Close Menu
    What's Hot

    தொடரும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் ; தவெகவின் ஒருமாத ஆட்சியில் அலறும் தமிழகம்!

    திரையுலகில் புதிய முகங்களின் சிற்பி பாரதிராஜா!

    அடேங்கப்பா இவ்வளவா? – பாரதிராஜா பெற்ற விருதுகளின் பட்டியல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»அதிமுக ஆதரவைப் பெற்றால் தவெகவுக்கு வழங்கும் ஆதரவு குறித்து மறுபரிசீலனை –சிபிஎம் அதிரடி.
    Featured

    அதிமுக ஆதரவைப் பெற்றால் தவெகவுக்கு வழங்கும் ஆதரவு குறித்து மறுபரிசீலனை –சிபிஎம் அதிரடி.

    Editor TN TalksBy Editor TN TalksMay 19, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    013 cpm
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுகவின் ஒரு பிரிவு எம்.எல்.ஏக்களின் ஆதரவை தவெக பெற்றால், அவர்களுக்கு வழங்கும் ஆதரவு குறித்து மறுபரிசீலனை செய்வோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

    சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக ச.ஜோசப் விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார்.

    சட்டபேரவையில் நடைபெற்ற நம்பிக்கை தீர்மானத்தின்போது, யாரும் எதிர்பாராத வகையில் அதிமுகவில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்பைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு தங்கள் ஆதரவை வழங்கினர். இதனால் அதிமுக இரு பிரிவாகி அவர்களுக்குள் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே, ஒரு பிரிவு அதிமுகவைச் சேர்ந்தர்களையும் தவெகவின் கூட்டணியில் இணைத்து அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படலாம் என்னும் கருத்து பரவி வருகிறது.

    இந்த நிலையில், அதிமுகவின் ஆதரவை தவெக பெறுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியில் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,  மீண்டும் ஒரு தேர்தலை தமிழகம் சந்திக்கக் கூடாது என்பதற்காகவும், கொல்லைப்புற வழியாக பாஜக மற்றும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவும்தான் 108 இடங்களை வென்ற தவெக ஆட்சி அமைக்கவேண்டும் என்பதற்காக வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

    மேலும், அதிமுகவின் ஆதரவைப் பெறுவது என்பதோ, அவர்களை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வது என்பதோ மக்களின் தீர்ப்புக்கு எதிரானது. விஜய் சொல்லியிருக்கிற நல்லாட்சி என்பதற்கு விரோதமாக இது அமையும்.

    ஏற்கனவே அதிமுக, திமுக அணி இரண்டுக்கும் எதிராகத்தான் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.

    அத்தகைய அணியின் ஆதரவினைப் பெற்று தவெக ஆட்சியில் தொடர்வது என்பது, மக்களுடைய தீர்ப்புக்கு விரோதமாக அமையும். நிச்சயமாக,  அத்தகைய நிலைக்கு அவர்கள் செல்லமாட்டார்கள் என நம்புகிறேன் எனக் கூறினார்.

    மீறி அவர்கள் அதிமுகவின் கோஷ்டியை சேர்த்துக் கொண்டு ஆட்சி அமைப்பது என்கிற முடிவுக்கு தவெக செல்லுமானால் நிச்சயமாக தவெகவுக்கு நாங்கள் அளித்துவரும் ஆதரவு குறித்த முடிவை மறுபரிசீலனை செய்வோம் எனத் தெரிவித்துள்ளார்.

    சிபிஎம் கட்சியின் இந்த முடிவால், தற்போது தமிழக அரசியல் அரங்கில் லேசான அதிர்வு ஏற்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாரீப் பருவத்துக்கு தேவையான உரங்களை வழங்கிடுக – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர்  ச.ஜோசப் விஜய் கடிதம்
    Next Article தமிழக அமைச்சரவை நாளை விரிவாக்கம்?
    Editor TN Talks

    Related Posts

    தொடரும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் ; தவெகவின் ஒருமாத ஆட்சியில் அலறும் தமிழகம்!

    June 10, 2026

    திரையுலகில் புதிய முகங்களின் சிற்பி பாரதிராஜா!

    June 10, 2026

    அடேங்கப்பா இவ்வளவா? – பாரதிராஜா பெற்ற விருதுகளின் பட்டியல்

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொடரும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் ; தவெகவின் ஒருமாத ஆட்சியில் அலறும் தமிழகம்!

    திரையுலகில் புதிய முகங்களின் சிற்பி பாரதிராஜா!

    அடேங்கப்பா இவ்வளவா? – பாரதிராஜா பெற்ற விருதுகளின் பட்டியல்

    காற்றோடு கலந்தார் உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா

    முதலமைச்சர் விஜய்யின் முதல் மாதப் பயணம்! சாதித்தது என்ன?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.