Close Menu
    What's Hot

    இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: மிடில் ஆர்டர் சொதப்பலால் 233 ரன்கள் மட்டும் எடுத்தது இந்தியா!

    ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: அதிர்வில் குலுங்கிய புற்றுநோய் மருத்துவமனை! 211 குழந்தைகள் அவசரமாக வெளியேற்றம்!

    நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச், கேமரா பேனாக்களுக்கு தடை: எம்.பி.க்களுக்கு மக்களவை செயலகம் எச்சரிக்கை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: மிடில் ஆர்டர் சொதப்பலால் 233 ரன்கள் மட்டும் எடுத்தது இந்தியா!
    Featured

    இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: மிடில் ஆர்டர் சொதப்பலால் 233 ரன்கள் மட்டும் எடுத்தது இந்தியா!

    Editor web1By Editor web1July 16, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    I 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 233 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    கார்டிஃப் சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய இந்திய கேப்டன் சுப்மன் கில் 31 ரன்களிலும், ரோகித் சர்மா 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கே.எல். ராகுலுக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட இஷான் கிஷன் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

    பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் துணைக் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சிறப்பாக விளையாடிய விராட் கோலி 65 ரன்கள் (8 பவுண்டரிகள்) எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் இறுதிவரை போராடிய ஸ்ரேயாஸ் ஐயர் அதிகபட்சமாக 66 ரன்கள் (5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) எடுத்தார்.

    30 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்த இந்தியா, விராட் கோலியின் விக்கெட்டுக்குப் பிறகு ஒட்டுமொத்தமாகச் சரிந்தது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரின் வேகத்தில் இந்திய மிடில் ஆர்டர் நிலைகுலைந்தது. வாஷிங்டன் சுந்தர் (2), அக்சர் படேல் (1), ஷிவம் துபே (0) ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட்டாகினர். இதனால் 32 ரன்கள் எடுப்பதற்குள் இந்தியா தனது முக்கிய 6 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது.

    இறுதியில் பும்ரா அதிரடியாக விளையாடி 13 பந்துகளில் 20 ரன்கள் (3 பவுண்டரி, 1 சிக்ஸர்) விளாசியதால், இந்தியா 44 ஓவர்களில் 233 ரன்களை எட்டியது. இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் குஸ் அட்கின்சன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். சகீப் மஹ்மூத் 2 விக்கெட்டுகளையும், சாம் கரன் மற்றும் வில் ஜேக்ஸ் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

    3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் இந்தியா ஏற்கனவே 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளநிலையில், இப்போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்ற இந்திய பந்துவீச்சாளர்கள் பலத்த போராட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: அதிர்வில் குலுங்கிய புற்றுநோய் மருத்துவமனை! 211 குழந்தைகள் அவசரமாக வெளியேற்றம்!
    Editor web1
    • Website

    Related Posts

    ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: அதிர்வில் குலுங்கிய புற்றுநோய் மருத்துவமனை! 211 குழந்தைகள் அவசரமாக வெளியேற்றம்!

    July 16, 2026

    நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச், கேமரா பேனாக்களுக்கு தடை: எம்.பி.க்களுக்கு மக்களவை செயலகம் எச்சரிக்கை!

    July 16, 2026

    சென்னை: நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த தனியார் பள்ளி பேருந்து! மாணவர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு!

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: மிடில் ஆர்டர் சொதப்பலால் 233 ரன்கள் மட்டும் எடுத்தது இந்தியா!

    ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: அதிர்வில் குலுங்கிய புற்றுநோய் மருத்துவமனை! 211 குழந்தைகள் அவசரமாக வெளியேற்றம்!

    நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச், கேமரா பேனாக்களுக்கு தடை: எம்.பி.க்களுக்கு மக்களவை செயலகம் எச்சரிக்கை!

    சென்னை: நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த தனியார் பள்ளி பேருந்து! மாணவர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு!

    சோனம் வாங்சுக்கின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு: நேரில் சந்தித்தார் ஆ. ராசா!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.