Author: Editor web1

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில், கடந்த சில மாதங்களாக தங்கம் மற்றும் போதைப்பொருட்கள் கடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் கூட சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர்ஏசியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஸ்கூட் ஆகிய விமானங்களில் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு (DRI) அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த சுமார் 30 பயணிகளிடம் இருந்து 4.5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 5 கோடி ரூபாய் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, அந்த 30 பயணிகளையும் தனி அறையில் வைத்து சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து…

Read More

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றிய தவெக தலைமையில், கடந்த மே 10-ஆம் தேதி புதிய ஆட்சி அமைந்தது. முதலமைச்சராக விஜய்யும், அவருடன் கே.ஏ.செங்கோட்டையன், ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், ராஜ்மோகன், வெங்கட்ரமணன், டி.கே.பிரபு, நிர்மல் குமார், கீர்த்தனா ஆகிய 9 பேர் மட்டுமே அமைச்சர்களாகப் பதவியேற்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை முதலமைச்சர் உட்பட மொத்தம் 34 பேர் அமைச்சரவையில் இடம்பெற முடியும். தற்போது வெறும் 10 பேர் மட்டுமே உள்ளதால், நிர்வாக வசதிக்காக அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அண்மையில் மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனையும் நடத்தினார். நாளை அமைச்சரவை விரிவாக்கம்? பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை எட்ட காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளுடன் தவெக கூட்டணி அமைத்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி மட்டும் அமைச்சரவையில் இடம் கோரியுள்ளது. அமைச்சரவை விரிவாக்கத்தின்…

Read More

சென்னை உயர் நீதிமன்றத்தின் காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில், 19 பேரை புதிய நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் தனது ஒப்புதலை அளித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 75 ஆகும். இதில் தற்போது 23 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், வழக்குகளின் தேக்கத்தைக் குறைக்க இந்த நியமனப் பரிந்துரை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பரிந்துரைக்கப்பட்ட 19 பேர் யார் யார்? கடந்த 2025-ஆம் ஆண்டு இதற்கான பரிந்துரை பட்டியல்கள் அனுப்பப்பட்டன. தற்போதைய ஒப்புதலின்படி, மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் இருந்து 9 பேரும், வழக்கறிஞர்கள் தரப்பில் இருந்து 10 பேரும் நீதிபதிகளாக நியமிக்கப்பட உள்ளனர். மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் இருந்து 9 பேர் எஸ்.அல்லி (சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர்) முருகன்,சுமதி, திருமகள் சந்திரசேகர், தர்மலிங்கம் லிங்கேஸ்வரன், கார்த்திகேயன் பாலதாண்டாயுதம், சண்முகம் கார்த்திகேயன், பாலுச்சாமி முருகேசன், குணசேகரன். வழக்கறிஞர்கள் தரப்பில் இருந்து…

Read More

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்ற அதே வேளையில், சென்னை எம்.ஆர்.சி நகரில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தரப்பினர் தங்களது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தில் விஜயபாஸ்கர், தங்கமணி, ஆர்.காமராஜ் உள்ளிட்ட முக்கிய சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சி.வி.சண்முகம், எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவரது பேட்டியின் முக்கிய விவரங்கள் இதோ: 2019 முதல் தொடரும் படுதோல்விகள் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இது இந்தத் தேர்தலில் மட்டும் வந்த தோல்வி அல்ல; 2019 முதல் இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்கள், இரண்டு சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் எனத் தொடர் தோல்விகளைச் சந்தித்து, கட்சியின் வாக்கு வங்கி சரிந்து வருகிறது. இது இயக்கத்திற்குப் பேரச்சுறுத்தல். 2024 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, நாங்கள் 6…

Read More

தமிழக வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேர நிலவரம் அதிகபட்ச மழை: கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் அதிகபட்சமாக 163.5 மி.மீ மழை பதிவாகியுள்ளது. வெப்பநிலை: அதிகபட்சமாக வேலூரில் 40.3°C வெப்பமும், சமவெளிப்பகுதியில் குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 22.2°C வெப்பமும் பதிவாகியுள்ளது. மழை முன்னறிவிப்பு (மே 19 –  25) மே 19 (இன்று): நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களில் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். மே 20 & 21: நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை தொடர…

