Close Menu
    What's Hot

    மருத்துவ இடங்கள் பறிபோகிறதா? முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கடிதம்!

    நாள்தோறும் தொடரும் பாலியல் குற்றங்கள்; சிங்கப் பெண் சிறப்பு படை எங்கே? – டிடிவி தினகரன் சாடல்

    அதிக கட்டணம் வசூல்!. தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வார்னிங்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»“காக்ரோச் ஜனதா பார்ட்டி”: வேலையில்லா இளைஞர்களின் அரசியல் எழுச்சி!
    அரசியல்

    “காக்ரோச் ஜனதா பார்ட்டி”: வேலையில்லா இளைஞர்களின் அரசியல் எழுச்சி!

    Editor web1By Editor web1May 20, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வேலையில்லாத இளைஞர்களின் வெகுண்டெழுந்த கோபத்தின் வெளிப்பாடாக தற்போது இணையம் முழுவதும் “காக்ரோச் ஜனதா பார்ட்டி” (Cockroach Janata Party – CJP) என்ற பெயரில் ஒரு புதிய அரசியல் அலை உருவாகி உள்ளது.

    அண்மையில் நீதிமன்ற நிகழ்வு ஒன்றில், வேலை வாய்ப்பு மற்றும் இளைஞர்களின் தற்போதைய நிலை குறித்த விவாதத்தின் போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த் தெரிவித்த கருத்து இளைஞர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இளைஞர்கள் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கவில்லை என்று புலம்புவதை விட்டுவிட்டு, கிடைக்கும் வேலைகளைச் செய்ய முன்வர வேண்டும் என்ற தொனியில் அமைந்த அந்த கருத்து, பல மில்லியன் இளைஞர்களின் சுயமரியாதையைச் சீண்டியதாகக் கருதப்படுகிறது.

    நீதிபதியன் கருத்து சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்த சில மணி நேரங்களிலேயே, இளைஞர்கள் அதற்கு எதிர்வினையாக ஒரு போராட்ட வடிவை எடுத்தனர்.

    சமூகப் பிரச்சனைகள், வேலையில்லாத் திண்டாட்டம், அரசுத் தேர்வுகளில் நிலவும் குளறுபடிகள், படித்த இளைஞர்கள் எதிர்கொள்ளும் அவலங்கள் குறித்து சட்ட ரீதியாகவும், அரசியல் நையாண்டியாகவும் குரல் எழுப்பும் ஒரு தளமாக இணையத்தில் “காக்ரோச் ஜனதா பார்ட்டி” (Cockroach Janata Party – CJP) என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்கி அடையாளப்படுத்திக் கொண்டனர்.

    வேலையில்லாத இளைஞர்களான நாங்கள் எங்கு சென்றாலும் நிராகரிக்கப்படுவதாகவும், கரப்பான் பூச்சிகளைப் போல தங்களை எவரும் மதிப்பதில்லை என்பதையும் உணர்த்தும் விதமாக “காக்ரோச் ஜனதா பார்ட்டி” (Cockroach Janata Party – CJP) என்ற பக்கத்தை உருவாக்கி உள்ளனர்.

    சமூக வலைதளங்களில் அரசியல் விமர்சனங்களை முன்வைப்பதில் அறியப்பட்ட மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அபிஜித் போன்ற  இளைஞர்களால் முன்னெடுக்கப்படும் இந்த இன்ஸ்டாகிராம் பக்கம் தற்போது பல இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    Ka

    இதனிடையே தனது கருத்து விமர்சனத்திற்குள்ளானதையடுத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த் ஒரு விளக்கத்தை வெளியிட்டார். அதில், தனது கருத்துக்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும், ஒட்டுமொத்த இந்திய இளைஞர்களையும் விமர்சிக்கவில்லை என்றும், போலியான பட்டங்களைப் பயன்படுத்தித் தொழிலுக்குள் நுழையும் நபர்களைக் குறித்தே அவ்வாறு பேசியதாகவும் அவர் விளக்கம் அளித்தார். இந்திய இளைஞர்கள் தான் வளர்ந்த இந்தியாவின் தூண்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இருப்பினும், #CJP, #CockroachJanataParty, #UnemployedYouth என்ற ஹேஷ்டேக்குகள் தேசிய அளவில் ட்ரெண்டிங் ஆயின. வேலையில்லாத பொறியாளர்கள், பட்டதாரிகள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் எனப் பலரும் தங்கள் தகுதியைச் சான்றிதழ்களுடன் பதிவிட்டனர்.

    சாதி, மதம், மொழி கடந்து, ‘வேலை’ என்ற ஒற்றைப் புள்ளியில் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இது ஒரு ‘அமைதியான ஆனால் வலிமையான’ சமூக அரசியல் மாற்றத்திற்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஏழை மக்களின் வரப்பிரசாதம்..!! அம்மா உணவகங்களில் உணவு சுவையா, தரமா இருக்கணும்..!! பறந்தது அதிரடி உத்தரவு..!!
    Next Article ஐநா சபையின் உயரிய விருதை பெற்றார் பிரதமர் மோடி!. இந்திய விவசாயிகளுக்கு அர்ப்பணிப்பு!
    Editor web1
    • Website

    Related Posts

    நாள்தோறும் தொடரும் பாலியல் குற்றங்கள்; சிங்கப் பெண் சிறப்பு படை எங்கே? – டிடிவி தினகரன் சாடல்

    June 4, 2026

    தனி சின்னத்தில் போட்டியிடாதது வருத்தமா? – என்ன சொல்கிறார் ஜவாஹிருல்லா?

    June 4, 2026

    திமுக சின்னத்தில் மதிமுக போட்டியிட்டது துரதிர்ஷ்டம்தான்! – உறுதியாகச் சொல்லும் துரைவைகோ

    June 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மருத்துவ இடங்கள் பறிபோகிறதா? முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கடிதம்!

    நாள்தோறும் தொடரும் பாலியல் குற்றங்கள்; சிங்கப் பெண் சிறப்பு படை எங்கே? – டிடிவி தினகரன் சாடல்

    அதிக கட்டணம் வசூல்!. தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வார்னிங்!

    தனி சின்னத்தில் போட்டியிடாதது வருத்தமா? – என்ன சொல்கிறார் ஜவாஹிருல்லா?

    ஜூன் 10-க்குள் களஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்!. மு.க.ஸ்டாலின் அதிரடி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.