Author: Editor web1

சென்னையிலிருந்து இண்டிகோ விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்த தமிழக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தங்கள் தலைவர் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற இந்த ஆறு நாட்களில் தொடர்ந்து பல்வேறு ஆக்கபூர்வமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருவதாகவும், மக்கள் என்ன எதிர்பார்த்து வாக்களித்தார்களோ அது நூறு சதவீதம் நிறைவேற்றப்படும் என்றும், முந்தைய அரசின் பழைய திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். தமிழகத்தில் மதுக்கடைகளை மூட படிப்படியாக முயற்சிகள் எடுக்கப்படும் என்றும், குட்கா போன்ற போதைப்பொருட்கள் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றின் புழக்கத்தை முற்றிலுமாக நிறுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்ட அவர், டாஸ்மாக் கடைகளின் நேரத்தைக் குறைப்பது குறித்து முதலமைச்சரே இறுதி முடிவு எடுப்பார் என்றார். நீட் தேர்வு  வியாபாரமாகிவிட்டது கல்வித்துறை குறித்துப் பேசுகையில், நீட் தேர்வை மத்திய அரசால் கூட சரியாக நடத்த முடியவில்லை என்றும், இதனால்…

Read More

புதுச்சேரியில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. இந்த கூட்டணியில் என்.ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக முக்கிய பங்காற்றின. மொத்தம் 18 தொகுதிகளில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி, ஆட்சியை மீண்டும் அமைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ரங்கசாமி ஐந்தாவது முறையாக புதுச்சேரி முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் நமசிவாயம் மற்றும் மல்லாடி கிருஷ்ணா ராவ் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.ஆனால் அமைச்சரவை முழுமையாக இன்னும் அமைக்கப்படவில்லை. மீதமுள்ள மூன்று அமைச்சரவை பதவிகளைப் பெறுவதற்காக பாஜக மற்றும் என்.ஆர் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் இடையே கடும் போட்டி நிலவி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அமைச்சரவை அமைப்பில் பிராந்திய சமநிலை, சமூக பிரதிநிதித்துவம் மற்றும் கூட்டணி அரசியல் ஆகியவை முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகின்றன. இந்நிலையில், புதிய சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு மற்றும் சட்டப்பேரவை நடைமுறைகளை சீராக நடத்தும் பொறுப்பில் தற்காலிக சபாநாயகர்…

Read More

எரிபொருள் விலை உயர்வு பாசிச பாஜக அரசின் நிர்வாகத் தோல்வி எனக் கடுமையாக சாடியுள்ளார் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,” சர்வதேசச் சந்தை மற்றும் போர்களால் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் காரணம் காட்டி, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 3 ரூபாய் 10 காசுகள் வரை உயர்த்தியுள்ள ஒன்றிய பாஜக அரசின் செயல், இந்தியப் பொருளாதாரத்தை அதலபாதாளத்திற்குத் தள்ளும் மக்கள் விரோத நடவடிக்கையாகும். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு ஆதாரமாக விளங்கும் எரிபொருள் விலையை, கார்ப்பரேட்டுகளின் இலாபத்திற்காகச் சாமானிய மக்களின் வயிற்றில் அடிக்கும் கருவியாகப் பயன்படுத்துவது இந்த பாசிச அரசின் நிர்வாகச் சீர்கேட்டையே காட்டுகிறது. இந்த விலை உயர்வு என்பது வெறும் பெட்ரோல் பங்கோடு முடிந்துவிடுவதல்ல. சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளின் உற்பத்திச் செலவை இது பலமடங்கு உயர்த்துகிறது. டீசலை நம்பி இயங்கும் இயந்திரங்கள் மற்றும் தொழிற்சாலை மின் உற்பத்திக் கருவிகளின் செலவு அதிகரிப்பதால்,…

Read More

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இச்சமயங்களில் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் காய்கறி கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, புகழ் பெற்ற மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழ கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு கண்காட்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் காரணமாக கோடை விழாக்கள் தாமதமாகியுள்ளன. இதனையடுத்து கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக நூற்றாண்டு அரசு ரோஜா பூங்காவில் நேற்று 21ஆவது ரோஜா மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தொடங்கி வைத்தார். கடந்த ஆண்டு மூன்று நாட்கள் நடத்தப்பட்ட ரோஜா கண்காட்சியை 35 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர். இந்த நிலையில், இந்த ஆண்டு அதிக அளவு சுற்றுலா பயணிகள் பார்வையிடுவர்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 5 நாட்கள் ரோஜா மலர் கண்காட்சி நடைபெறும் என தோட்டக்கலைத்துறை…

Read More

கட்சியின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதாகக் கூறி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் உள்ளிட்ட 25 மாவட்டச் செயலாளர்களை பதவியிலிருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மாலை அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக பெரியார் நகர் பகுதிச் செயலாளர் ‘பெரியார் நகர்’ இரா.மனோகரன் புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார். பூட்டப்பட்ட கட்சி அலுவலகம் – போலீஸ் குவிப்பு ஈரோடு கிழக்கு, மேற்கு மற்றும் மொடக்குறிச்சி ஆகிய மூன்று முக்கிய தொகுதிகளை உள்ளடக்கிய ஈரோடு மாநகர் மாவட்டத்தில், இந்த திடீர் தலைமை மாற்றத்தால் கட்சிக்குள் மோதல் சூழல் உருவானது. அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தின் முன்கதவு பூட்டப்பட்டு, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள்…

