Close Menu
    What's Hot

    நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    விஜய் அண்ணா ஆக்‌ஷன இனிமேல்தான் பார்க்கப் போறீங்க – பட்டாசு தொகுதி அமைச்சர் கீர்த்தனா படபடா…

    புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகராக அன்பழகன் பதவி ஏற்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகராக அன்பழகன் பதவி ஏற்பு!
    தமிழ்நாடு

    புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகராக அன்பழகன் பதவி ஏற்பு!

    Editor web1By Editor web1May 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 05 15 16h33m02s674
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    புதுச்சேரியில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. இந்த கூட்டணியில் என்.ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக முக்கிய பங்காற்றின. மொத்தம் 18 தொகுதிகளில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி, ஆட்சியை மீண்டும் அமைத்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து, ரங்கசாமி ஐந்தாவது முறையாக புதுச்சேரி முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் நமசிவாயம் மற்றும் மல்லாடி கிருஷ்ணா ராவ் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.ஆனால் அமைச்சரவை முழுமையாக இன்னும் அமைக்கப்படவில்லை. மீதமுள்ள மூன்று அமைச்சரவை பதவிகளைப் பெறுவதற்காக பாஜக மற்றும் என்.ஆர் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் இடையே கடும் போட்டி நிலவி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அமைச்சரவை அமைப்பில் பிராந்திய சமநிலை, சமூக பிரதிநிதித்துவம் மற்றும் கூட்டணி அரசியல் ஆகியவை முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகின்றன.

    இந்நிலையில், புதிய சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு மற்றும் சட்டப்பேரவை நடைமுறைகளை சீராக நடத்தும் பொறுப்பில் தற்காலிக சபாநாயகர் முக்கிய இடத்தைப் பெறுகிறார். பொதுவாக நீண்டகால சட்டமன்ற அனுபவம் கொண்ட உறுப்பினர்களே இந்த பதவிக்கு தேர்வு செய்யப்படுவர். அந்த வகையில், 5-முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ள அனுபவத்தின் அடிப்படையில் அன்பழகன் பரிந்துரை செய்து  துணைநிலை ஆளுநருக்கு கோப்பு அனுப்பப்பட்ட நிலையில் ஒப்புதல் அளித்தார்.

    இந்நிலையில் சட்டப்பேரவையில் உள்ள சபாநாயகர் அறையில் தற்காலிக சபாநாயகராக அன்பழகன் பதவி ஏற்றுக்கொண்டார்.

    vlcsnap 2026 05 15 16h33m29s189

    மேலும், இந்த சட்டசபை தேர்தலில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள ரங்கசாமி, சட்டப்படி ஒரு தொகுதியை மட்டும் வைத்திருக்க முடியும் என்பதால், தட்டாஞ்சாவடி தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யக்கூடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அவர் எந்த தொகுதியைத் தொடரப் போகிறார் என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் ஆர்வம் நிலவி வருகிறது.

    வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவை கூட்டம், புதிய அரசின் அரசியல் திசையையும், அமைச்சரவை விரிவாக்கத்தையும், சபாநாயகர் தேர்வையும் தீர்மானிக்கும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜய் முதலமைச்சராவார் – நான் சொன்னது நடந்துருச்சு – குஷியில் கேரள ரசிகர்
    Next Article விஜய் அண்ணா ஆக்‌ஷன இனிமேல்தான் பார்க்கப் போறீங்க – பட்டாசு தொகுதி அமைச்சர் கீர்த்தனா படபடா…
    Editor web1
    • Website

    Related Posts

    நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    May 15, 2026

    விஜய் அண்ணா ஆக்‌ஷன இனிமேல்தான் பார்க்கப் போறீங்க – பட்டாசு தொகுதி அமைச்சர் கீர்த்தனா படபடா…

    May 15, 2026

    விஜய் முதலமைச்சராவார் – நான் சொன்னது நடந்துருச்சு – குஷியில் கேரள ரசிகர்

    May 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    விஜய் அண்ணா ஆக்‌ஷன இனிமேல்தான் பார்க்கப் போறீங்க – பட்டாசு தொகுதி அமைச்சர் கீர்த்தனா படபடா…

    புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகராக அன்பழகன் பதவி ஏற்பு!

    விஜய் முதலமைச்சராவார் – நான் சொன்னது நடந்துருச்சு – குஷியில் கேரள ரசிகர்

    நீட் ஒழியாதவரை நிம்மதியில்லை – கனிமொழி எம்.பி

    Trending Posts

    திருமணத்துக்கு சேர்த்து வைத்த 36 சவரன் நகை, ரூ.2 இலட்சம் பணம் கொள்ளை

    May 15, 2026

    நீட் ஒழியாதவரை நிம்மதியில்லை – கனிமொழி எம்.பி

    May 15, 2026

    1 டாலர் = ரூ.96.11 ; இந்திய ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சி

    May 15, 2026

    இபிஎஸ் உழைப்பை மறுக்கவில்லை..! அவர் தான் அதிமுகவா? எஸ்.பி.வேலுமணி விமர்சனம்..!

    May 15, 2026

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு – சு.வெங்கடேசன் கண்டனம்

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.