Author: Editor web1

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத திருப்பங்கள் நிறைந்த தேர்தலாக 2026 சட்டமன்றத் தேர்தல் அமைந்தது. 60 ஆண்டு காலமாக தமிழ்நாட்டை ஆட்சி செய்த திமுக, அதிமுக என்ற இருபெரும் கட்சிகள் தோல்வியை சந்தித்த நிலையில், 108 தொகுதிகளில்  விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்ற போதும், ஆட்சி அமைக்க அறுதிப்பெரும்பான்மை (118 இடங்கள்) கிடைக்காத சூழல் அமைந்தது. இந்தநிலையில், ஆட்சி அமைக்க திரைமறைவில் நடந்த வேலைகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விஜய்யின் எழுச்சியைத் தடுக்க திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவங்களும் இணைந்து “திராவிடக் கூட்டணியை” உருவாக்க முயன்ற தகவல்கள் வெளியாகி பரபரப்பான பேசு பொருளாகி உள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி, மாநில அரசியலில் பெரும் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது. சமீபத்திய சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் பின்னணியில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்  ஆட்சி அமைப்பதைத் தடுக்க,…

Read More

ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஐந்து நாடுகளுக்கான அரசு முறைப் பயணத்தின்கீழ் ஐக்கிய அரபு அமீரகத்தைத் தொடர்ந்து நெதர்லாந்து சென்ற பிரதமர் மோடி, பின்னர் ஸ்வீடன் சென்றார். கோதன்பர்க் நகர விமானநிலையத்தில் ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிரிஸ்டர்ஸன் பிரதமர் மோடியை நேரில் வரவேற்றார். இந்திய வம்சாவளியினரின் உற்சாக வரவேற்பையும் பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார். ஸ்வீடன் பயணத்தின் போது, அந்நாட்டு பிரதமர் உல்ஃப் கிரிஸ்டர்ஸன் உடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். மேலும் பிற ஐரோப்பிய தலைவர்களையும் ஸ்வீடன் தலைமை செயல் அதிகாரிகளையும் சந்திக்கும் பிரதமர் மோடி, வர்த்தகம், பாதுகாப்பு, முதலீடு உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படவும், தொழில்நுட்ப ஒத்துழைப்பை செயல்படுத்துவது பற்றியும் முக்கியப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதனிடையே பிரதமர் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய, “ராயல் ஆர்டர் ஆப் போலார் ஸ்டார் கமாண்டர் கிராண்ட் கிராஸ்” என்ற சிறப்பு மிக்க…

Read More

இந்தியா- நெதர்லாந்து இடையே 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ஐந்து நாடுகளுக்கான அரசு முறைப் பயணத்தின் முதலாவதாக ஐக்கிய அரபு அமீரகத்தைத் தொடர்ந்து பின்னர் நெதர்லாந்து சென்றார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், சனிக்கிழமை மாலை தி ஹேக் நகரில் நெதர்லாந்து பிரதமர் ரோப் ஜெட்டனுடனை சந்தித்து பேசினார். அப்போது, பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, முக்கிய கனிமங்கள், கடல்சார் மேம்பாடு, செமிகண்டக்டர், செயற்கை நுண்ணறிவு, விண்வெளி, குவாண்டம் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும், பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் பற்றியும் பிரதமர் மோடி மற்றும் நெதர்லாந்து பிரதமர் ரோப் ஜெட்டன் ஆகியோர் விரிவாக ஆலோசித்தனர். அதனைத் தொடர்ந்து இருதரப்பு ஒத்துழைப்பு வலுப்படுத்தும் 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா- நெதர்லாந்து உறவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். வரலாற்று ரீதியாகவும், மக்கள் ரீதியாகவும் ஆழமான…

Read More

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு. சினிமா பிம்பம், ரசிகர் மன்றக் கட்டமைப்பு, பிற கட்சிப் பிரமுகர்களின் அனுபவம் மற்றும் படித்த இளைஞர்களின் கூட்டணிக் கலவையாக உருவெடுத்துள்ள இந்த புதிய அமைச்சரவையின் இலாக்காக்கள் ஒதுக்கீடு வெறும் தற்செயலானது அல்ல; அதற்குப் பின்னால் மிகத் தெளிவான, ஆழமான அரசியல் ராஜதந்திரம் ஒளிந்திருக்கிறது. முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது 9 அமைச்சர்களின் இலாக்காக்களை உற்றுநோக்கினால், தவெக அரசு எந்தெந்தப் புள்ளிகளில் கவனம் செலுத்த விரும்புகிறது என்பது துல்லியமாகப் புலப்படும். திராவிடக் கட்சிகளின் பாரபட்சமும், தவெக-வின் மாற்று வியூகமும் தமிழக அரசியலில் நீண்டகாலமாக இருந்து வரும் ஒரு மிக முக்கிய விமர்சனம் – “பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்களுக்கு ஏன் முக்கியத்துவம் வாய்ந்த இலாக்காக்கள் ஒதுக்கப்படுவதில்லை?” என்பதுதான். மறைந்த பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் தான், பட்டியல் இனத்தைச் சேர்ந்த…