Read More

தமிழக அரசியல் களம் சட்டமன்ற தேர்தலுக்குப் பிந்தைய திருப்பங்களால் பரபரப்பாகியுள்ள சூழலில், அதிமுக-வுக்குள் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தரப்பினர் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த உட்கட்சிப் பிளவும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் அதிருப்தியும் அக்கட்சியின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்த நிலையில், கட்சியின் அடுத்தகட்ட நகர்வு குறித்து விவாதிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. ஒற்றுமை அவசியம் – இ.பி.எஸ் உருக்கம் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, பதவிக்காகவும் சுயநலத்திற்காகவும் சிலர் கட்சிக்குத் துரோகம் செய்துவிட்டுப் பிரிந்து சென்றாலும், இந்த இக்கட்டான சூழலில் எஞ்சியிருக்கும் தலைவர்களும் தொண்டர்களும் கட்டுக்கோப்புடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். “அரசியல் இயக்கங்களுக்குத் தேர்தல் வெற்றி, தோல்விகள் என்பது சகஜமானது. ஆனால், கட்சியின் எதிர்காலம் மற்றும் அதன் ஸ்திரத்தன்மை என்பது நாம் காட்டும்…

Read More

தமிழ்நாட்டின் நிதியமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், 300 கோடி ரூபாய்க்கு மேல் பொதுமக்களை ஏமாற்றியதாகக் கூறப்படும் தேடப்படும் குற்றவாளி ஒருவருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்த சம்பவம் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. சேலத்தைச் சேர்ந்த வின் ஸ்டார் இந்தியா சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் அதிபர் சிவக்குமார் என்பவர், ரியல் எஸ்டேட் மற்றும் பல்வேறு தொழில்களின் பெயரால் பொதுமக்களிடம் முதலீடு செய்யுமாறு தூண்டினார். “இரட்டிப்பு வருமானம்” என்று வாக்குறுதி அளித்து ஆயிரக்கணக்கான மக்களிடம் இருந்து சுமார் 300 கோடி ரூபாய்க்கு மேல் திரட்டியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. முதலீட்டாளர்கள் பலர் கடன் வாங்கி, உறவினர்களிடம் பணம் வாங்கி நம்பிக்கையுடன் கொடுத்தனர். ஆனால் சிவக்குமார் திடீரென தலைமறைவானார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை முயற்சி உள்ளிட்ட சம்பவங்களும் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின. சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கில் சிவக்குமார் உள்பட 30 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இவர் தலைமறைவாக இருப்பதாகவும், அவரைத்…

Read More

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் விசாரணையைத் தொடங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,”தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் வேலை வழங்குவதாகக் கூறி அப்பாவி இளைஞர்களிடம் மோசடியாக வசூலித்த கோடிக்கணக்கான பணத்தை சட்டவிரோதமான பரிமாற்றம் செய்தது தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் விசாரணையைத் தொடங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்திருக்கிறது. அரசு நிர்வாகத்தில் தூய்மையை ஏற்படுத்தும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. திமுகவைச் சேர்ந்த தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி 2011-15 காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பணியாற்றிய காலத்தில், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்பப் பணியாளர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட பணிகளை வழங்குவதாக கூறி பல்லாயிரக்கணக்கானோரிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து ஏமாற்றியதாக சென்னை…

Read More

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிரடியாக வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடித்துள்ள தவெக, அடுத்ததாக டெல்லி அரசியலில் களமிறங்க தீவிரம் காட்டி வருகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக களம் கண்ட தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் பெரும்பான்மையாக வெற்றி பெற்று பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்தநிலையில், தனது அடுத்தகட்ட நகர்வாக டெல்லி அரசியலிலும் தடம் பதிக்கத் தயாராகி வருகிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தை தொடர்ந்து நாடாளுமன்றத்திலும் தங்களின் குரல் ஒலிக்க வேண்டும் என்பதில் அக்கட்சியின் தலைவர் விஜய் தீவிரமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-வைச் சேர்ந்த சி.வி.சண்முகம் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால், அவர் வகித்து வந்த மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். எனவே, அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த ஒரு இடத்திற்கு மாநிலங்களவை எம்.பி.யை நியமனம் செய்ய விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது. இதன்காரணமாக…

Read More

மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் நிலவி வரும் கடுமையான பதற்றத்திற்கு மத்தியில், ஈரான் மீது நடத்தத் திட்டமிட்டிருந்த ராணுவத் தாக்குதலை அமெரிக்க அதிபர் டிரம்ப் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளார். அணுசக்தி ஒப்பந்த விவகாரம் கடந்த பிப்ரவரி 28ம் தேதி முதல் ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியதால் மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் போர் சூழல் நிலவியது. ஹார்முஸ் நீரிணை வழியாக எரிவாயு மற்றும் எண்ணெய் கப்பல்கள் செல்வதற்கு ஈரான் கட்டுப்பாடுகள் விதித்ததால், உலகளவில் எரிவாயு மற்றும் பெட்ரோலியப் பொருட்களுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், ஈரானுடன் தற்போது மிக முக்கியமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதால் தாக்குதல் முடிவை தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் தலைவர்கள் அமெரிக்க அதிபர் டிரம்பைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். ஈரானுடன் ஒரு…

Read More