Author: Editor web1

சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்த உடனேயே, மோடி அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வருவது கண்டிக்கத்தக்கது என எஸ்டிபிஐ கட்சி கூறியுள்ளது. இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பி. அப்துல் மஜீத் ஃபைஸி விடுத்துள்ள அறிக்கையில், ”சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்த உடனேயே, பொதுமக்களை ஏமாற்றும் சுயநலத் தேர்தல் அரசியலை வெளிப்படுத்தும் வகையில், மோடி அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தியதையும், அதைத் தொடர்ந்து உடனடியாக மேலும் 90 காசுகள் உயர்த்தியதையும் எஸ்டிபிஐ கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. ​இந்த விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையேற்றத்தைத் தூண்டி, தினக்கூலிகள், விவசாயிகள், சிறு வணிகர்கள் மற்றும் நடுத்தரக் குடும்பங்களைக் கடுமையாகப் பாதிக்கும். பொதுமக்களின் செலவில் எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நலன்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட நீண்டகாலக் கொள்கை தோல்விகளை, இத்தகைய தற்காலிக நடவடிக்கைகள் மறைத்துவிட முடியாது. ஆகவே,…

Read More

தமிழக அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்ந்து அவமதிக்கப்படுவதைக் கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி (தவாக) அதிரடியாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழ்நாட்டின் அரசு மற்றும் அரசியல் மரபுகளில் பல காலங்களாக நிலைத்து வரும் உயரிய நடைமுறை, எந்த அரசு நிகழ்வாக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி, தேசிய கீதத்துடன் நிறைவடைவதே ஆகும். அது வெறும் நிகழ்ச்சி நடைமுறை அல்ல. தமிழர் இனத்தின் மொழி மரியாதை, பண்பாட்டு அடையாளம் மற்றும் வரலாற்றுப் பெருமையின் உயிர்ப்பாகும். ஆனால், இன்று நடைபெற்ற அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வில் மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட்டதோடு, தமிழ்நாட்டின் மரபில் இல்லாத வந்தே மாதரம் முதலாவதாக இசைக்கப்பட்டிருப்பது, ஒட்டுமொத்தத் தமிழ் மக்களின் உணர்வுகளையும் ஆழமாக புண்படுத்தியுள்ளது. இது சாதாரண நிர்வாகத் தவறோ அல்லது நிகழ்ச்சி ஒழுங்குப் பிழையோ அல்ல.…

Read More

கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் வாசுகி தாக்கல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில், ”நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேர்தல் நடைமுறையின் புனிதம் சமரசம் செய்யப்பட்டுள்ளது.  பிரச்சாரத்தின் போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது, சிறுவர்களை சுரண்டியது என திமுக, அதிமுக, தவெக கட்சியினர், வாக்காளர்களிடம் செல்வாக்கை செலுத்தியுள்ளனர்” என குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டுள்ளார். ”கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தவெக தலைவர் விஜய், தவெகவுக்கு வாக்களிக்கும்படி பெற்றோருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என குழந்தைகள் மீது உணர்வுப்பூர்வமாக செல்வாக்கை செலுத்தியுள்ளார். இது பரவலாக பத்திரிகைகளிலும், சமூக ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது. குறிப்பாக மயிலாப்பூர், ஆலங்கக்கூளம், திருமங்கலம் உள்ளிட்ட தொகுதிகளில் பணப்பட்டுவாடா நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இருந்தும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு எதிராக தகுதி…

Read More

முதலமைச்சர் விஜய்யின் ஒப்புதலுடனேயே சமஸ்கிருத மயமான ‘வந்தே மாதர’த்திற்கு முதலிடம் தந்து, மீண்டும் தமிழுக்கு மூன்றாமிடம் தரப்பட்டுள்ளதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,” இன்று (21.5.2026) காலை ஜோசப் விஜய் அவர்களது ஆட்சி, தனது அமைச்சரவையின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தை அறிவித்து, 23 புதிய அமைச்சர்கள் (காங்கிரஸ் கட்சிக்குத் தந்த இரண்டு அமைச்சர்கள் உள்பட) பதவியேற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  நிகழ்ச்சியின் தொடக்கத்தில், முதலிடம்  ‘வந்தே மாதரம்’ பாட்டுக்கு! (சமஸ்கிருத மயமாக்கப்பட்ட வங்காளம்) இரண்டாவது, ‘ஜன கண மன அதி நாயக’ ‘நாட்டுப் பண்’ என்பதைப் பாடி, ‘நீராரும் கடலுடுத்த’ என்ற மொழி வாழ்த்துப் பாடல் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. முந்தைய ‘திராவிட மாடல்’ அரசு, தொடர்ந்து கடைப்பிடித்த செம்மொழியாம் எம் மொழி தமிழுக்கு முதலிடம் தந்து, தேசியப் பண் (‘ஜன கண மன’ பாட்டு) சட்டமன்றத்தில் இறுதியில்தான் இசைக்கப்படும் வகையில்…

