Author: Editor web1

பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டப்பேரவைதான்; ஆளுநர் மாளிகை அல்ல என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் இந்தத் தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி உள்ளது. 5 இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்க முன்வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து விஜய் ஆட்சியமைக்க உரிமை கோரிய நிலையில், தேவையான மெஜாரிட்டி (118) எண்ணிக்கையை காட்டினால்தான் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியும் எனக் கூறி ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க தமிழக ஆளுநர் மறுத்துவிட்டார். இந்த நிலையில், தனிப்பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை பெற விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தலா இரண்டு இடங்களைக் கொண்ட இடதுசாரி கட்சிகளின் ஆதரவை விஜய் கோரி உள்ளார். ஆனால் இந்த கட்சிகள் இன்னும் தங்களது முடிவை அறிவிக்கவில்லை. இந்த சூழ்நிலையில், ஆளுநரின் அரசியல் மற்றும் அரசியலமைப்புச் செயல்பாடு என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று…

Read More

தமிழகத்தில் ஆட்சியமைப்பைச் சுற்றிய அரசியல் பரபரப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை இன்னும் முழுமையாக உறுதி செய்ய முடியாத நிலை தொடர்கிறது. இந்த சூழலில், திமுக – அதிமுக இடையே புதிய அரசியல்  கூட்டணி உருவாகிறதா என்ற கேள்வி தற்போது தமிழக அரசியலின் மைய விவாதமாக மாறியுள்ளது. அதிமுக ஆட்சியமைக்க ஆதரவா? அதிமுக ஆட்சியமைக்க திமுக வெளியில் இருந்து ஆதரவு என்பதுபோன்று நேற்று இரவு முதல் ஒரு செய்தி ஓடிக்கொண்டிருந்த நிலையில், அதனை இரு கட்சித் தலைமையும் மறுக்காமல் இருந்தது மேலும் பல சந்தேகங்களுக்கு வழிவகுத்துள்ளது. இந்த பரபரப்புக்கு மத்தியில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி இன்று மாலை புதுச்சேரிக்கு சென்றது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அங்கு முகாமிட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏக்களை அவர் நேரில் சந்தித்து…

Read More

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமையன்று கனமழைக்கு பெய்ய  வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி சுமார் 1.5 கிமீ உயரத்தில் நிலவுகிறது. தெற்கு கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சதீவு பகுதிகளிலிருந்து தென்மேற்கு மத்திய பிரதேசம் வரை, உள் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா வழியாக சுமார் 0.9 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக நாளை வெள்ளிக்கிழமை (மே 8) முதல் மே 13-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர்,…

Read More

தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், இன்னும் ஆட்சியமைக்க ஆளுநரின் அழைப்பு கிடைக்காதது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பி உள்ளது. தமிழகத்தில் ஆட்சியமைக்க 118 எம்.எல். ஏ-க்கள் தேவை. தவெக 108 இடங்களை வென்றுள்ளதால், ஆட்சியை அமைக்க குறைந்தது 10 எம்எல்ஏக்களின் ஆதரவு அவசியமாகியுள்ளது. 5 எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சி விஜய் ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துவிட்டது. இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இடதுசாரி கட்சிகள் மற்றும் சில சிறு கட்சிகள், “மீண்டும் தேர்தல் வரக்கூடாது” என்ற அடிப்படையில் தவெகவுக்கு நிபந்தனையுடன் ஆதரவு அளிக்கத் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆதரவு கடிதம் நாளை வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களின் ஆதரவு குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆளுநர் முட்டுக்கட்டை இந்த நிலையில், நேற்று மாலை…

Read More

தமிழக அரசியல் கடந்த சில நாட்களாக அதிரடி திருப்பங்களை சந்தித்து வரும் நிலையில், தற்போது நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க விசிக மற்றும் இடதுசாரி கட்சிகள் ஆதரவளிப்பது உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று, தனிக்கட்சியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தாலும், முழுமையான பெரும்பான்மையை எட்ட தவெகவுக்கு இன்னும் சில எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. 5 எம்.எல். ஏ-க்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே ஆதரவு வழங்கிவிட்டது. இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகளிடன் விஜய் ஆதரவு கேட்டுள்ளதாக கூறப்படும் நிலையில்,  “மீண்டும் தேர்தல் வரக் கூடாது” என்ற அடிப்படையில் தவெகவுக்கு நிபந்தனையுடன் ஆதரவு வழங்க அக்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. நாளை ஆதரவு கடிதம் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை கடிதம் வாயிலாக வெளியாகலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக,…

