Author: Editor TN Talks

தனது மூன்று மகள்களுக்காக தனது வாழ்வையே தியாகம் செய்த தந்தை முதியோர் இல்லத்தில் உயிரிழந்த நிலையில், இறுதிச் சடங்குக்குக் கூட வராமல், வீடியோ காலில் மகள்கள் பார்வையிட்ட சம்பவம், பாசம் என்றால் என்னவென்று கேள்வியை எழுப்பியுள்ளது. ஹரியானா மாநிலம் சோனிபட் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வந்தவர் சிவ்சரண் ராம் ரத்தன் குப்தா. மும்பையைச் சேர்ந்த முன்னாள் ஜவுளி வியாபாரியான இவர், மனைவி மீனாவுடன் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதியோர் இல்லத்தில் தங்கியிருந்தார். பின்னர் அவரது மனைவி உயிரிழந்தார். நீண்டநாள் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சிவ்சரண் குப்தா, செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் உயிரிழந்தார். அவரது மரணத்திற்குப் பிறகு முதியோர் இல்ல நிர்வாகம், அவரது மூன்று மகள்களுக்கும் தகவல் தெரிவித்தது. ஆனால் நேபாளம், உத்தரப் பிரதேசம் மற்றும் மும்பையில் வசித்து வந்த அவர்கள், நேரில் வர இயலாது என்று தெரிவித்தனர். இதையடுத்து, வீடியோ கால் மூலம் தந்தையின் இறுதிச்சடங்கை…

Read More

தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் பட்ஜெட் வெற்று பட்ஜெட்டாக இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதலமைச்சரின் உச்சிகுளிர பாராட்டுமழை பொழியப் பயன்பட்டதுதான் வேளாண் பட்ஜெட் எனவும், மற்றுமொரு பெயர்மாற்ற நிகழ்வாக மட்டுமே நடந்து முடிந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார். திராவிட மாடல் அரசின் திட்டங்களின் மேல் ‘வெற்றி’ என்ற லேபிளை ஒட்டினால் வேலை முடிந்தது என்று இந்த அரசு நினைக்கிறதா என வினா எழுப்பியுள்ள மு.க.ஸ்டாலின், குறுவை சாகுபடி பாதித்து அரசின் உதவிக்கரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் டெல்டா உழவர்களுக்கு எதுவுமில்லாத, வெற்று பட்ஜெட்டாக இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்திருப்பதாகச் சாடியுள்ளார். உழவர் பெருமக்களின் கோரிக்கைகளை உரத்த குரலில் இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் கழக உறுப்பினர்கள் எழுப்புவார்கள். உறக்கத்தில் இருக்கும் அரசு விழித்துக் கொண்டு பதில் சொல்லியாக வேண்டும். தீர்வு கிடைக்க வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Read More

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் (ஏஐடியூசி ) தமிழ்நாடு முதலமைச்சருக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது… தமிழ்நாடு அரசின் நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டப் பேரவையில் தாக்க செய்துள்ள நிதி நிலை அறிக்கையில், அரசின் வரி வருவாய் ரூ 3 லட்சத்து 50 ஆயிரத்து 27 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பீட்டில் மதுபானங்கள் மீதான வரி வருவாய் 16, 17 சதவீதமாக 56000 கோடியாக இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்ட வருவாயாக இருக்கும். அரசின் நிதியாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மதுபான விற்பனையில் ஈடுபட்டு வரும் பணியாளர் நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பை நிதிநிலை அறிக்கை கடைக்கண்ணிலும் பார்க்க மறந்தது ஏன்? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. நீண்ட காலமாக பணியாளர்கள் வலியுறுத்தி வந்த இஎஸ்ஐ திட்டம் அக்டோபர் 2026 லிருந்து நடைமுறைக்கு வருவதை பணியாளர்கள் மகிழ்ச்சியுடன்  வரவேற்கிறோம்.  தற்போது, மதுபானங்களை விற்பனையை செயலி வழி…

Read More

நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்தை, அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் எஸ்.பி. வேலுமணி கே.பி. அன்பழகன் சி.வி. சண்முகம் ஆகியோர் சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் அதிருப்தி எம்எல்ஏக்களாக இருந்து வரும் எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், சி.வி.சண்முகம் உள்ளிட்டோருக்கு அதிமுகவில் புதிய பொறுப்புகளை எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்த நிலையில் அந்த புதிய பொறுப்புகளை ஏற்க மாட்டோம் என்று சாதாரண தொண்டராகவே இருந்துவிடுவோம் என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சென்று பார்ப்பதையும் அவர்கள் தவிர்த்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் சட்டசபையில் பங்கேற்றுள்ள அதிமுக அதிருப்தி  எம்எல்ஏக்கள் இன்று தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் புஸ்சி  என். ஆனந்தை  அவரது அலுவலகத்திற்கு சென்று சந்தித்தனர். முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், சி.வி. சண்முகம் ஆகியோர் அமைச்சர் ஆனந்தை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மானியக் கோரிக்கையில் தொகுதிகள் தொடர்பான கோரிக்கைகளை அமைச்சர் புஸ்சி ஆனந்திடம் கொடுத்துள்ளதாக சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

Read More

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்கள் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட கல்லம்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்த பகுதியில் திருப்பூர் வடக்கு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.  வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருக்கும் குடியிருப்பு பகுதியில் சோதனை செய்த போது குறிப்பிட்ட ஒரு அறை மூடி வைக்கப்பட்டிருந்தது. அதனை திறந்து பார்த்தபோது அதில் மூட்டை மூட்டையாக 30 கிலோ கஞ்சா சாக்லேட் விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் அந்த அறையில் தங்கி இருந்த 3 வட மாநில இளைஞர்களையும் பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஆகாஷ் சவுத்ரி (21), முகேஷ் (22), முனிக்கண் (48) என்பது தெரியவந்தது. இவர்கள் கஞ்சா…

