Close Menu
    What's Hot

    13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரும் ’மூடர் கூடம் – 2’..! ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு..!

    சென்னை எம்டிசி பஸ்சில் வைரலான ‘தக்காளி வெற்றிக் கழகம்’ வாசகம்.. உண்மை என்ன?

    சென்னை உள்பட 16 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பொன்முடிக்கு பிடிவாரண்ட்… கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு!
    Featured

    பொன்முடிக்கு பிடிவாரண்ட்… கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

    Editor web2By Editor web2August 6, 2026Updated:August 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    44507853 ponmudi court
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சைவ மற்றும் வைணவ சமயங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து, செப்டம்பர் 2-ஆம் தேதிக்குள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

    கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ மற்றும் வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதையடுத்து, சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன், ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் தனிப்பட்ட புகார் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், பொன்முடியின் பேச்சு மத ரீதியாக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலும், மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும் இருப்பதாகக் குறிப்பிட்டு, இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் அவரை தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார்.

    இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி, பொன்முடி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த மனுவை கடந்த ஜூலை 2-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து, கீழமை நீதிமன்ற விசாரணைக்கு வழிவகுத்தது.

    இந்த நிலையில், வழக்கு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தர பாண்டியன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உடல்நலக் காரணங்கள் உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி, நேரில் ஆஜராகுவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என பொன்முடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    ஆனால், அந்த மனுவை நீதிபதி நிராகரித்தார். மேலும், பொன்முடி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாததை கருத்தில் கொண்டு, அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதி, வரும் செப்டம்பர் 2-ஆம் தேதிக்குள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 2-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

    GeorgeTownCourt MadrasHighCourt Ponmudy TamilNaduPolitics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅமைச்சர்கள் மரிய வில்சன், வினோத் ஆகியோருக்கு முதல்வர் விஜய் பாராட்டு..! மக்கள் நலனை மையமாக கொண்டு உருவாகி இருப்பதாக பெருமிதம்..!
    Next Article டாஸ்மாக் பணியாளர் நலன்… முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும்… தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் வலியுறுத்தல்!
    Editor web2
    • Website

    Related Posts

    13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரும் ’மூடர் கூடம் – 2’..! ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு..!

    August 6, 2026

    சென்னை எம்டிசி பஸ்சில் வைரலான ‘தக்காளி வெற்றிக் கழகம்’ வாசகம்.. உண்மை என்ன?

    August 6, 2026

    சென்னை உள்பட 16 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

    August 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரும் ’மூடர் கூடம் – 2’..! ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு..!

    சென்னை எம்டிசி பஸ்சில் வைரலான ‘தக்காளி வெற்றிக் கழகம்’ வாசகம்.. உண்மை என்ன?

    சென்னை உள்பட 16 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

    முதியோர் இல்லத்தில் உயிரிழந்த தந்தை… இறுதிச் சடங்குக்கு ஆன்லைனில் ரூ.5,100… வீடியோ காலில் பார்வையிட்ட 3 மகள்கள்…

    திருப்பத்தூர் : அனுமதியின்றி மண் கடத்தல்..! 9 டிராக்டர்கள், 2 ஜேசிபி பறிமுதல்..! 11 பேர் கைது..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.