Read More

தொடர் தேர்தல் தோல்விகள் மற்றும் உட்கட்சி விவகாரங்களால் அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளதாக கருதப்படும் நிலையில், எடப்பாடி பழனிசாமியும், எஸ்.பி. வேலுமணி தரப்பும் மாறி மாறி பரஸ்பரம் இன்று வெளியிட்டுள்ள கருத்துகளும் குற்றச்சாட்டுகளும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி உள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தரப்பு பிரிவு அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 25 பேர் ஆதரவளித்ததைத் தொடர்ந்து, அவர்களின் கட்சிப் பதவியைப் பறித்து உத்தரவிட்டுள்ளார் கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி. அத்துடன் இரு தரப்பும் கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக மாறி மாறி பரஸ்பரம் கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சட்டப்பேரவைத் தலைவரிடம் மனு அளித்துள்ளது. பதவிக்காக துரோகம் இந்த நிலையில் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி, கடந்த…

Read More

தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் முனைப்பில் இருந்த திமுகவிற்கு, நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் ஒரு பெரும் பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளன. இந்த நிலையில், சென்னையில் இன்று நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை, திமுகவின் எதிர்காலக் கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழப்போவதை உறுதி செய்துள்ளது. பொதுவாகத் தேர்தல் தோல்வி ஏற்பட்டால், இரண்டாம் கட்ட நிர்வாகிகள் மீதோ அல்லது கூட்டணி கட்சிகள் மீதோ பழியைப் போடுவதுதான் அரசியல் வழக்கம். ஆனால், மு.க.ஸ்டாலின் அப்படியெல்லாம் அல்லாமல், ஒரு படி மேலே சென்று, “இந்தத் தோல்விக்குத் திமுக தலைவர் என்ற முறையில் நானே பொறுப்பேற்கிறேன்” என்று அறிவித்துள்ளார். இது தொண்டர்கள் மத்தியில் அவர் மீதான நன்மதிப்பை உயர்த்தினாலும், இதற்கு பின்னால் ஒரு கடுமையான எச்சரிக்கை ஒளிந்திருப்பதை நிர்வாகிகள் உணர்ந்துள்ளனர். வெற்றி கிடைக்கும்போது மகுடம் சூட்டிக்கொள்ளும் தலைமை, தோல்வி வரும்போது பின்வாங்குவது முறையல்ல என்ற…

Read More

மருத்துவப் படிப்புகளில் நீட் (NEET) அடிப்படையிலான சேர்க்கைகளை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தேசிய தேர்வு முகமை (National Testing Agency) மூலம் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET-UG 2026), கடந்த 03.05.2026 அன்று 5,432 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டும் 31 நகரங்களில் இத்தேர்வு நடைபெற்றது. சுமார் 1.4 லட்சம் தமிழக விண்ணப்பதாரர்கள் உட்பட, 22,05,035 விண்ணப்பதாரர்கள் தேர்வில் பங்கேற்றனர். வினாத்தாள் கசிந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக சட்ட அமலாக்க அமைப்புகள் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்திய அரசின் ஒப்புதலுடன், தேசிய தேர்வு முகமை தற்போது நடந்து முடிந்த நீட்தேர்வை ரத்து செய்துள்ளது. மேலும், இவ்விவகாரம் விசாரணைக்காக மத்திய புலனாய்வு அமைப்பான CBI-க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த ரத்து நடவடிக்கை, நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மருத்துவப் படிப்பு…

Read More

தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் விடுத்துள்ள அறிக்கையில் எதிர்க்கட்சியான திமுக-வின் விமர்சனங்களுக்குக் புள்ளிவிவரங்களுடன் அதிரடி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மக்களின் நலன் விரும்பும் அரசாகத் தமிழக வெற்றிக் கழக அரசு இன்று அவையில் தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. இந்த வெற்றிக்கு ஆதரவளித்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் ஐயுஎம்எல் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் முதலமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.  புள்ளிவிவரப் பதிலடி தவெக-வுக்குப் பெரும்பான்மை இல்லை என்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் விமர்சனத்திற்குப் பதிலளித்துள்ள முதலமைச்சர் விஜய்,” தனித்துப் போட்டியிட்ட தவெக 34.92% வாக்குகளைப் பெற்றுள்ளது. ஆனால், கூட்டணிகளுடன் போட்டியிட்ட திமுக பெற்ற தனிப்பட்ட வாக்கு சதவிகிதம் வெறும் 24.19% மட்டுமே. திமுக-வை விட தவெக 52 லட்சத்து 97 ஆயிரத்து 65 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது. 76 சதவீத மக்களால்…

Read More

இந்திய கலாச்சாரத்தில் தங்கம் என்பது வெறும் ஆபரணம் மட்டுமல்ல, அது ஒரு குடும்பத்தின் பாதுகாப்பு அரணாகவும், கௌரவமாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால், நாட்டு மக்கள் ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்குவதை தவிர்க்குமாறு பிரதமர் மோடி  விடுத்த வேண்டுகோள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அடுத்த ஒரு ஆண்டிற்கு திருமண நகைகள் உட்பட எவ்வித தங்கம் வாங்குவதையும் மக்கள் தவிர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அதேசமயம் தங்கம் மீதான இறக்குமதி வரியையும் 9 சதவீதம் உயர்த்தி (6%-லிருந்து 15% ஆக) அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் எதிரொலியாக தங்கம் விலை கிடு கிடு உயர்வை சந்தித்துள்ளது. சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை, முன்னெப்போதும் இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது. ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ₹15,400 க்கும், ஒரு சவரன் தங்கம் ₹1,23,200 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை ஏற்றத்துடன், நகைக்கடைகளில் தங்கம் வாங்கும்போது 3% ஜிஎஸ்டி மற்றும்…

Read More