Read More

வேலையில்லாத இளைஞர்களின் வெகுண்டெழுந்த கோபத்தின் வெளிப்பாடாக தற்போது இணையம் முழுவதும் “காக்ரோச் ஜனதா பார்ட்டி” (Cockroach Janata Party – CJP) என்ற பெயரில் ஒரு புதிய அரசியல் அலை உருவாகி உள்ளது. அண்மையில் நீதிமன்ற நிகழ்வு ஒன்றில், வேலை வாய்ப்பு மற்றும் இளைஞர்களின் தற்போதைய நிலை குறித்த விவாதத்தின் போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த் தெரிவித்த கருத்து இளைஞர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இளைஞர்கள் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கவில்லை என்று புலம்புவதை விட்டுவிட்டு, கிடைக்கும் வேலைகளைச் செய்ய முன்வர வேண்டும் என்ற தொனியில் அமைந்த அந்த கருத்து, பல மில்லியன் இளைஞர்களின் சுயமரியாதையைச் சீண்டியதாகக் கருதப்படுகிறது. நீதிபதியன் கருத்து சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்த சில மணி நேரங்களிலேயே, இளைஞர்கள் அதற்கு எதிர்வினையாக ஒரு போராட்ட வடிவை எடுத்தனர். சமூகப் பிரச்சனைகள், வேலையில்லாத் திண்டாட்டம், அரசுத் தேர்வுகளில் நிலவும் குளறுபடிகள், படித்த இளைஞர்கள் எதிர்கொள்ளும் அவலங்கள் குறித்து…

Read More

தமிழக அரசியல் களம் தற்போது வரலாறு காணாத பல்வேறு திருப்பங்களையும், வியூக மாற்றங்களையும் சந்தித்து வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் , காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக மற்றும் ஐயுஎம்எல் கட்சி உறுப்பினர்களின் ஆதரவோடு ஆட்சி அமைத்து, முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்தச் சூழலில், நாளை நடைபெறவிருக்கும் அமைச்சரவை விரிவாக்கம், தமிழக அரசியலை அடுத்தகட்டப் பரபரப்புக்கு இட்டுச் சென்றுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் மூத்த அமைச்சரான ஆதவ் அர்ஜுனா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் (விசிக), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சியும் இடம்பெற வேண்டும் என முதலமைச்சர் விஜய் விரும்புகிறார்” எனத் தெரிவித்து, விசிக-வுக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார். இந்த அதிரடி அறிவிப்பு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.…

Read More

பண்டிதர் அயோத்திதாசரின் 181-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் உள்ள அவரது திருவுருவப்படத்திற்கு , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை, தமிழகத்தின் தற்போதைய அரசியல் நகர்வுகள் குறித்துப் பல்வேறு பரபரப்பான பதில்களை அளித்தார். காங்கிரஸ் கட்சியிலிருந்து இம்முறை எத்தனை அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளார்கள் என்ற கேள்விக்கு, அது குறித்து கட்சியின் அகில இந்தியத் தலைமையிடமிருந்து கட்டாயம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று தெரிவித்தார். தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பதவியைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக கூட்டணியில் வேறு கோரிக்கைகள் கேட்கப்பட்டதாக வெளியாகும் தகவல்கள் குறித்துக் கேட்கப்பட்ட போது, இது தொடர்பாக ஏற்கனவே வெளியிட்டுள்ள  அறிக்கையில் அனைத்து விவரங்களும் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். திருமாவளவனை முதலமைச்சராக்க திமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக விசிக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா…

