Close Menu
    What's Hot

    உதயநிதி கைது: “ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும்!”: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

    தண்ணில கண்டம்… உதயநிதியை கலாய்க்கும் தவெக ஐ.டி.விங்க்!

    உதயநிதி ஸ்டாலின் கைது சரியானதே…. தவெக முதன்மை செய்தி தொடர்பாளர் புகழேந்தி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»உதயநிதியின் பேச்சு அரசியல் தகுதிக்கு பொருத்தமானதில்லை… திருமாவளவன் விமர்சனம்
    Featured

    உதயநிதியின் பேச்சு அரசியல் தகுதிக்கு பொருத்தமானதில்லை… திருமாவளவன் விமர்சனம்

    Editor TN TalksBy Editor TN TalksAugust 4, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    013 thiruma
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது தொடர்பாக விசிக தலைவர் தொல் . திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…

    அண்மையில் திமுக சார்பில் காவிரி நீர் உரிமைக்காக தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்,  ‘இரட்டுற மொழிதல்’ என்னும் வகையில் எள்ளி நகையாடும் கருத்தொன்றைக் கூறியிருக்கிறார்.

    எதிர்க்கட்சிகளின் மீது பொய்வழக்குப் போடுவதிலேயே  முதலமைச்சரின் கவனம் இருக்கிறது என்று அவர் சொல்லியபோது,  ஆங்கே திரண்டிருந்தவர்கள் பிரபல நடிகை ஒருவரின் பெயரைச் சொல்லிக் கூச்சலிடுகின்றனர்.

    அப்போது அவர் கிண்டலாகப் பேசும் முனைப்பில் தவறான பொருள்படும்படி ஒரு கருத்தைப் பேசியுள்ளார். இது ஆங்கில ஊடகங்களில் விவாதிக்கும் அளவுக்கு – கண்டிக்கும் அளவுக்கு தேசிய அளவிலான பிரச்சினையாக மாறியுள்ளது.

    எதிர்க்கட்சித் தலைவர் என்கிற பொறுப்பு வாய்ந்த இடத்தில் இருப்பவர் இதுபோல இரட்டை பொருள் தரும் ‘எள்ளல் நடையில்’ பேசும் முறையைத் தவிர்த்திருக்க வேண்டும். ஒரு பெண்ணைக் குறித்து இழிவாகப் பேசும் இத்தகைய அணுகுமுறை அவரது அரசியல் தகுதிக்குப் பொருத்தமானதில்லை. நாகரிக அரசியலுக்கு ஏற்புடையதல்ல.

    சூழ்ந்திருப்பவர்களின் சுவைக்கேற்ப சொல்லாடல் செய்வது என்கிற உந்துதலால் உணர்ச்சிவயப்பட்ட –  தன்னிலை மறந்த அணுகுமுறையைக் கைவிட வேண்டும். பெண்மையைக் கொச்சைப்படுத்தும் வகையில் புரிதலை ஏற்படுத்திய அந்த அணுகுமுறை கண்டிக்கத் தக்கதாகும்.

    நாளை ( ஆக-05) சட்டமன்றம் கூடும் சூழ்நிலையில்,  எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பிலிருப்பவரைச் சிறைப்படுத்துவதைத் தவிர்ப்பது ஆளுங்கட்சியின் மீதான நன்மதிப்பை உயர்த்தும்.

    தற்போதைய நிலையில், காவிரிநீர் உரிமைக்காக அனைத்துக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என யாவரும் இணைந்து குரல் கொடுப்பதற்கும்; இந்திய ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கும் இது ஏதுவாக அமையும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

    இவ்வாறு கூறியுள்ளார்.

    political controversy Tamil Nadu Politics Thol Thirumavalavan Udhayanidhi Stalin VCK
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநடுவானில் குலுங்கிய ஏர் இந்தியா விமானம்! 300 அடி கீழே சரிந்ததால் பயணிகள் படுகாயம்!
    Next Article உதயநிதியை இன்று மாலைக்குள் விடுவிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
    Editor TN Talks

    Related Posts

    உதயநிதி கைது: “ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும்!”: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

    August 4, 2026

    தண்ணில கண்டம்… உதயநிதியை கலாய்க்கும் தவெக ஐ.டி.விங்க்!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது சரியானதே…. தவெக முதன்மை செய்தி தொடர்பாளர் புகழேந்தி

    August 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உதயநிதி கைது: “ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும்!”: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

    தண்ணில கண்டம்… உதயநிதியை கலாய்க்கும் தவெக ஐ.டி.விங்க்!

    உதயநிதி ஸ்டாலின் கைது சரியானதே…. தவெக முதன்மை செய்தி தொடர்பாளர் புகழேந்தி

    மக்களவையில் நிறைவேற்றப்பட்ட பிறப்பு – இறப்பு பதிவு (திருத்த) மசோதா மாநிலங்களவையில் தாக்கல்

    “உதயநிதி பேசிய வக்கிரமான கருத்தை எடப்பாடி பழனிசாமி ஏற்கிறாரா?”: அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.