Read More

விஜய் டிவியின் பிரபல சீரியலான ‘சின்ன மருமகள்’ தொடரின் நாயகி ஸ்வேதா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்ரோஷமாகவும் கண்ணீருடனும் வெளியிட்ட வீடியோ ஒட்டுமொத்த சின்னத்திரை வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “என் Permission இல்லாம Photos எப்படிடா போட்ட…” என்று அவர் குமுறியதன் பின்னணியில் இருக்கும் காதல், ஏமாற்றம் மற்றும் பண மோசடி குறித்த முழு விவரங்கள் இதோ: 1. காதல், ரகசியத் திருமணம் மற்றும் பிரிவு நடிகை ஸ்வேதாவும், ஆதி என்ற இளைஞரும் கடந்த சில காலமாக தீவிரமாகக் காதலித்து, வெளியில் தெரியாமல் ரகசியமாகப் பதிவுத் திருமணமும் செய்து கொண்டுள்ளனர். ஆனால், திருமணத்திற்குப் பிறகுதான் ஆதியின் உண்மையான முகமும், அவரது சில தவறான செயல்பாடுகளும் ஸ்வேதாவுக்குத் தெரிய வந்துள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்வேதா, அவரிடமிருந்து முற்றிலும் பிரிந்து வந்துவிட்டார். தற்போது தங்களுக்குள் விவாகரத்து  கோரி நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாக மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும் ஸ்வேதா உறுதிப்படுத்தியுள்ளார். 2. “ஆதி ஒரு மிகப்பெரிய பிராடு!”…

Read More

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்றது. அன்று திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட ராயப்பேட்டையில் வாக்காளர் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டிருந்த திமுக-வினரை தாக்கி, மேசை நாற்காலிகளை அகற்றி தகராறில் ஈடுபட்டதாக, தவெக-வைச் சேர்ந்த ரதி, பாஸ்கர் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக ராயப்பேட்டை காவல் நிலையத்தில், சென்னை மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலரின் மகன் கே.வி.மோகன் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் பதிவுசெய்யப்பட்ட வழக்கில் காவல்துறை தங்களை கைது செய்யக்கூடும் எனக் கூறி முன் ஜாமீன் வழங்க வேண்டுமென ரதி, பாஸ்கர் உள்ளிட்டோர் சென்னை உயர் நிதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி பி.தனபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஜி.மோகனகிருஷ்ணன் ஆஜராகி, ஏற்கனவே ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் திமுகவினருக்கு எதிராக மனுதாரர் புகார் அளித்ததால், அதற்கு பதிலாக பொய்யான புகாரை  மனுதாரர்களுக்கு எதிராக அளித்துள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக…

Read More

டாஸ்மாக் பணியாளர்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்து அதன் மீது தீர்வு கண்டு அதன் பிறகு சீரமைப்பு பணிகள் செய்ய வேண்டும் என தமிழக முதலமைச்சர் விஜய்க்கு டாஸ்மாக் தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. டாஸ்மாக் தொழிற்சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், சட்டமன்றத் தேர்தலில் மக்களின் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று, மற்ற கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்த முதல்வர் விஜய்க்கு தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் ஏ.ஐ.டி.யு.சி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு வழிபாட்டுத் தளங்கள், கல்விக் கூடங்கள், பேருந்து நிலையங்களில் இருந்து சுமார் 500 மீட்டர் இடைவெளியில் உள்ள சுமார் 717 மதுபான கடைகள் மூட உத்தரவு வழங்கப்பட்டதை தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் ஏ.ஐ.டி.யு.சி வரவேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த 717 கடைகளை மூடுவதால் பல்வேறு பிரச்சனைகள் எழுவதாகவும், எவ்வித சட்டத்திருத்தம் கொண்டு வராமல் தற்போது தமிழக முதலமைச்சர் விஜய், 500 மீட்டர்…

Read More

வீட்டுமனை ஒப்புதல் ரசீது வழங்க 7 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக திருவாருர் ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அவரது உதவியாளரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். விசாரணையின் போது உதவியாளர் சுரேஷ்குமார் அலுவலக 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம், கீழகாவாதுகுடி பகுதியைச் சேர்ந்த பாரதிதாசன், தனது வீட்டுமனைக்கு அனுமதி பெறுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவாரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகியுள்ளார். அப்போது அலுவலகத்தில் பணியாற்றி வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சுவாமிநாதன் மற்றும் அவரது உதவியாளர் சுரேஷ்குமார் ஆகியோர் வீட்டுமனை ஒப்புதல் ரசீது வழங்க ரூ.7 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் எனக் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல்துறையினரிடம்  பாரதிதாசன் புகார் அளித்துள்ளார். லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ரசாயனம் தடவிய ரூ.7 ஆயிரத்தை…

Read More

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு இன்று (மே 16) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தெற்கு வங்கக் கடலின் சில பகுதிகள், அந்தமான் கடல், அந்தமான் மற்றும் நிகோபார் தீவு பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், தென்மேற்கு வங்கக் கடல், மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே பகுதிகளில் தொடர்ந்து நிலவுவதால், தென் தமிழகம் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் தேனி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (மே 16) இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை…

Read More

நடிகர் ஜெயம் ரவி (இயற்பெயர்: ரவிமோகன்) மற்றும் ஆர்த்தி தம்பதியினரின் விவாகரத்து அறிவிப்பு கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி, கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இவர்களது 15 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததற்குப் பல்வேறு காரணங்கள் கிசுகிசுக்கப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் அதிகம் பேசப்பட்ட பெயர் பாடகி கெனிஷா பிரான்சிஸ். ஜெயம் ரவியின் நெருங்கிய தோழியான கெனிஷா, தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு, இந்த ஒட்டுமொத்த சர்ச்சையிலும் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ரவிமோகன் – ஆர்த்தி கருத்து வேறுபாடும் கெனிஷாவின் வருகையும் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இடையே கடந்த சில வருடங்களாகவே  கருத்து வேறுபாடுகள் இருந்து வந்ததாகக் கூறப்பட்டது. குறிப்பாக, ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினரின் அதீத தலையீடு காரணமாக ஜெயம் ரவி தனது சொந்த வீட்டிலிருந்து வெளியேறி மும்பையில் தங்கும் சூழல்…

Read More