Read More

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் எழுதப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகளுக்கு முந்தைய கணிப்புகளைத் தவிடுபொடியாக்கி, திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்த ஜோசப் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆளுங்கட்சியான திமுகவை வீழ்த்தி, ஒரு புதுமுகக் கட்சி இத்தகைய பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. திரைக்கவர்ச்சியா அல்லது அரசியல் மாற்றமா? தமிழக மக்கள் திரை நட்சத்திரங்களை ஆராதிப்பவர்கள், அவர்களுக்கு அரசியல் மகுடம் சூட்டுபவர்கள் என்ற மேலோட்டமான புரிதல் வெளிமாநிலத்தவர் மத்தியில் உண்டு. 1977-ல் எம்.ஜி.ஆர் பெற்ற வெற்றியும், அவருக்குப் பின் 1991-ல் ஜெயலலிதா பெற்ற வெற்றியும் இதற்குச் சான்றாகக் காட்டப்படுகின்றன. ஆனால், ரஜினிகாந்தின் அரசியல் வருகை முற்றுப்பெறாததும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியைக் கூடக் கைப்பற்ற முடியாமல் போனதும், வெறும் திரைக்கவர்ச்சி மட்டும் வெற்றியைத் தந்துவிடாது என்பதை நிரூபித்துள்ளன. அப்படியிருக்க, விஜய்யின் இந்த வெற்றிக்குக் காரணம் என்ன? திமுகவின் சறுக்கலும் அதிருப்தியும்…

Read More

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், மாநிலத்தின் அரசியல் வரைபடம் தலைகீழாக மாறத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளாக திமுக தலைமையில் நீடித்து வந்த ‘மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி’ தற்போது சிதறத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது. விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவு தவெக 108 இடங்களைப் பெற்றுள்ள நிலையில், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை அடைய அதற்கு இன்னும் 12 இடங்கள் தேவைப்படுகின்றன. ( திருச்சி கிழக்கு தொகுதியை விஜய் ராஜினாமா செய்வார். இன்னொரு எம்.எல். ஏ சபாநாயகர் ஆகிவிடுவார்) .இந்தச் சூழலில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தவெக-விற்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்டை மாநிலமான கேரளாவில் காங்கிரஸ் பெற்றுள்ள எழுச்சி, தமிழகத்திலும் அக்கட்சியைத் தனது பிடியை வலுப்படுத்தத் தூண்டியுள்ளது. குறிப்பாக, டெல்லி காங்கிரஸ் மேலிடம் ‘இந்தியா’ (INDIA) கூட்டணியில் இருந்து திமுகவைக் கழற்றிவிட்டு,…

Read More

தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்றுள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக), ஆட்சியைப் பிடிக்க இன்னும் 12 இடங்கள் தேவைப்படும் நிலையில், அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் அக்கட்சியைப் பிளவின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளது. இந்த அரசியல் சதுரங்கத்தின் பின்னணியில் பாஜகவின் மேலிடம் இருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. அண்டை மாநிலமான கேரளாவில் காங்கிரஸ் கட்சி மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தமிழகத்திலும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் ஆதரவுடன் ஒரு தவெக அரசு அமைவதை பாஜக விரும்பவில்லை. காங்கிரஸ் ஆதரவுடன் விஜய் ஆட்சிப் பொறுப்பேற்றால், அது தேசிய அளவில் எதிர்க்கட்சிகளுக்குப் பலம் சேர்க்கும் என டெல்லி கருதுகிறது. எனவே, தவெக-விற்குத் தேவையான ஆதரவை அதிமுக மூலம் வழங்கச் செய்து, ஒரு வலுவான “திராவிட-தேசிய” கூட்டணியை மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ உருவாக்க பாஜக அழுத்தம் கொடுத்து வருவதாகக்…

Read More

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகளைத் தொடர்ந்து, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில், “அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிபெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பொறுப்பேற்கவுள்ள தம்பி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக புதிய அரசுக்கும் என்னுடைய வாழ்த்துகள். தமிழர்களின் வரலாற்றுத்தாயகமான தமிழ்நாடு எனும் தாய்நிலத்தின் நலனுக்காகவும், உயர்வுக்காகவும் தொடர்ச்சியாகக் களப்பணியாற்றுவோம்.மண்ணுக்கும்,மக்களுக்குமான ஆக்கப்பூர்வ மாற்று அரசியலை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாய் நின்று நாம் தமிழர் கட்சி செயலாற்றும்” எனத் தெரிவித்துள்ளார்.

Read More

தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதில் எந்த ஒரு சிக்கலும் இருக்காது என தாம் கருதுவதாக தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் அளித்த பேட்டியில், ”முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள தம்பி விஜய் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். வரலாற்று பதிவை புதிய வரலாற்றை அவர் படைத்துள்ளார். இளைய சமுதாயம் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற கட்டாயத்தை அவர் ஏற்படுத்தியுள்ளார். அதனால் விஜய் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைப்பதில் எந்த ஒரு சிக்கலும் இருக்காது என நினைக்கிறேன். பத்து தொகுதிகள்தான் பத்தாமல் இருக்கிறது. அந்த பத்தும் எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம். அதனால் ஆட்சி அமைப்பதில் எந்த சிக்கலும் இருக்காது. பாசிச சக்திகள் என்று பாசமிகுந்த எங்களை தொடர்ச்சியாக முதலமைச்சர் கூறி வருகிறார். தோல்வியை தழுவி இருப்பவர்களை எந்தவிதத்திலும் நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. தோல்வியை தழுவியவர்களின் மனநிலை…

Read More