Close Menu
    What's Hot

    சென்னை எம்டிசி பஸ்சில் வைரலான ‘தக்காளி வெற்றிக் கழகம்’ வாசகம்.. உண்மை என்ன?

    சென்னை உள்பட 16 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

    முதியோர் இல்லத்தில் உயிரிழந்த தந்தை… இறுதிச் சடங்குக்கு ஆன்லைனில் ரூ.5,100… வீடியோ காலில் பார்வையிட்ட 3 மகள்கள்…

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»டாஸ்மாக் பணியாளர் நலன்… முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும்… தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் வலியுறுத்தல்!
    Featured

    டாஸ்மாக் பணியாளர் நலன்… முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும்… தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் வலியுறுத்தல்!

    Editor TN TalksBy Editor TN TalksAugust 6, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    007 tasmac
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் (ஏஐடியூசி ) தமிழ்நாடு முதலமைச்சருக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது…

    தமிழ்நாடு அரசின் நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டப் பேரவையில் தாக்க செய்துள்ள நிதி நிலை அறிக்கையில், அரசின் வரி வருவாய் ரூ 3 லட்சத்து 50 ஆயிரத்து 27 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பீட்டில் மதுபானங்கள் மீதான வரி வருவாய் 16, 17 சதவீதமாக 56000 கோடியாக இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்ட வருவாயாக இருக்கும்.

    அரசின் நிதியாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மதுபான விற்பனையில் ஈடுபட்டு வரும் பணியாளர் நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பை நிதிநிலை அறிக்கை கடைக்கண்ணிலும் பார்க்க மறந்தது ஏன்? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

    நீண்ட காலமாக பணியாளர்கள் வலியுறுத்தி வந்த இஎஸ்ஐ திட்டம் அக்டோபர் 2026 லிருந்து நடைமுறைக்கு வருவதை பணியாளர்கள் மகிழ்ச்சியுடன்  வரவேற்கிறோம். 

    தற்போது, மதுபானங்களை விற்பனையை செயலி வழி தொடங்குவதாக அறிவித்துள்ளது. அதில் ஏற்படும் நடைமுறை இடையூறுகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

    மதுபானங்கள் சில்லரை விற்பனைக் கடைகளில் நிலவும் இட நெருக்கடியில், அடுக்கிப்போடப்படும் மதுபானப் பெட்டிகளில் அடிப்பகுதியில் உள்ள மதுபானங்களை  தேர்வு செய்து, ஆன்லைனில் பதிவு செய்து வரும் நுகர்வோர் அவசரத்தை எப்படி சமாளிப்பது? தமிழ்நாடு முழுவதும் சீரான, இடை தொடர்பு துண்டிக்காத,  இணைய வலைத் தொடர்பு இணைப்பு கிடைக்கிறதா? இதில் ஏற்படும் இடையூறுகள், தடைகள் எப்படி சமாளிப்பது?

    இதற்கிடையில் உயர் நீதிமன்றம், மதுபானங்கள் வாங்கும் அனைவருக்கும் ரசீது வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை பணியாளர்கள் வரவேற்கிறோம். அதற்கான கட்டமைப்பு வசதிகளை நிர்வாகம் உடனடியாக செய்து தர வலியுறுத்துகிறோம் .

    அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள மதுபான கடைகளில் உள்ளது போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.

    பரந்த இடவசதி உள்ள கடைகள் மற்றும் மது நுகர்வோர் வரிசையில் நின்று மதுபானங்கள் வாங்க பில்லிங் கவுண்டர், அந்த பில்லை கொடுத்து மது வாங்க தனி கவுண்டர் இந்த வரிசையில் மது நுகர்வோர் நிற்பதை கண்காணித்து வரிசைப்படுத்த தனியாக செக்யூரிட்டி மற்றும்  கடை வாடகை, மின்கட்டணம் , அட்டைப் பெட்டிகள் , உடையும் பாட்டில்களுக்கான இழப்பீடு,   காலிப்பாட்டில்கள் திரும்பப்  பெறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்த பேச்சுவார்த்தையில்  மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அளித்த வாக்குறுதிகள் எப்போது நடைமுறைக்கு வரும் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

    பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட நிறைவேற்றி கண்ணியமான பணி சூழலையும், வாழ்க்கை நிலையினையும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு உறுதிப்படுத்தித் தருவதில் நிதிநிலை அறிக்கை கவனம்  செலுத்த வேண்டும். அறிக்கை  மீதான பொது  விவாதங்கள் நடைபெறும் காலத்தில் முதலமைச்சர்,  டாஸ்மாக் பணியாளர் நலனிலும், நிர்வாகச் சீர்திருத்தத்திலும்   நேரடியாக தலையிட்டு, கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும்.

    இவ்வாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

    Chief Minister Employees Welfare Labour Union Tamil Nadu government Tasmac
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபொன்முடிக்கு பிடிவாரண்ட்… கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு!
    Next Article வேளாண் பட்ஜெட் வெற்று பட்ஜெட்… வெற்றி லேபிளை ஒட்டினால் வேலை முடிந்ததா? – மு.க.ஸ்டாலின் சாடல்!
    Editor TN Talks

    Related Posts

    சென்னை எம்டிசி பஸ்சில் வைரலான ‘தக்காளி வெற்றிக் கழகம்’ வாசகம்.. உண்மை என்ன?

    August 6, 2026

    சென்னை உள்பட 16 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

    August 6, 2026

    முதியோர் இல்லத்தில் உயிரிழந்த தந்தை… இறுதிச் சடங்குக்கு ஆன்லைனில் ரூ.5,100… வீடியோ காலில் பார்வையிட்ட 3 மகள்கள்…

    August 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சென்னை எம்டிசி பஸ்சில் வைரலான ‘தக்காளி வெற்றிக் கழகம்’ வாசகம்.. உண்மை என்ன?

    சென்னை உள்பட 16 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

    முதியோர் இல்லத்தில் உயிரிழந்த தந்தை… இறுதிச் சடங்குக்கு ஆன்லைனில் ரூ.5,100… வீடியோ காலில் பார்வையிட்ட 3 மகள்கள்…

    திருப்பத்தூர் : அனுமதியின்றி மண் கடத்தல்..! 9 டிராக்டர்கள், 2 ஜேசிபி பறிமுதல்..! 11 பேர் கைது..!

    தவெக அரசின் பட்ஜெட்டை வரவேற்கிறோம்..! அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி.வேலுமணி பேட்டி..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.