சிறுதானியங்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ. 63.81 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என வேளாண் துறை பட்ஜெட்டில் அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.
2026 -27 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் அமைச்சர் வினோத் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார்.
அப்போது, “சிறுதானியங்கள் பயன்பாடு தற்போது அனைத்து பகுதிகளிலும் அதிகரித்துள்ளதாகவும், . கம்பு, சோளம், கேழ்வரகு ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்க ‘தமிழ்நாடு சிறுதானிய இயக்கம்’ செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.
சிறுதானியங்களின் சாகுபடிப் பரப்பு, உற்பத்தி மற்றும் சிறுதானியங்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ. 63.81 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் இதனால் 4 லட்சத்து 75ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவித்தார்.
சாமை, தினை, வரகு, குதிரைவாலி, பனிவரகு போன்ற பயிர்களின் சாகுபடியை இருமடங்காக அதிகரிக்க தமிழ்நாடு குறுதானிய இயக்கம் செயல்படுத்தப்படுவதாகவும், இதற்காக ரூ. 7.61 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அதிக ஊட்டச்சத்து நிறைந்த சீமைத் தினை, பாப்பரை, குலசாமை ஆகிய பயிர்களின் செயல்விளக்கத் திடல்கள் அமைக்கப்படும் என்றார்.
மேலும், மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ. 36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று அமைச்சர் கூறினார்.