Read More

 மின் வாரியத்தில் ஹார்டு டிஸ்க் திருடப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மின்வாரிய ஊழியர்க்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் கம்ப்யூட்டர் பிரிவில் 34 ஹார்டு டிஸ்க்குகள் திருட்டுபோன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பெரிய சதி திட்டம் இருப்பதாகவும், முக்கியமான தகவல்களை அழிப்பதற்காக இந்த ஹார்டு டிஸ்க்குகள் திரு டப்பட்டிருக்கலாம் என்று புகார் எழுந்தது.  இந்த திருட்டு தொடர்பாக சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல்துறை முதலில் வழக்குப்பதிவு செய்து பின்னர் இந்த வழக்கு  சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. விசாரணையில் மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் கம்ப்யூட்டர்களை மேற்பார்வையிடும் ஊழியராக பணியாற்றி வந்த கோபிநாத் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தபட்ட விசாரணையில் ஹார்டு டிஸ்க்குகளை பெங்களூரு உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் விற்பனை செய்யப்பட்டது. தெரியவந்தது. இந்த வழக்கில் ஜாமின், கோரி கோபிநாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.…

Read More

தமிழக அரசு மற்றும் பல்கலைக்கழக நிகழ்ச்சிகளில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ முதலில் ஒலிக்க வேண்டும் என்ற நடைமுறையை மீண்டும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தமிழகத்தைச் சேர்ந்த 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் ஆர்.என். ரவி அர்லேகர்-க்கு கடிதம் எழுதியுள்ளனர். ஆகஸ்ட் 5-ஆம் தேதி அனுப்பப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில், கடந்த ஜூலை 28-ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெற்ற மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், ராஜ்பவனில் இருந்து வழங்கப்பட்ட வழிகாட்டுதலின்படி, விழா முதலில் ‘வந்தே மாதரம்’, பின்னர் தேசிய கீதம், அதன் பிறகே ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை, தமிழக மக்களுக்கும், ‘நீராரும் கடலுடுத்த’ பாடலை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பிள்ளைக்கும் மரியாதை குறைவாக அமைந்ததாக பலரும் கருதுவதாக எம்.பி.க்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், 2021 முதல் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ தமிழகத்தின் அதிகாரப்பூர்வ மாநிலப் பாடலாக அறிவிக்கப்பட்டுள்ளதையும், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக…

Read More

வேளாண் துறை அமைச்சர் வினோத் வாசித்து வரும் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதாவது… பயிர் சாகுபடி மற்றும் மதிப்புக்கூட்டலுக்கான 50 ஒருங்கிணைந்த வேளாண் இயந்திர வாடகை வணிக மையங்கள் அமைக்க ரூ.8.13 கோடி ஒதுக்கீடு 1000 விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 80 விழுக்காடு மானியத்தில், மின்கட்டமைப்புடன் சாராத சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க ரூ.23 கோடி ஒதுக்கீடு ஆயிரம் ஏக்கர் பாசனப் பரப்பை உருவாக்கிட பொதுப்பிரிவைச் சார்ந்த 500 விவசாயிகளுக்கு ஆழ்துளை அல்லது குழாய்க் கிணறுகள் பின்னேற்பு மானியத்தில் அமைச்சக் ரூ.6 கோடி ஒதுக்கீடு. 100% மானியத்தில் 500 பண்ணைக் குட்டைகல் உருவாக்குதல் மற்றும் 75% மானியத்தில் 500 பண்ணைக் குட்டைகளை தூர்வார ரூ.8.5 கோடி ஒதுக்கீடு கிராம அளவிலான 50 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் 80% மானியத்தில் அமைக்க ரூ.4 கோடி ஒதுக்கீடு. இதில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 30% ஒதுக்கீடு வான்மகள் திட்டத்தில் 100 மகளிர்…

Read More

சிறுதானியங்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ. 63.81 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என வேளாண் துறை பட்ஜெட்டில் அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார். 2026 -27 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை  வேளாண் துறை அமைச்சர் அமைச்சர் வினோத் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார். அப்போது, “சிறுதானியங்கள் பயன்பாடு தற்போது அனைத்து பகுதிகளிலும் அதிகரித்துள்ளதாகவும், . கம்பு, சோளம், கேழ்வரகு ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்க ‘தமிழ்நாடு சிறுதானிய இயக்கம்’ செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார். சிறுதானியங்களின் சாகுபடிப் பரப்பு, உற்பத்தி மற்றும் சிறுதானியங்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ. 63.81 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் இதனால் 4 லட்சத்து 75ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவித்தார். சாமை, தினை, வரகு, குதிரைவாலி, பனிவரகு போன்ற பயிர்களின் சாகுபடியை இருமடங்காக அதிகரிக்க தமிழ்நாடு குறுதானிய இயக்கம் செயல்படுத்தப்படுவதாகவும், இதற்காக ரூ. 7.61 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அதிக ஊட்டச்சத்து நிறைந்த…

Read More

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகையினை முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கினார். ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்–2026-இல், ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில் தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். இதையடுத்து அவருக்கு தமிழக அரசு தரப்பில் ரூ.30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஆகஸ்ட் 5) நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஜோசப் விஜய், வெள்ளி வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான ஊக்கத்தொகைக்கான காசோலையை வழங்கி பாராட்டினார். சர்வதேச அளவில் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், மாநில அரசு இந்த உயரிய ஊக்கத்தொகையை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More