Close Menu
    What's Hot

    உதயநிதி கைது: “ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும்!”: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

    தண்ணில கண்டம்… உதயநிதியை கலாய்க்கும் தவெக ஐ.டி.விங்க்!

    உதயநிதி ஸ்டாலின் கைது சரியானதே…. தவெக முதன்மை செய்தி தொடர்பாளர் புகழேந்தி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்பான வழக்கு… அமலாக்கத்துறை மனு தள்ளுபடி… உயர்நீதிமன்றம் உத்தரவு!
    Featured

    அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்பான வழக்கு… அமலாக்கத்துறை மனு தள்ளுபடி… உயர்நீதிமன்றம் உத்தரவு!

    Editor TN TalksBy Editor TN TalksAugust 4, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    014 anitha
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கை, மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற கோரிய அமலாக்கத் துறை மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கடந்த 2001-2006ஆம் ஆண்டுகளில் அமைச்சராக பதவிவகித்த போது வருமானத்துக்கு அதிகமாக 2 கோடியே 7 லட்சத்து 96 ஆயிரத்து 384 ரூபாய் சொத்து சேர்த்ததாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர்ந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

    சொத்துக் குவிப்பு வழக்கின் அடிப்படையில் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்த அமலாக்கத் துறை, தூத்துக்குடி நீதிமன்றத்தில் உள்ள சொத்துக்குவிப்பு வழக்கை மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது.

    இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தூத்துக்குடி நீதிமன்றத்தில் உள்ள சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்திருந்தது. இந்த தடையை நீக்க கோரி அனிதா ராதாகிருஷ்ணனும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த  தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, தூத்துக்குடி நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கு சாட்சிகள் விசாரணை முடிந்து, வழக்கறிஞர்கள் இறுதி வாதம் துவங்க உள்ள நிலையில், வழக்கை மதுரையில் உள்ள சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கை விசாரிக்கும் நீதிமன்றத்துக்கு மாற்றும்படி கோர முடியாது எனத் தெரிவித்துள்ளது.

    மேலும், முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக வழக்கு தொடர அரசு அனுமதி பெறப்படவில்லை எனவும், அமலாக்கத் துறை வழக்கு இன்னும் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், முன்கூட்டியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, அமலாக்கத் துறையின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    தூத்துக்குடி நீதிமன்ற விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிய நீதிபதிகள், சொதுக்குவிப்பு வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

    Anitha R. Radhakrishnan Enforcement Directorate Legal Case Madras High Court Tamil Nadu Politics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉதயநிதியை இன்று மாலைக்குள் விடுவிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
    Next Article “உதயநிதி பேசிய வக்கிரமான கருத்தை எடப்பாடி பழனிசாமி ஏற்கிறாரா?”: அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி!
    Editor TN Talks

    Related Posts

    உதயநிதி கைது: “ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும்!”: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

    August 4, 2026

    தண்ணில கண்டம்… உதயநிதியை கலாய்க்கும் தவெக ஐ.டி.விங்க்!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது சரியானதே…. தவெக முதன்மை செய்தி தொடர்பாளர் புகழேந்தி

    August 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உதயநிதி கைது: “ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும்!”: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

    தண்ணில கண்டம்… உதயநிதியை கலாய்க்கும் தவெக ஐ.டி.விங்க்!

    உதயநிதி ஸ்டாலின் கைது சரியானதே…. தவெக முதன்மை செய்தி தொடர்பாளர் புகழேந்தி

    மக்களவையில் நிறைவேற்றப்பட்ட பிறப்பு – இறப்பு பதிவு (திருத்த) மசோதா மாநிலங்களவையில் தாக்கல்

    “உதயநிதி பேசிய வக்கிரமான கருத்தை எடப்பாடி பழனிசாமி ஏற்கிறாரா?”: அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.