Close Menu
    What's Hot

    அந்த டயலாக்கை பேச வெட்கமாக இருந்தது!. நடிகை சமந்தா!

    ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படுமா?: முதல்வரிடம் வன்னி அரசு வைத்த கோரிக்கை!

    விஜய் சந்திப்பில் பேசியது என்ன? கூட்டணி முதல் ஸ்டெர்லைட் வரை விளக்கிய வைகோ

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»”முதல்வர் விஜய் ஒப்புதலுடனேயே வந்தே மாதரத்துக்கு முதலிடம்”
    அரசியல்

    ”முதல்வர் விஜய் ஒப்புதலுடனேயே வந்தே மாதரத்துக்கு முதலிடம்”

    Editor web1By Editor web1May 21, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    CM VIjay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முதலமைச்சர் விஜய்யின் ஒப்புதலுடனேயே சமஸ்கிருத மயமான ‘வந்தே மாதர’த்திற்கு முதலிடம் தந்து, மீண்டும் தமிழுக்கு மூன்றாமிடம் தரப்பட்டுள்ளதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம் சாட்டி உள்ளார்.

    இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,” இன்று (21.5.2026) காலை ஜோசப் விஜய் அவர்களது ஆட்சி, தனது அமைச்சரவையின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தை அறிவித்து, 23 புதிய அமைச்சர்கள் (காங்கிரஸ் கட்சிக்குத் தந்த இரண்டு அமைச்சர்கள் உள்பட) பதவியேற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  நிகழ்ச்சியின் தொடக்கத்தில், முதலிடம்  ‘வந்தே மாதரம்’ பாட்டுக்கு! (சமஸ்கிருத மயமாக்கப்பட்ட வங்காளம்) இரண்டாவது, ‘ஜன கண மன அதி நாயக’ ‘நாட்டுப் பண்’ என்பதைப் பாடி, ‘நீராரும் கடலுடுத்த’ என்ற மொழி வாழ்த்துப் பாடல் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

    Portfolios Allocated to 23 New Ministers

    முந்தைய ‘திராவிட மாடல்’ அரசு, தொடர்ந்து கடைப்பிடித்த செம்மொழியாம் எம் மொழி தமிழுக்கு முதலிடம் தந்து, தேசியப் பண் (‘ஜன கண மன’ பாட்டு) சட்டமன்றத்தில் இறுதியில்தான் இசைக்கப்படும் வகையில் நிகழ்வை நடத்தியபோது, அதற்கு அடாவடித்தனம் செய்த, முன்னிருந்த ஆர்.என்.ரவி என்ற ஆளுநரின் போக்கை அனுமதிக்காமல், இந்த உரிமையை அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நிலைநாட்டினார்.

    சென்றமுறை பதவியேற்பு விழாவின்போது நடைபெற்ற அதே முறை போன்றே, இம்முறையும் இன்றைய  பதவியேற்பு விழாவையும் நடத்திக் காட்டி, தமிழுக்கு நிரந்தரமாக மூன்றாம் இடம் என்றாக்கியுள்ளார் பொறுப்பு ஆளுநர் அர்லேகர் – அதனை ஏற்றுக்கொண்டுள்ளது தமிழ்நாடு புதிய அரசு.

    புதிய ஆட்சியின் ‘‘நம்பகத்தன்மை’’ இப்போது இவ்வளவு குறுகிய இடைவெளியில் சந்தேகத்திற்குரிய கேள்விக்குறியாகலாமா? முன்பு, ஆளுநர் மாளிகையின் ‘லோக் பவன்’ ஏற்பாடு செய்தது என்று ஒருவகை சமாதானம் கூறப்பட்டது.

    K Veeramani

    இப்போது புதிய முதலமைச்சராகியுள்ள மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்களின் ஆணைப்படி நடக்கவேண்டிய பொதுத் துறை (Public Department) நிகழ்ச்சிதானே! இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சி நிரல் முறைப்படி, புதிய முதலமைச்சர் ஒப்புதலுடன்தானே நடந்திருக்கவேண்டும்? அலட்சியப்படுத்துவது வன்மையான கண்டனத்திற்குரியது” எனக் கூறியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசெங்கோட்டையன் இலாகா மாற்றம்!. நிதித்துறை அமைச்சராக மரிய வில்சன் நியமனம்!
    Next Article துரந்தர் படத்தில் ராணுவ ரகசியங்கள் கசிவா? டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?
    Editor web1
    • Website

    Related Posts

    ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படுமா?: முதல்வரிடம் வன்னி அரசு வைத்த கோரிக்கை!

    June 17, 2026

    விஜய் சந்திப்பில் பேசியது என்ன? கூட்டணி முதல் ஸ்டெர்லைட் வரை விளக்கிய வைகோ

    June 17, 2026

    கடவுளை மறந்தாலும் காதலை மறக்காதீர் – ஹார்ட்டீன் பட இசை வெளியீடு

    June 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அந்த டயலாக்கை பேச வெட்கமாக இருந்தது!. நடிகை சமந்தா!

    ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படுமா?: முதல்வரிடம் வன்னி அரசு வைத்த கோரிக்கை!

    விஜய் சந்திப்பில் பேசியது என்ன? கூட்டணி முதல் ஸ்டெர்லைட் வரை விளக்கிய வைகோ

    கில் – இஷான் அதிரடி! ரன் மழை பொழிந்த இந்தியா!. ஆப்கானிஸ்தானுக்கு 403 ரன்கள் இமாலய இலக்கு!

    ‘டெலிகிராம்’ தடை மோடி அரசின் புதிய தந்திரமா? ராகுல் காந்தி கடும் கண்டனம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.