Close Menu
    What's Hot

    திருப்பூர் : பேஸ்புக் மூலம் ஆபாச வீடியோ அனுப்பி பணம் பறித்த கும்பல்..! மிரட்டலில் பயந்து தற்கொலை செய்து கொண்ட பீகார் இளைஞர்..!

    116 வயதில் 3,550 படிக்கட்டுகள் ஏறிய மூதாட்டி..! ஏழுமலையானை தரிசனம் செய்த காட்சிகள் வைரல்..!

    ஃபிஃபா அப்டேட் : பராகுவேவை பந்தாடிய பிரான்ஸ்..! கடைசி நேரத்தில் கோல் அடித்து வெற்றி..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தமிழக அமைச்சரவை நாளை விரிவாக்கம்?
    Featured

    தமிழக அமைச்சரவை நாளை விரிவாக்கம்?

    Editor web1By Editor web1May 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    008 vijay meet
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றிய தவெக தலைமையில், கடந்த மே 10-ஆம் தேதி புதிய ஆட்சி அமைந்தது. முதலமைச்சராக விஜய்யும், அவருடன் கே.ஏ.செங்கோட்டையன், ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், ராஜ்மோகன், வெங்கட்ரமணன், டி.கே.பிரபு, நிர்மல் குமார், கீர்த்தனா ஆகிய 9 பேர் மட்டுமே அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

    தமிழகத்தைப் பொறுத்தவரை முதலமைச்சர் உட்பட மொத்தம் 34 பேர் அமைச்சரவையில் இடம்பெற முடியும். தற்போது வெறும் 10 பேர் மட்டுமே உள்ளதால், நிர்வாக வசதிக்காக அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அண்மையில் மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனையும் நடத்தினார்.

    நாளை அமைச்சரவை விரிவாக்கம்?

    பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை எட்ட காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளுடன் தவெக கூட்டணி அமைத்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி மட்டும் அமைச்சரவையில் இடம் கோரியுள்ளது.

    அமைச்சரவை விரிவாக்கத்தின் போது காங்கிரஸ் தரப்பிலிருந்து 2 பேருக்கும், தவெக தரப்பிலிருந்து புதிய முகங்கள் சிலருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

    தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் இன்று சென்னை திரும்புகிறார். இதனால், நாளை வியாழக்கிழமை அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதிமுகவில் இழுபறி

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான 25 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்களில் சிலருக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டாலும், அதிமுகவின் உட்கட்சிப் பிரச்சினை இன்னும் முடிவுக்கு வராததால் இதில் இழுபறி நீடிக்கிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிமுக ஆதரவைப் பெற்றால் தவெகவுக்கு வழங்கும் ஆதரவு குறித்து மறுபரிசீலனை –சிபிஎம் அதிரடி.
    Next Article திருச்சி விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!
    Editor web1
    • Website

    Related Posts

    திருப்பூர் : பேஸ்புக் மூலம் ஆபாச வீடியோ அனுப்பி பணம் பறித்த கும்பல்..! மிரட்டலில் பயந்து தற்கொலை செய்து கொண்ட பீகார் இளைஞர்..!

    July 5, 2026

    116 வயதில் 3,550 படிக்கட்டுகள் ஏறிய மூதாட்டி..! ஏழுமலையானை தரிசனம் செய்த காட்சிகள் வைரல்..!

    July 5, 2026

    ஃபிஃபா அப்டேட் : பராகுவேவை பந்தாடிய பிரான்ஸ்..! கடைசி நேரத்தில் கோல் அடித்து வெற்றி..!

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருப்பூர் : பேஸ்புக் மூலம் ஆபாச வீடியோ அனுப்பி பணம் பறித்த கும்பல்..! மிரட்டலில் பயந்து தற்கொலை செய்து கொண்ட பீகார் இளைஞர்..!

    116 வயதில் 3,550 படிக்கட்டுகள் ஏறிய மூதாட்டி..! ஏழுமலையானை தரிசனம் செய்த காட்சிகள் வைரல்..!

    ஃபிஃபா அப்டேட் : பராகுவேவை பந்தாடிய பிரான்ஸ்..! கடைசி நேரத்தில் கோல் அடித்து வெற்றி..!

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.