சென்னை உயர் நீதிமன்றத்தின் காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில், 19 பேரை புதிய நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் தனது ஒப்புதலை அளித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 75 ஆகும். இதில் தற்போது 23 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், வழக்குகளின் தேக்கத்தைக் குறைக்க இந்த நியமனப் பரிந்துரை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
பரிந்துரைக்கப்பட்ட 19 பேர் யார் யார்?
கடந்த 2025-ஆம் ஆண்டு இதற்கான பரிந்துரை பட்டியல்கள் அனுப்பப்பட்டன. தற்போதைய ஒப்புதலின்படி, மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் இருந்து 9 பேரும், வழக்கறிஞர்கள் தரப்பில் இருந்து 10 பேரும் நீதிபதிகளாக நியமிக்கப்பட உள்ளனர்.
மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் இருந்து 9 பேர்
எஸ்.அல்லி (சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர்)
முருகன்,சுமதி, திருமகள் சந்திரசேகர், தர்மலிங்கம் லிங்கேஸ்வரன், கார்த்திகேயன் பாலதாண்டாயுதம், சண்முகம் கார்த்திகேயன், பாலுச்சாமி முருகேசன், குணசேகரன்.
வழக்கறிஞர்கள் தரப்பில் இருந்து 10 பேர்
என்.ரமேஷ், ஜி.கே.முத்துக்குமார், ராஜேஷ் விவேகானந்தன், சங்கரநாராயணன் ரவிக்குமார், நாகராஜன் திலீப்குமார், இ.மனோகரன், கிருஷ்ணசாமி கோவிந்தராஜன், ரஜினிஷ் பதியில், கே.அப்பாதுரை, ஆர்.அனிதா.
உச்ச நீதிமன்ற கொலிஜியம் தற்போது இந்த 19 பேரின் பெயர்களுக்கும் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்தகட்டமாக, இந்த பட்டியலுக்கு மத்திய அரசு தனது ஒப்புதலை வழங்கும். அதன் தொடர்ச்சியாக, குடியரசுத் தலைவர் புதிய நீதிபதிகள் நியமனத்திற்கான இறுதி உத்தரவை பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