Read More

நீலகிரி மாவட்டத்தின் அடர்ந்த முதுமலை புலிகள் காப்பகத்தின் நடுவே அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தெப்பக்காடு யானைகள் முகாம், சுற்றுலாப் பயணிகளின் வருகையாலும் அவர்களின் மகிழ்ச்சி ஆரவாரத்தாலும் களைகட்டி  வருகிறது. ஆசியாவிலேயே மிகவும் பழமையான யானைகள் முகாம்களில் ஒன்றாகத் திகழும் இந்தத் தெப்பக்காடு முகாமில், பல தலைமுறைகளாக யானைகளைப் பராமரித்து வரும் பாகன்கள் தங்களின் சொந்தக் குழந்தைகள் போல இந்த பிரம்மாண்ட உயிரினங்களை அன்போடு வளர்த்து, அவற்றுக்கு உணவு ஊட்டிப் பராமரிக்கும் உன்னதப் பிணைப்பைக் காண்போரைக் நெகிழச் செய்கிறது. கம்பீரமான இந்த வளர்ப்பு யானைகள், காட்டின் இயற்கை ஒலிகளுக்கு இடையே தங்களுக்கு வழங்கப்படும் சத்துணவு உருண்டைகளை மிகவும் சுவைத்து ருசித்து உண்பதை, உலகெங்கிலும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களின் குடும்பத்தினருடன் வியப்புடனும் அலாதி பிரியத்துடனும் பார்த்து ரசித்து மகிழ்கின்றனர். அடர்ந்த வனப்பகுதியின் பசுமைக்கு நடுவே, குழந்தைகளைக் கவரும் வண்ணமாய் யானைகளின் குறும்புத்தனங்களையும் அவற்றின் கம்பீர வாழ்வியலையும் நேரில் பார்த்து அனுபவிக்கும் இந்த…

Read More

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏப்ரல், மே மாதங்கள் கோடை சீசன் காலங்களாகும். இங்கு நிலவும் கால நிலையை அனுபவிக்க தமிழகம் மட்டுமின்றி,வெளிமாநில சுற்றுலாப்பயணிகள் அதிகமானோர் வருகை புரிவார்கள். அவ்வாறு வரும் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும் விதமாக மே மாதத்தில் மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா நடைபெறும். இந்த மலர் கண்காட்சியானது தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் செயல்படும் பிரையண்ட் பூங்காவில் நடைபெறும். அதன்படி இன்று பிரையண்ட் பூங்காவில் 63-வது கண்காட்சி துவங்கியுள்ளது. இந்தக் கண்காட்சியில் லட்சக்கணக்கான மலர்கள் பல்வேறு வண்ணங்களில் மலர் படுகைகளில் பூத்து குலுங்குகின்றது. மேலும் இங்கு அமைக்கப்பட்டுள்ள அலங்கார மேடைகளில் அலங்கார செடிகள் உள்ளிட்ட 10,000 செடிகள் காட்சி படுத்தப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமாக தமிழ்நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக லட்சக்கணக்கான கொய் மலர்களை கொண்டு பாம்பன் பாலம், ஜல்லிகட்டு காளையை வீரர் அடக்குவது  போன்றும்,தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் கோபுரம், மகளிர் மேம்பாடு,  பூக்களால் ஆன இரட்டை…

Read More

தமிழகத்தில் இன்று 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ள நிலையில், மொத்தம் 8.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். இதனிடையே தற்காலிக மதிப்பெண் பட்டியல் எப்போது வழங்கப்படும், விடைத்தாள் நகலுக்காக எப்போது விண்ணப்பிக்கலாம் என்பன உள்ளிட்ட தகவல்களை தமிழக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டு இருக்கிறது. அந்த வகையில் தற்காலிக மதிப்பெண் பட்டியல் 22.05.2026 முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் தங்கள் விடைத்தாள் நகலுக்காக 22.05.2026 முதல் 27.05.2026 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே போல துணை தேர்வுக்காக 26.05.2026 முதல் 09.06.2026 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. துணை தேர்வு 08.07.2026 முதல் 15.07.2026 வரை நடைபெறும் இன்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. தங்கள் மதிப்பெண்களை மறுமதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள் அதற்காக 17.06.2026 முதல் 19.06.2026 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Read More