை வழங்கலுக்கான AI செயல் திட்டங்களை உருவாக்கும்போது, தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளுடன் ஒன்றிய அரசு ஆலோசனை நடத்தியுள்ளதா? அவ்வாறாயின் அதன் விவரங்கள் என்ன?
    • AI-அடிப்படையிலான நிர்வாகத் தீர்வுகளைச் செயல்படுத்த மாநிலங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதா, அவ்வாறு திட்டமிட்டிருந்தால் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள் என்ன?
    • அரசின் நிர்வாகங்களில் AI-யை பயன்படுத்தும்போது, குறிப்பாக குடிமக்களுக்கு நேரடியாக சேவைகள் வழங்கும் அமைப்புகளில், வெளிப்படைத்தன்மை பொறுப்புணர்வு தரவுத் தனியுரிமை மற்றும் சுயாதீன தணிக்கை ஆகிய தரநிலைகள் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன?
    • AI தொழில்நுட்பத்தை மாநிலங்களுக்கிடையே சமநிலையுடன் பரவலாகப் பயன்படுத்துவதை உறுதி செய்யவும், தொழில்நுட்பத்தில் முன்னேறிய தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு AI உள்கட்டமைப்பு, ஆராய்ச்சி மற்றும் திறன்மிக்க மனிதவள மேம்பாட்டிற்கான சமமான ஆதரவு கிடைப்பதை உறுதி செய்யவும் மாநில ரீதியான ஏற்றத்தாழ்வுகளைத் தடுக்கும் வகையில் அரசு ஏதேனும் கொள்கை திட்டம் வகுத்துள்ளதா?
    artificial intelligence Dayanidhi Maran Digital Governance Government Administration Parliament
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசேலம் கல்லூரி பின்புறம் கள்ளச்சாராயம் காய்ச்சிய நெசவு தொழிலாளி கைது!. 200 லிட்டர் ஊறல் அழிப்பு!
    Next Article மெட்டாலிக் பெலட் துப்பாக்கி பயன்பாட்டுக்கு தடை கோரிய மனு:  திருத்தம் கோரிய உச்ச நீதிமன்றம்
    Editor TN Talks

    Related Posts

    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

    July 30, 2026

    தாமிரபரணி ஆற்றில் ஆடைகள், சடங்கு பொருட்கள் வீசத் தடை: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

    July 30, 2026

    வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் அறநிலையத் துறை தகவல்

    July 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

    தாமிரபரணி ஆற்றில் ஆடைகள், சடங்கு பொருட்கள் வீசத் தடை: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

    வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் அறநிலையத் துறை தகவல்

    என் வாழ்நாள் முழுவதும் மகனின் நலனுக்காக துணை நிற்பேன்!. மாதம்பட்டி ரங்கராஜ் நெகிழ்ச்சி!

    சென்னை ஐஐடி இயக்குநருக்கு எதிரான விமர்சனம்: பிரியங்கா காந்திக்கு 215 கல்வியாளர்கள் எதிர்ப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.